துள்ளி வருகுது வேல்!
திருப்பம் தரும் திருப்புகழ்-14 வித விதமான விபரீத ஆசைகளாலும், எண்ணியவற்றை எல்லாம் பெறமுடியாத ஏக்கங்களாலும், எதிர்காலம் எப்படி இருக்குமோ என்னும் கவலையாலும், ஒவ்வொருவரின் மனமும் மாயையிலே சிக்கி நிலையில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறது. ‘கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும் என்றன் உள்ளத் துயரை ஒழித்தருளாய்!’ திருச்செந்தூரில் திருக்காட்சி தந்தருளும் திருமுருகப் பெருமானே! நீ தான் மாயைச்...
நேரடியாக கிரகங்களுக்கு பரிகாரம் செய்யலாமா?
கிரக பரிகாரங்கள் எல்லாம் ஆன்மிகத்தின் அடிப்படையில்தான் சொல்லப்படுகின்றன. சில ஜோதிடர்கள், ஆன்மிகம் வேறு ஜோதிடம் வேறு. ஜோதிடம் ஒரு கணித சாஸ்திரம். அதற்கும் ஆன்மிகத்திற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லுகின்றார்கள். சனிதோஷம் இருந்தால் திருநள்ளாறு சென்று சனிக்குப் பூஜை செய்ய வேண்டும் என்று பரிகாரம் சொல்லும் போதே ஆன்மிகம் வந்து சேர்ந்துவிடுகிறது. ஆனால், சிலர் இதைச்...
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
87. சரணாய நமஹ (Sharanaaya namaha) திருவாரூருக்கு அருகே அமைந்துள்ள திவ்யதேசம் திருக்கண்ணமங்கை. அங்கே தர்ச புஷ்கரிணிக் கரையில் அபிஷேகவல்லித் தாயாருடன் ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். திருமங்கை ஆழ்வார் பத்து பாசுரங்களால் இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். இப்பெருமாளைப் பெரும்புறக்கடல் என்று பெயரிட்டு அழைத்துள்ளார். அவ்வூரில் திருக்கண்ணமங்கை ஆண்டான் என்ற ஒரு திருமால் அடியார்...
கார்த்திகையில் கண் திறக்கும் நரசிம்மர்
ஆழ்வார்கள் பாடிய நூற்றெட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளசிம்மபுரம் எனப்படும் சோளிங்கர். திருக்கடிகை என்ற திருப்பெயரில் இவ்வூரை ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள். கடிகை என்பது ஒரு நாழிகைப் பொழுதைக் குறிக்கும். ஒரு நாழிகை இந்தத் திருத்தலத்தில் தங்கி இருந்தாலே, இத்தலம் முக்தியை அளிக்க வல்லது. அதனால் தான் திருக்கடிகை என்று இதனை ஆழ்வார்கள்...
தர்ம கர்மாதிபதி யோகம்
கேந்திரத்தின் அதிபதியும் திரிகோணத்தின் அதிபதியும் இணைவு ஏற்படுவதால் சிலருக்கு மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகும். ஏனெனில், ஒரு ஜாதகரை இயக்கும் மற்றும் அதிர்ஷ்டத்தை வழங்கும் அமைப்பாக இந்த கேந்திர திரிகோண அதிபதிகள் இருப்பர். இவர்கள் இணைவதால் ஜாதகரை சமூகத்தில் பெரிய மனிதராக கொண்டு செல்லும் அமைப்பை கிரகங்கள் ஏற்படுத்தும். இதற்கு தர்மகர்மாதிபதி யோகம் என்று சொல்வர். இந்த...
சகோதர கருத்து வேறுபாடு எப்படி வரும்? என்ன செய்தால் போகும்?
ஆன்மிகத்தைப் புரிந்து கொள்ளாமல் ஜோதிடத்தைப் புரிந்து கொள்வதோ ஜோதிடத்தின் நோக்கத்தைப் புரிந்து கொள்வதோ எளிதான காரியம் அல்ல. இன்றைக்கு ஜோதிடம் என்பதை தற்காலிக நிவாரணம் அல்லது பரிகாரம் என்ற கோணத்தில் மட்டும் பார்க்கிறார்கள். இதனால் எந்தப் பலனும் இல்லை. ஒரு சின்ன உதாரணத்தைச் சொல்லுகின்றேன். இப்பொழுது சர்க்கரை வியாதி எல்லா இடங்களிலும் இருக்கிறது சரி இந்த...
ஜோதிடத்தில் கர்ம தோஷம்
ஜாதகத்தை எடுத்துக் கொண்டு, ஊர் ஊராக பல ஜோதிடரிடம் பலன் பார்த்து எதுவும் நடக்காமல் விரக்தியில் இருப்பவர்கள் பலரை நாம் கண்டிருக்கலாம். இங்கு சொல்லப்படும் இந்த கர்ம தோஷம் எழுதிய எனக்கும் இருக்கலாம். இதை வாசிக்கும் உங்களுக்கும் இருக்கலாம். அப்படியிருந்தால், உணர்ந்து தெளியவே இந்த வழிகாட்டுதல். தோஷம் என்றால் குறைபாடு எனக் கொள்ளலாம். சென்ற பிறவியில்...
தெரிவது பிம்பமல்ல, பரம்பிரம்மம்!
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 82 (பகவத்கீதை உரை) ``நைவ கிஞ்சித்கரோமீதி யுக்தோ மன்யேத தத்வவித் பச்யஞ் ச்ருண்வன் ஸ்ப்ருசஞ் ஜிக்ரன்னச்னன் கச்சன் ஸ்வபஞ் ச்வஸன் (5:8) ப்ரலபன் விஸ்ருஜன் க்ருஹ்ணன்னுன்மிஷந் நிமிஷன்னபி இந்தரியாணீந்த்ரியார்த்தேஷு வர்தந்த இதி தாரயன் (5:9)’’ ‘‘அர்ஜுனா, ஆன்ம தத்துவத்தைப் பரிபூரணமாக உணர்ந்த ஒரு யோகி, என்றுமே தன் புலன்களின்...
மாலவனுக்கு ஆழி ஈந்த பெருமான்
கங்கைகொண்டசோழபுர சிவாலயத்து ஸ்ரீ விமானத்தின் மேற்குச் சுவரில் ஐந்தாவதாகத் திகழும் தேவகோஷ்டத்தில் சிவபெருமான் உமாதேவியோடு அமர்ந்தவாறு திருமாலுக்குச் சக்கரத்தை அளிக்கும் திருக்கோலக் காட்சி இடம் பெற்றுள்ளது. இம்மூர்த்தத்தினை ஆகம நூல்கள் விஷ்ணு அநுக்கிரக மூர்த்தி எனக் குறிப்பிடுகின்றன. இக்கோஷ்டத்திற்கு இருமருங்கும் சுவரில் நான்கு வரிசைகளில் சிறிய வடிவ புடைப்புச் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. மேலே இருபுறமும் விண்ணில்...