திருப்பூர், ஜூலை 8: திருப்பூர் தாராபுரம் சாலை அமராவதிபாளையம் பகுதியில் நடைபெறும் மாட்டுச் சந்தை பிரசித்தி பெற்ற சந்தையாக இருந்து வருகிறது.
நேற்று நடைபெற்ற மாட்டுச்சந்தைக்கு 868 மாடுகள் கொண்டுவரப்பட்டிருந்தது. இதில் கன்று 3,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரையிலும், காளை ரூ.29,000 முதல் ரூ.32,000 வரையிலும், எருமை ரூ.28 ஆயிரம் முதல் ரூ.34 ஆயிரம் வரையிலும், மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.