கிரகங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உங்களை எடுக்கக் காத்துக் கொண்டிருக்கின்றன

ஜோதிட ஆய்வுகள் சுகமானவை. ஒரு தனி நபர் ஜாதகத்துக்கு பலன் சொல்வதைவிட அந்த ஜாதகத்தின் கிரக நிலைகளை, நகர்வுகளை (தசாபுத்தி, கோள் சாரம்) அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங் களோடு சேர்த்துப் பார்க்கும் பொழுது நமக்கு சில சுவாரஸ்யமான உண்மைகள் புரியும். பொதுவாகவே ஜோதிடர்களில் ஆய்வு செய்பவர்கள் உண்டு. பலன் சொல்பவர்கள் உண்டு. ஆய்வு செய்து...

நம்மோடு கூட வரும் பெட்டி!

By Porselvi
18 Apr 2025

பிறப்பும் இறப்பும் உயிர்களுக்கே உரியவை. உயிர்கள் தங்கள் வினைகளுக்கு ஏற்ப ஏதேனும் ஒரு உடலை ஏற்றுக்கொண்டு, வினைப் பயனை அனுபவிப்பதற்காக, இந்தப் பூமியில் பிறக்கின்றன. வினைகளை அனுபவிக்கின்றன. நிறைவாக இறக்கின்றன. இந்தப் பிறப்பும் இறப்பும் ஒரு சுழலாக அமைந்திருக்கிறது. முடி வற்ற இந்தச் சுழற்சியிலிருந்து மீள்வதற்காகத் தான் பிறவிகளில் உயர்ந்த பிறவியான மனிதப் பிறவியும், அந்த...

வானியல் சொல்லும் உலகியல் ஜோதிடம்

By Porselvi
16 Apr 2025

பிரபஞ்சத்தின் சக்தி அளப்பரியது. பால் வீதிகள், நட்சத்திர மண்டலங்கள், அதில் உள்ள நட்சத்திரங்கள், அந்த நட்சத்திரங்களைச் சுற்றி வருகின்ற கோள்கள் என்ன, பல பொருள்கள் விண்ணில் மிதக்கின்றன. அண்ட சராசரம் என்ற சொல் நம்முடைய ஆன்மிக இலக்கியத்தில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. அண்டம் என்பது மிகப் பிரமாண்டமான வான்வெளி என்று வைத்துக்கொள்ளலாம். சரம் என்பது அசைவது. அசரம்...

மோட்சமா? மறுபிறப்பா?

By Nithya
04 Apr 2025

சென்ற வாரம் 12 ஆம் பாவத்தின் தன்மை குறித்து சில விஷயங்களைப் பார்த்தோம். இந்த இதழில், மேற்கொண்டு அந்த பாவத்தின் நன்மை தீமைகள் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோம். பனி ரெண்டாம் பாவத்தை ஏன் “மோட்ச பாவம்” என்று சொல்கிறார்கள்? நாம் ஏற்கனவே சொன்னது போல, வினைகளால் ஏற்படும் பிறவியும், அந்தப் பிறவியின் முடிவில்...

பன்னிரண்டாம் பாவத்தில் மறைந்திருக்கும் ரகசியங்கள்

By Nithya
28 Mar 2025

ஒருவருடைய ஜாதகத்தின் ராசி சக்கரம் 12 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இருப்பதை நாம் அறிவோம். இந்த பாகங்கள் ஒவ்வொன்றும் ஏறக்குறைய 30 பாகைகள் அளவைக் கொண்டதாக இருக்கும். 12 பாகங்களுக்கும் சேர்த்து 360 பாகைகள் அதாவது ஒரு முழு வட்டமாக அமையும். மேல்நாடுகளில் ராசி சக்கரம் வட்டமாகவே இருக்கும். ஆனால் நம்முடைய ஜோதிடத்தில் அதை 12 கட்டங்களாக...

காரடையான் நோன்பு

By Lavanya
21 Mar 2025

பெண்கள் மட்டுமே மேற்கொள்ளக் கூடிய நோன்புதான் காரடையான் நோன்பு. இதனால் மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம். மாசி மாதம் ஏகாதசியை ஒட்டி வரும் இதனை காமாட்சி நோன்பு என்றும் கூறுவர். சாவித்திரி தனது கணவன் சத்தியவான், நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று இந்நோன்பினை கடைபிடித்தாள். வெற்றியும் கண்டாள்.காஞ்சி காமாட்சி கம்பா நதி தீர்த்தத்தில்...

திருமண யோகத்தில் ஐந்தாம் இடத்தை முக்கியமாகப் பார்க்க வேண்டும்!

By Nithya
13 Mar 2025

ஒரு ஜாதகத்தின் வலிமையான இடங்களில் ஒன்று ஐந்தாம் இடம். இதை “பூர்வ புண்ணிய ஸ்தானம்” என்று சொல்வார்கள். இந்த உலகத்திலே நன்மை தீமைகளை அனுபவிக்க வேண்டும் என்று சொன்னால் பூர்வ புண்ணியம் இருந்தால்தானே முடியும். ஜாதகத்தை எழுதும்போது ‘‘பதவி பூர்வ புண்ணியானாம்” என்ற வாக்கியத்தை எழுதித்தான் ஜாதகத்தை குறிக்கிறோம். திரிகோண ஸ்தானங்களில் மத்திம திரிகோண ஸ்தானம்...

கும்ப ராசிக்காரர்கள் தொழிலில் உச்சம் அடைவர்

By Nithya
12 Mar 2025

கும்ப ராசியின் அதிபதி சனி. இந்த ராசியில் அவிட்டம் மூன்றாம், நான்காம் பாதமும், சதயம் நான்கு பாதங்களும், பூரட்டாதியில் முதல் மூன்று பாதங்களும் அமைகின்றன. அவிட்ட நட்சத்திரத்துக்காரரின் அடையாளம் செவ்வாய் குணமுடையதாக இருக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரரின் அடையாளம் அல்லது தொழில் குரு தொடர்புடையதாக இருக்கவும் வாய்ப்புண்டு. சதயத்தில் பிறந்தவர்கள், ராகு தொடர்பான தொழில் அடையாளத்தை பெற்றிருப்பர்....

காட்சி தந்து ஆட்சிபுரியும் வேலன்

By Porselvi
05 Mar 2025

குன்று இருக்கும் இடமெல்லாம் முருகன் குடி கொண்டு இருப்பான் என்பது நமது ஆன்றோர்களின் வாக்கு. ஆம் உண்மைதான். தமிழ் கடவுளான முருகன் குன்று இருக்கும் இடமில்லாமல் பல இடங்களில் குடி கொண்டு மக்களுக்கு அருள்புரிகிறார். அவற்றுள் சிலவற்றை நாம் பார்ப்போம்.கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் மணவாளநல்லூர், அ/மி கொளஞ்சியப்பர் திருக்கோயில். இங்கு முருகன் சுயம்பு...

குழந்தையின் ஜாதகத்தைக் கணிக்கும் போது இப்படி பலன் சொல்லாதீர்கள்

By Nithya
04 Mar 2025

ஜோதிட பலன்களைப் பற்றி புரிந்து கொள்ளாதவர்கள் பலர் இருக்கிறார்கள். அதைவிட தவறாகப் புரிந்து கொண்டவர்கள் அதிகம். தவறாகப் புரிந்து கொண்டவர்களால் ஏற்படும் விபரீதம் ஜோதிட சாஸ்திரத்திற்கே விரோதம் என்று சொல்லலாம். பரிகாரம் என்ற பெயரில் செய்யப்படும் சில நிகழ்வுகளால் சில குடும்பங்கள் படுகின்ற துன்பங்கள், தற்கொலை வரைகூட போய் விடுகிறது. ஒருவனுக்குச் சாதகமான பலன்களை மட்டும்தான்...