திருச்செங்கோடு, ஜூலை 25: திருச்செங்கோடு பழைய பஸ் நிலையத்தில், செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில், நேற்று நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து, அங்கு சாப்பிட்டு கொண்டு இருந்த மக்களிடையே கேட்டறிந்தார். பின்னர், உணவினை சாப்பிட்டு பார்த்த நகர்மன்ற தலைவர், உணவின் தரத்தை ஆய்வு செய்தார். சமையலுக்கு தேவையான பொருட்கள் போதிய அளவு இருப்பில் உள்ளதா, சமையலறை தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா, உணவு தயாரிக்க தேவையான பாத்திரங்கள், உபகரணங்கள் உள்ளதா என ஊழியர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, அலுவலர்கள் உடனிருந்தனர்.
+
Advertisement


