தலைமைப் பதவி தந்த சனி
சனி இருட்டைக் குறிக்கும் கோள் என்றாலும், சில நேரங்களில் அது வெளிச்சம் பட்டு பிரதிபலிக்கும் பொழுது அற்புதமாக இருக்கும். இருட்டில் வாழத் தெரிந்தவர்களுக்கு வெளிச்சத்தில் வாழ்வது மிக எளிது. சின்ன உதாரணத்தால் இதை நாம் தெரிந்து கொள்ளலாம். இருட்டின் பழகியவர்கள் மிக எளிதாக அவர்களுடைய செயலைச் செய்து விடுவார்கள். ஆனால், வெளிச்சத்தை மட்டுமே பார்த்துப் பழகியவர்கள்,...
உலக நன்மைக்காக ஒரு யாகம்!
நாளுக்கு நாள் இயற்கையின் கோரத்தாண்டவம் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மக்களுக்கு பொருளாதார பிரச்னைகள் இருந்துகொண்டே.. இருக்கின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்ட ``ஸ்ரீதிரிதண்டி ஸ்ரீமன் நாராயண ராமானுஜ சின்ன ஜீயர் ஸ்வாமிகள்’’, உலக நன்மைக்காக யாகம் நடத்த முடிவு செய்தார். ஏற்கனவே, மகான் ஸ்ரீ ராமானுஜரின் கொள்கைகளை உலக முழுவதிலும் பரப்பி வரும் சின்ன ஜீயர் ஸ்வாமிகள்,...
பிடி சுற்றிப் போடுதல்
திருமண நிகழ்வுகளைப் பற்றி முக்கூரார் சொல்வது இது. திருமணம் என்பது ஒரு சம்ஸ்காரம். ஆலயத்தில் விக்கிரக பிரதிஷ்டை செய்வது போல! வரன்களை அதாவது மணமக்களை கல்யாணம் என்னும் சம்ஸ்காரத்தால் பிரதிஷ்டை செய்கிறோம். விவாக மந்திரங்கள் எல்லாம் உத்தமமானவை. மங்களகரமானவை. மற்ற ஆடம்பரங்களைக் குறைத்துக் கொண்டு, வேத மந்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாகம் நடத்த வேண்டும். எப்படி...
செல்வம் வரும் வழியும் போகும் வழியும் முக்கியம்...
மனிதப் பிறவியில் செல்வம் ஒருவருக்கு இரண்டு வழிகளில் வரும். ஒன்று அதிர்ஷ்டமாக ,நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் தானே வர வேண்டிய காலத்தில் அது இஷ்டமாக வரும்.இன்னொன்று ஒருவருடைய முயற்சிக்குத் தகுந்தபடி வரும்.அது இஷ்டம் ஆக வருவதால் நம் கட்டுப்பாட்டில் அந்தச் செல்வம் இல்லை. அந்தச் செல்வம் நமக்கு பயன்படலாம் அல்லது பயன்படாமல் போகலாம்.உதாரணமாக ஒருவர்...
துரு துரா யோகம்
பலவிதமான யோகங்கள் இருந்தாலும், எப்பொழுதும் எல்லோராலும் புகழப்பட்டும் எல்லோரும் விரும்பும் அல்லது சந்திக்கும் மனிதராக இருப்பவர்கள் சிலர் மட்டுமே. இவரை மட்டும் ஏன் பலர் நாடிக் கொண்டே இருக்கிறார்கள் என்ற கேள்வியும் நமக்குள் எழும். அவ்வாறு எழும் கேள்வி இயல்புதான். அதுபோலவே, சிலர் எப்பொழுதும் தனிமை விரும்பியாகவும், தனிமை இவர்களை ஆட்கொண்ட நபர்களாகவும் இருப்பர். ஆனாலும்,...
மனனம் எனும் மகாசக்தி
நமது ஞான மரபில் சிரவணம், மனனம், நிதித்யாசனம் என்று மூன்று விஷயங்களை சொல்வார்கள். இந்த மூன்றும் உங்களின் ஆன்மிக வாழ்க்கையில் முக்கியமானவையாகும். அதில் முதலாவதாக சிரவணம் என்பது முதலில் காதால் குருவின் சொற்களை கேட்டல் என்று இங்கே எடுத்துக் கொள்வோம். அல்லது வாழ்வினைக் குறித்த தேடலில் உள்ளோர் அது குறித்த பழமையான நூல்களையும் குருமார்களின் சொற்களையும்...
குபேர நிதி யோகம்!
நாம் எல்லோரும் தடையில்லா பண வரவை மட்டும்தான் யோகம் என சிந்திக்கிறோம். யோகம் என்பதற்கு கிரக இணைவின் காரணமாக ஏற்படும் பலன்களை மட்டுமே காண்கிறோம். யோகம் என்ற சமஸ்கிருத வார்த்தையின் பொருள் யூஜ் என்பதாகும். யூஜ் என்பதற்கு இணைதல் அல்லது ஒன்றுடன் ஐக்கியமாதல் என்று பொருள். கிரக இணைதலே இதன் பொருள். கிரகங்களுக்கு ஏற்பதான் ஒரு...
சுக்கிரனை சாதாரணமாக எடை போட வேண்டாம்!
சுக்கிரனைப் பற்றித் தொடர்ந்து நாம் பார்த்து வருகின்றோம். சுக்கிரன் அற்புதமான கிரகம். ஆனால், அதே நேரம் ஆபத்தான கிரகம்கூட. சுக்கிரன் அதிக வலிமை பெறுவதோ, அதிக பலவீனமாக இருப்பதோ தவறு. இது பொதுவாக எல்லா கிரகங்களுக்கும் பொருந்தும் என்றாலும், சுக்கிரன் போகக்காரன் என்பதால் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. சுக்கிரன் வலுத்து பாதகாதிபதியோடு அல்லது அஷ்டமாதிபதியோடு சேர்ந்துவிட்டால், அதைவிட...
வெற்றியை பறைசாற்றும் காஹல யோகம்!
ஒருவன் வாழ்வில் எப்பொழுதும் வெற்றியை நோக்கி பயணிப்பது என்பது சாத்தியமா? என்ற சந்தேகம் நமக்கு எழும். ஆனால், நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்களில் சிலர் கீழ் நிலையில் இருந்து மேல் நிலையை நோக்கி வளர்வதை காணும் பொழுது ஆச்சர்யப்பட வைக்கும். இது கிரகங்களின் இருப்பும், கிரகங்களின் இயக்கமும்தான் இந்தப் பணியைச் செய்கிறது. அவர்கள் இருந்த இடமும்,...