சில திவ்ய தேசங்கள் சில ஆச்சரியங்கள்...!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் தாமிர பரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. வைகுந்த நாதர் எனும் கள்ளபிரான் பெருமாள் கோயில். இத்தல பெருமாள் பூமியில் புதையுண்டு போய் பசு ஒன்று தனது பாலை தானாகவே இவர் மீது சுரந்து வெளி வந்தவர் என்பதால் அன்று முதல் இந்த பெருமாள் பாலாபிஷேகம் காண்கிறார். தினமும் பக்தர்களும் தங்களது பிரச்சினைகள் தீர...
புதனைப் பிடித்தால் புது வாழ்வு பெறலாம்!
“பொன் கிடைத்தாலும் கிடைக்கும், புதன் கிடைக்காது” என்பார்கள். புதன்கிழமை பொதுவாகவே மிகச்சிறந்த சுப நாளாகக் கருதப்படுகிறது. பொன் கிடைத்தாலும் கிடைக்கும் புதன் கிடைக்காது என்பதற்கு எத்தனையோ அர்த்தங்கள் சொல்வார்கள். ஆனால் ஒரு ஜாதகத்தில் புதன் வலிமையாக இருந்துவிட்டால், அவனுடைய புத்தி பழுதில்லாமல் இருக்கும். புத்தி பழுதில்லாமல் இருந்து விட்டால், அவனால் எந்தக் காரியத்தையும் சாதித்து விட...
துன்பம் யாவையும் தீர்த்து வைக்கும் பிள்ளையார்
வேதம் கேட்ட விநாயகர் திருவையாறு சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று, திருவேதிகுடு. மூலவர் வேதபுரீஸ்வரர் கர்ப்பக் கிரகத்தின் முன் மண்டபத்தில், வேத கோஷத்தைக் கேட்கும் அற்புதமான விநாயகர் தரிசனம் தருகிறார். வேதமுதல்வனின் கண்கள் மூடி, தலையைச் சாய்த்து ஊன்றிக் கேட்கும் பாணி அனுபவித்தால்தான் புரியும். தேவாரம் கேட்ட விநாயகர் பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருந்த பெருமான்,...
திருவண்ணாமலையும் 12 ஜோதிர்லிங்கங்களும்
தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது சிவபெருமானுக்கே பொருந்தும். தென்னாடுடைய இறைவனான சிவபெருமான், எந்நாட்டவர்க்கும் தலைவனாகவும் இருக்கின்றார். பாரத நாட்டிலே, வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே குமரி வரை பரந்து விரிந்த பூமியிலே, ஆயிரக்கணக்கான சிவத்தலங்கள் இருக்கின்றன. இந்தத் தலங்களைப் பல்வேறு விதமான தொகுப்புகளில் பிரிப்பார்கள். நாயன்மார்களால் பாடப்பட்ட தலங்களைப் பாடல் பெற்ற...
அடுத்த பிறவி உண்டா இல்லையா என்பதை எப்படித் தீர்மானிப்பது?
ஒரு ஜோதிட நண்பர், ஒரு நாள் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு கேள்வி கேட்டார். “மறுபிறவி எப்படி இருக்கும்? மறுபிறவி உண்டா? இல்லையா? இதுதான் கடைசிப் பிறவியா? போன்ற விஷயங்களை எல்லாம் ஜாதகத்தில் இருந்து தீர்மானிக்க முடியுமா?” என்று கேட்டார். நான் சொன்னேன்; “அது கஷ்டம். அதற்கான வாய்ப்பு ஜாதகத்தில் குறைவு’’ என்று சொன்னவுடன், அவர்...
ஆண்டி பெருத்த அண்ணாமலை!
ஞானியர்கள் விரும்பும் பூமியாக எப்போதும் திருவண்ணாமலை இருந்திருக்கிறது. அதனாலேயே, ‘‘ஆண்டி பெருத்த மலை அண்ணாமலை’’ என்பார்கள். ஏனெனில், வாழ்வைக் குறித்த கேள்வியுள்ளோர் அனைவரையும் திருவண்ணாமலை ஈர்த்திருக்கிறது. குரு என்கிற வார்த்தையின் முழுப் பொருளையும் நீங்கள் அருணாசலத்தில் காணலாம். ஏனெனில், எத்தனை எத்தனை மகான்களின் திருவடி பதிந்த புண்ணிய பூமி இது. இந்தியாவிற்கு ஆன்மிக பூமி என்கிற...
தீபத் திருவிழாவில் குதிரைச் சந்தை
திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் சிறப்புகளில் ஒன்றாகத் திகழ்வது இங்கு நடைபெறும் பாரம்பரிய குதிரைச் சந்தை. நூற்றாண்டுகள் பழமையான இந்த சந்தை, இன்றைக்கும் பழமை மாறாமல் தொடர்வது வியப்பாகும். வாகன வசதிகள் அவ்வளவாக இல்லாத காலங்களிலும், நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் இருந்து ஏராளமான மக்கள் திருவண்ணாமலைக்கு நடந்து வந்து, தீபத்தை தரிசித்துள்ளனர். இப்போதும், இந்த மரபை மாற்றாமல்...
அண்ணாமலையாருக்கு அரோகரா...
அக்னியே பரம்பொருள் பரம்பொருள் அக்னி ரூபமாகவே இருக்கிறான். எங்கும் சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான். நம் ஆன்மாவில் ஒளிவிடும் ஜோதியாக இருக்கின்றான். அந்த ஜோதியை உணர்வதே ஞானம். உணர முடியாததே இருட்டு எனும் அஞ்ஞானம். அந்த இருட்டை மாய்த்து பரம்பொருளை உணர வைப்பதே தீபம். ஒரு தீபம் ஏற்றினால் அது எல்லா திசையிலும் ஒளி பரவி...
ராமன் எத்தனை ராமனடி
ராம நாமாவை மூன்று முறை சொன்னால் அது நாராயணனின் ஆயிர நாமத்திற்கு சமானம் என்று சிவபெருமான் திருவாய் மொழிந்தருளினார். இந்த சம்பவம் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்திலேயே குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது. ``கேன உபாயேன லகுனா விஷ்ணோ: நாம ஸஹஸ்ரகம் பட்யதே பண்டிதை: நித்யம் ஸ்ரோதிம் இச்சாமி அஹம்பிரபோ’’ - என்ற பார்வதியின் கேள்விக்கு ஈஸ்வரன் இவ்வாறு விளக்குவதாக...