கன்னியாகுமரி, நவ.15: அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இக்கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் அழகேசன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நீலபாலகிருஷ்ணன், புஷ்பரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் சண்முகவடிவு, உறுப்பினர்கள் அருண்காந்த், ராஜேஷ், பிரேமலதா, ஆரோக்கிய சௌமியா, பால்தங்கம் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
+
Advertisement


