Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அரசின் திட்டப்பணிகளை ஆய்வு செய்து சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும்: ஆய்வு கூட்டத்தில் அலுவலர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்

திருச்சி, ஆக.2: இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் அனைத்து துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலையில் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் முதல்வாின் முகவாி திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இ.சேவை மையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடா்பாகவும், பட்டா மாறுதல் உட்பிரிவு, பட்டா மாறுதல் உட்பிரிவு இல்லாதவை, பட்டா மேல்முறையீடு ஆகிய மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாநகராட்சி, சீர்மிகு நகரத்திட்டம், மூலதன மானிய நிதி திட்டம், அம்ருத் 2.0 திட்டம், கலைஞா் நகா்புற மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் தொடா்பாக விரிவான ஆய்வு மேற்கொண்டார். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் கலைஞாின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள மனுக்கள் குறித்தும், இறுதி செய்யப்பட்ட பயனாளிகள் குறித்தும், பணி ஆணைகள் வழங்கப்பட்டது குறித்தும், பணிகள் தொடங்கப்பட்ட விபரங்கள் குறித்தும், மகாத்மாகாந்தி தேசிய வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், 15வது நிதி குழு மான்யம் நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், பணிகள் நடைபெறும் சாலை மற்றும் பாலங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவம், முதலமைச்சாின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம்-நம்மை காக்கும் 48 திட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு அரசால் வழங்கப்படும் சிகிச்சை விபரங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் புதுமைப்பெண் திட்டம், அங்கன்வாடி உட்கட்டமைப்பு உள்ளிட்ட விபரங்கள் குறித்து, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் சார்பில் முதலமைச்சாின் மண் வளம் காப்போம் திட்டம், உழவா் சந்தைகளின் செயல்பாடுகள், ஆவின் கூட்டுறவு சங்கங்களின் செயல்திறன் குறித்தும், தாட்கோ மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டு பணிகளை நல்ல முறையில் மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், அரசு செயலாளா் தரேஸ் அகமத், மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, எஸ்.பி வருண்குமார், மேயர் அன்பழகன், பெரம்பலூர் எம்பி அருண்நேரு, எம்எல்ஏக்கள் லால்குடி சௌந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின்குமார். முசிறி காடுவெட்டி தியாகராஜன், ரங்கம் பழனியாண்டி, மண்ணச்சநல்லூர் கதிரவன், மணப்பாறை அப்துல் சமது, மாவட்ட ஊராட்சித் தலைவா் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட நகா் ஊரமைப்புக் குழு உறுப்பினா் வைரமணி, டிஆர்ஓ ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தேவநாதன், அரசு துறை உயா் அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.