பேராவூரணி , பிப். 8: பேராவூரணி வட்டாரம் செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடற் புழு நீக்க விழிப்புணர்வு மற்றும் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள் தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் டாக்டர் கௌசிகா முன்னிலை வகித்தார்.
முகாமில், பேராவூரணி வட்டாரத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு குடற்புழு நீக்க விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில், மருந்தாளுனர் சரவணன், சமுதாய செவிலியர் மணிமேகலை, பகுதி சுகாதார ஆய்வாளர் அன்னக்கிளி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திருப்பதி, சுகாதார ஆய்வாளர் தவமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


