கீவளூர் அஞ்சுவட்டத்தம்மன்
கீவளூர் அஞ்சுவட்டத்தம்மன் இறைவனே ஆனாலும் சரிதான், வதம் செய்தால் அதுவும் பாவம்தான். அப்படித்தான் சூரபத்மனை அழித்து வேறொரு உருவில் அவனைப் பெற்றாலும், ஏனோ ஒரு தவிப்பும் அமைதியின்மையும் கந்தனுக்குள் கொதித்தபடி இருந்தது. கீவளூர் எனும் இத்தலத்தைச் சுற்றிலுமுள்ள ஐந்து தலங்களிலும் பஞ்சலிங்க மூர்த்திகளை பூஜித்துவிட்டு, இறுதியில் இத்தலத்திலுள்ள கேடிலியப்பரை பூஜிக்கத் தொடங்கினார். அப்போதுதான் பார்வதி...
சௌபாக்யங்கள் தரும் ஸ்கந்தமாதா
நவ துர்கைகளில் ஐந்தாமவள் ஸ்கந்தமாதா என்ற துர்கை. சைல புத்திரியாக ஹிமவானுக்கு மகளாகப் பிறந்து, பிரம்ம சாரிணியாக கடுமையான தவம் புரிந்து, சந்திர கண்டாவாக மலர்ந்த இன் முகத்துடன் கூடியவளாக ஈசனை மணந்து, அண்டத்தை வயிற்றில் சுமக்கும் கூஷ்மாண்டா தேவியாகி, இப்போது கந்தனை ஈன்றெடுத்து அன்னையாகி இருக்கிறாள் ஜெகன்மாதா. பெண்ணின் பருவங்களும் நவ துர்க்கைகளும் பிறந்தவுடன்...
தொழில் எப்படி அமையும் தெரியுமா?
ஒரு ஜாதகத்தின் ஜீவன விஷயத்தை நிர்ணயம் செய்வதற்கு கிரகங்களும் பாவகங்களும் முக்கியம். “சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்” என்பதுபோல, ஜென்ம ஜாதக அமைப்புதான் ஒருவருக்கு என்ன அமைப்பில் படிப்பு அமையும், தொழில் அமையும், வருமானம் அமையும் என்பதைக் காட்டுகின்றது. அதைப் பயன்படுத்திக் கொண்டு நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். முன்கூட்டியே என்ன நடக்கும் என்பதை தோராயமாகத்...
வீட்டிற்குள் பஜனை செய்யலாமா?
?கடவுள் அன்பு மயமானவர் என்கிறார்கள். ஆனால், சில கடவுள்கள் உதாரணமாக காளி, துர்க்கை, நரசிம்மர், காட்டேரி, சாமுண்டி, அய்யனார் போன்ற சிலைகள் பயமுறுத்தும் தோற்றத்தில் உள்ளனவே! அன்பு மயமான கடவுள் இப்படி அச்சமூட்டும் உருவத்தில் ஏன் தோன்றுகிறார்கள்? - சுமதி சடகோபன், திருவாமாத்தூர். குழந்தைகள் தவறு செய்யக்கூடாது என்பதற்காக, ‘சாமி கண்ணைக் குத்திடும்’ என்று...
முருகப் பெருமானின் அபூர்வ ஆலயத் தகவல்கள்
*விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியிலிருந்து 17 கிமீ தொலைவில் உள்ள வெம்பக்கோட்டை அருகில் உள்ள துலுக்கன் குறிச்சி எனும் ஊரில் முருகப் பெருமான் வாழைமர முருகன் என்ற வித்தியாசமான பெயரில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள வாழைமர பாலசுப்ரமணியர் ஆலயத்தில் முருகப் பெருமான் வாழை மரத்துடன் அருள்பாலிக்கிறார். 150 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான இந்த கோயிலின் தலவிருட்சமும் வாழை மரம்தான்....
வைகாசியில் ஜொலிக்கும் வைபவங்கள்
வசந்தம் தவழும் காலம் வைகாசி மாதம். வைகாசி பிறந்தாலே ஆலயங்களில் நடைபெறும் உற்சவங்களுக்குக் கேட்கவா வேண்டும்? எங்கும் குதூகலமும் கொண்டாட்டங்களும்தான். அந்த வகையில் சில ஆலயங்களைக் காண்போம். *வைகாசி விசாகம் தமிழ் நாள்காட்டியின்படி முருகப் பெருமானின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் மற்றுமுள்ள அனைத்து முருகன் கோயில் களிலும் வைகாசி விசாகப் பெருவிழா...
ஆன்மீக தகவல்
கண்ணீர் பெருக்கும் கருடாழ்வார் சாதாரணமாக எல்லா வைணவத் தலங்களிலும் கருவறையில் இருக்கும் மூர்த்தத்தைவிட கருடாழ்வார் உயரம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சூலூர்பேட்டை - காளஹஸ்தி பாதையில் 5 கி.மீ. தொலைவில் உள்ள மன்னார் போளூர் கிருஷ்ண சுவாமி கோயிலில் கிருஷ்ண பகவானைவிட கருடாழ்வார் உயரம் அதிகம். ஆகவே, இவர் தரை...
அல்லூர் திருவடக்குடி மகாதேவர் கோயில்
ராஜகோபுர தரிசனம்! அல்லூர் திருவடக்குடி மகாதேவர் கோயில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவேரி நதியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பண்டைய சிவன் கோயிலாகும். இது ‘பஞ்சநதீஸ்வரர் கோயில்’ என்ற பெயராலும் அறியப்படுகிறது. இக்கோயில் சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் மற்றும் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் ஆகியோரால் கட்டப்பட்டுள்ளது. பழைய கல்வெட்டுகளில் இத்தலம் ‘திருவடக்குடி’ எனவும், இறைவன் ‘திருவடக்குடி...
அபூர்வ தகவல்கள்
* 108 நாகர்: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் ஒரு பாம்பு உடல் எங்கும் 108 சிறு நாகங்களை இடமாக கொண்ட மகா நாகத்தின் நடுவில் சிவலிங்கம் அமைந்துள்ளது. * கங்காளர்: அந்தகாசுரனின் இரத்தம் வற்றித் தோல் சுருங்கி எலும்புக் கூடாகிய உடலை சுமந்துக் கொண்டு மூவுலகிலும் திரிந்த கோலமே கங்காளர் என போற்றப்படுகிறது....