அழகிய ஆயிரங்கால் மண்டபம்!
சிவபெருமான் தமது சடையில் சூடிய பிறையினிடத்துள்ள அமிர்தமாகிய மதுவைத் தெளித்து, நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் “மதுரை” எனப் பெயர் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குள்ளேயும், கோயிலுக்கு வெளியேயும் பலமண்டபங்களில் முக்கியமாக பார்க்க வேண்டியதில் “ஆயிரம் கால் மண்டபம்” கலைகளின் பொக்கிஷமாக விளங்குகிறது. கோயில் நிர்வாகம் சார்பாக “அருங்காட்சியகமாகவும்” நடத்தப்பட்டு...
பாண்டுரங்க விட்டலா! பண்டரிநாத விட்டலா!
பண்டரீபுர வாசியான பாண்டுரங்கப் பெருமானிடம் அளவு கடந்த பக்தியுடன் விளங்கிய பக்தர்கள் அநேகம் பேர். அவர்களிலே சேற்றிலே மலர்ந்த செந்தாமரை போல தோன்றி விளங்கியவள் கானோ பாத்திரை.‘மங்களபட்’ என்னும் ஊரிலே, இசைவேளாளர் வகுப்பிலே சியாமா என்றொரு பெண்மணி தோன்றி வசித்து வந்தார். இசையிலும் நடனத்திலும் நல்ல தேர்ச்சி பெற்றவள். இவளை விஞ்சக் கூடியவர் அந்தப் பகுதியிலேயே...
கலை நுணுக்கம் மிக்க நந்தி
அரக்கோணம் அருகிலுள்ள திருத்தலம் தக்கோலம். அங்குள்ள கங்காதீஸ்வரர் ஆலயத்தில் கீழே சுரக்கும் ஊற்று நீர் நந்தியின் வாய் வழியாக ஆலயத்தினுள் இறங்கி கருவறையைச் சுற்றிப் பாயும். அதே நீர் மீண்டும் நுழைவு வாயிலின் கீழே சென்று மற்றொரு நந்தி மூலம் வெளியேறி ஒரு குளத்தில் சென்று அடைகிறது. இந்தக் கலை நுணுக்கம், பார்ப்போரைப் பரவசப்படுத்துகிறது. கோடாலிகருப்பூர்...
ராசி பலனைப் பார்க்கும் பொழுது கவனிக்க வேண்டிய விஷயங்கள்?
ராசிபலன் என்பது சுவாரஸ்யமான விஷயம். அநேகமாக எல்லா தமிழ் பத்திரிகைகளும் அது வார இதழோ அல்லது தினசரியோ, ராசிபலன் வெளியிடாமல் இருப்பதில்லை. தமிழ் பத்திரிகைகள் மட்டும் அல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மொழி பத்திரிகைகளிலும் ராசி பலன் பிரதானமாக இடம் பெறும். உலக அளவில் ஆங்கில பத்திரிகைகளிலும்கூட இந்த விஷயம் உண்டு. நான் பலமுறை இதை...
ராகு - கேது ஐந்தில் இருந்தால் குழந்தை பிறக்காதா?
ஜாதக பலன்களைக் கணக்கிடுவதில் சில நுட்பங்கள் உண்டு. ஒவ்வொரு கிரகமும் என்னவெல்லாம் பலன்களைத் தன்னகத்தே கொண்டு இருக்கின்றன என்கின்ற பட்டியலை முதலில் அறிய வேண்டும். அதைப் போல, ஒரு குறிப்பிட்ட ராசிக்குள் (பாவம் என்று சொல்வார்கள்) என்னென்ன விதமான நன்மை தீமைகள் அடங்கியிருக்கின்றன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கிரகத்துக்கும்...
திருநாங்கூர் திருப்பதி
இந்த 108 திருத்தலங்களிலும் இழையோடும் சில அழகான செய்திகளைப் பார்க்கலாம். சில திவ்ய தேசங்கள் இரண்டு இடத்தில் இருக்கும். ஆனால் ஒரே திவ்ய தேசமாகக் கருதப்படும். சில இடங்களில் அருகாமையில் உள்ள கோயில்கள் அனைத்தும் சேர்த்து ஒரு தொகுப்பாகக் கருதுவார்கள். திருநெல்வேலியில் ஆழ்வார்திருநகரியைச் சுற்றி இருக்கக் கூடிய 9 திருத்தலங்களை ஒன்றாகச் சேர்ந்து “நவதிருப்பதி”...
பழனி முருகனின் அதிசயங்கள்
அறுபடை வீடுகளில் பழனி முருகன் கோயில் மூன்றாவது படை வீடு ஆகும். பழனியில் முருகப்பெருமானை மூன்று கோலங்களில் தரிசிக்கலாம். பெரிய நாயகி கோயிலில் மயில் வாகனம் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்திலும், திரு ஆவினன் குடியில் மயில்மீது அமர்ந்து குழந்தை வடிவிலும், மலைக் கோயிலில் கையில் தண்டத்துடனும் காட்சி தருகிறார். ஒரே தலத்தில் இவ்வாறு முருகனின்...
கும்ப ராசி ஆண் குடும்பத்தின் வேர்
கும்பம், மகரம் ஆகிய இரண்டும் சனியின் ஆதிக்கத்தில் உள்ள ராசிகள் என்றாலும் இரண்டு ராசிகளுக்குமான பண்புகள் வேறுபட்டு விளங்கும். கும்பராசி ஆண்கள் சுதந்திர மனப்பான்மை உடையவர்கள். போர்க் குணம் படைத்தவர்கள். தனித்தன்மையோடு விளங்குவார்கள். பேர் புகழுக்கு ஆசைப்படாதவர்கள். உறவுக்கும் நட்புக்கும் மதிப்பு கொடுப்பவர்கள். எப்போதும் கூட்டுக் குடும்பத்திலும் நண்பர் குழுவிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்....
யோகினி கோயில்
ஆலயம்: சௌசத் யோகினி மந்திர் (64 யோகினி கோயில்), ஹிராபூர், ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 15 கி.மீ. காலம்: பொ.ஆ.864ல் பௌமா வம்சத்தின் இரண்டாம் சாந்திகரதேவா என்றழைக்கப்படும் லோனபத்ரா மன்னரின் ராணி ஹிராதேவியால் கட்டப்பட்டது.ஆதிசக்தியின் தெய்வீக அம்சமாக கருதப்படும் 64 ‘யோகினி’கள், ஒவ்வொருவரும் தனித்துவமான தன்மைகளைக் கொண்டவர்கள். யோகினி சிற்பங்கள் பெரும்பாலும் ஒரு விலங்கு...