Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளில் சேர இறுதி கட்ட கலந்தாய்வு நாளை நடக்கிறது

ஊட்டி, ஜூன் 27: ஊட்டி அரசு கலை கல்லூரியில் 2024-25ம் கல்வியாண்டில் இளநிலை பாடப்பிரிவுகளில் சேர்வதற்கான இறுதி கட்ட கலந்தாய்வு நாளை 28ம் தேதி நடக்கிறது. இதில், கலந்தாய்வில் கலந்து இடம் கிடைக்காத, இதுவரை கலந்தாய்விற்கு அழைக்கப்படாத மாணவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர் ராமலட்சுமி கூறியிருப்பதாவது, ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வுகள் முடிந்து விட்ட நிலையில் சில துறைகளில் மட்டும் இன சுழற்ச்சி அடிப்படையில் சில இடங்கள் மட்டும் காலியாக உள்ளன. இன்னும் பல துறைகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து கலந்து கொள்ளாத மாணவர்கள் மற்றும் கலந்தாய்வில் கலந்து இடம் கிடைக்காத மாணவர்கள் நாளை 28ம் தேதி அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடக்கும் கலந்தாய்வில் பங்கு பெறலாம்.

மதியம் 12 மணி முதல் 2 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பித்து இதுவரை கலந்தாய்விற்கு அழைக்கப்படாதவர்கள் அதற்கான இன சுழற்ச்சி அடிப்படையில் கீழ்க்கண்ட துறைகளுக்கு மாணவர்கள் வரலாம். இதன்படி தாவரவியல் துறைக்கு பிசி., எம்பிசி., மற்றும் எஸ்சிஏ., மாணவர்களும், சுற்றுலாவியல், வரலாறு (தமிழ்வழி), இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம். வணிகவியல் (1 ஷிப்ட்) துறைக்கு வெக்கேஷ்னல் குரூப் படித்த பிசி., எம்பிசி., எஸ்சி., மற்றும் எஸ்சிஏ., மாணவர்களும், வணிகவியல் (2 ஷிப்ட்) துறைக்கு வெக்கேஷ்னல் குரூப் படித்த பிசி., எம்பிசி., மாணவர்களும், வணிகவியல் (ஐ.பி) துறைக்கு பிசி., மற்றும் எம்பிசி., மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

மின்னணுவியல் துறையில் உள்ள இடங்களுக்கு பிசி., எம்பிசி., எஸ்சி., மற்றும் எஸ்டி., மாணவர்களும், விலங்கியல் துறையில் உள்ள இடங்களுக்கு பிசி., எம்பிசி., எஸ்சி., மாணவர்கள் கலந்து கொள்ளலாம்கலந்தாய்விற்கு வரும் போது 10, 11, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்று, மாற்று சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக முதல்பக்கம் என அசல் மற்றும் 6 நகல்கள் எடுத்து வர வேண்டும். பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 5 எடுத்து வர வேண்டும். கட்டண விகிதம் மாநில பாடத்திட்டம் ரூ.4500ம், இதர பாட திட்டம் ரூ.5000 ஆகும். இவ்வாறு கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.