விருத்தாசலம், ஜூலை 14:தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் மற்றும் திட்டக்குடி பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார். இதற்காக வரவேற்கும் வகையில் அதிமுகவினர் பெண்ணாடத்தில் இருந்து திட்டக்குடி வரை வழிநெடுக டிஜிட்டல் பேனர்கள் அமைத்து இருந்தனர்.
ஆனால் அதிமுக கொடிகள் கட்டப்படவில்லை. இந்நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு, அவர்கள் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆங்காங்கே உள்ள அதிமுகவின் பதாகைகளுக்கு நடுவே பாஜக கொடிகளை அக்கட்சியினர் நட்டனர். இதனால் அதிமுக தொண்டர்கள் அதிக அளவில் செலவு செய்து பேனர்கள் வைத்துள்ளதாகவும், நாங்கள் வைத்துள்ள பதாகைகள் தெரியாதவாறு பாஜ கொடியை நட்டு வைத்து இருப்பதாகவும், அதிமுக தொண்டர்கள் குமுறினர்.


