விருதுநகர், மே 3: விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் மாவட்ட தலைவர் எஸ்தர் ராணி தலைமையில் நடைபெற்றது. காத்திருப்பு போராட்டத்தில் மே மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பினர்.
+
Advertisement


