Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அங்கக வேளாண்மை இலவச பயிற்சி

நாமக்கல், மே 20: நாமக்கல்லில், இயற்கை மற்றும் அங்கக வேளாண்ைம இலவச பயிற்சி 23ம் தேதி நடக்கிறது. இது குறித்து நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 23ம் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு, இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. பயிற்சியில், அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம், திட மற்றும் திரவ நொதித்த இயற்கை எரு பயன்படுத்துதல், அங்கக இடுபொருட்கள் தயாரிக்கும் முறைகள், பஞ்சகாவியம், ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம், மீன் அமிலம், பண்ணைக் கழிவுகளான ஆடு, மாடு தொழுவத்தின் கழிவுகள், களைகள், கோழிஎரு, தென்னை நார்கழிவு, பார்தீனிய களைச்செடிகள் ஆகிய எளிதில் மட்கக்கூடிய கழிவுகளை மறுசுழற்சி செய்ய, நுண்ணுயிரிகள் மற்றும் மண்புழுக்கள் பயன்படுத்துதல், இயற்கை முறை களை கட்டுப்பாடு குறித் செயல் விளக்கம் அளிக்கப்படும். இதில், விவசாயிகள், விவசாய பெண்மணிகள், ஊரக இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். முதலில் வரும், 40 விவசாயிகளுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 04286 -266345, 97877 88005 ஆகிய எண்கள் மூலமோ 22ம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.