இந்த வார விசேஷங்கள்
18-10-2025 - சனிக்கிழமை தேவகோட்டை மணிமுத்தாறு விசு உற்சவம் ஐப்பசி முதல்நாளான இன்று, தேவகோட்டை நகர் மற்றும் பிற பகுதி சுவாமிகள் எல்லையில் உள்ள விருசுழியாறு என்றழைக்கப்படும் மணிமுத்தாறில் தீர்த்தம் கொடுக்க சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில், நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கைலாசநாதர் கோயில், கோதண்டராமஸ்வாமி கோயில், ரங்கநாத பெருமாள் கோயில், கிருஷ்ணர் கோயில்,...
தீபாவளியின் தத்துவம்
பாரத தேசத்தில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகைக்குப் பின்னாலும் ஆழமான தத்துவார்த்தம் உண்டு. முதல் பார்வையில் சமூக ஒற்றுமையும், கொண்டாட்டத்திற்கான நாளாகவும் பண்டிகை இருக்கும். ஆனால், ஏன் இதை கொண்டாடுகின்றோம் என்று புராணங்கள் அதை கதையாக சொல்லும்போது கூட என்னவோ பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள் என்று நகர்ந்து விடுவோம். ஆனால், ஆர அமர உட்கார்ந்து தேடுதலை மேற்கொண்டால்...
எத்திக்கும் கொண்டாடும் தித்திக்கும் தீபாவளி
வண்ணமயமான ஒளியோடு மகிழ்ச்சி மத்தாப்புகள் பூத்து வெடிக்க, மங்கலங்கள் பொங்கிடும் ஒரு மகத்தான பண்டிகை தீபாவளி. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகை பல புதுமையான அனுபவத்தை நமக்குத் தருகிறது. அந்தப் பண்டிகை பற்றிய சில செய்திகளை காண்போம். மகிழ்ச்சியின் தொகுப்பே தீபாவளிப் பண்டிகை தீபாவளி பண்டிகை அற்புதமானது. காலம் காலமாகக் கொண்டாடப் படுவது. மகிழ்ச்சியின் ஒட்டுமொத்தமான...
கேதார கவுரி விரத மகிமை
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அனுசரிக்கப்படும் மிக முக்கியமான விரதங்களில் ஒன்று ‘கேதார கௌரி விரதம்’. ‘கேதாரம்’ என்றால் இமயமலைச் சாரல். ‘கேதாரீஸ்வரர்’ என்றால், இமயத்தில் உள்ள கைலாயத்தில் வாழும் ஈஸ்வரன் என்று பொருள். ‘கௌரி’ என்பது அன்னை பராசக்தியைக் குறிக்கும். சிவபெருமானின் அருளைப் பரிபூரணமாகப் பெற, அன்னை பராசக்தியே மேற்கொண்ட விரதம் என்பதாலேயே, இது ‘கேதார...
ஸ்ரீரங்கநாதருக்கு தீபாவளி சீர்!
தீபாவளி என்றாலே மாப்பிள்ளைகளுக்கு கொண்டாட்டம்தான். புது மாப்பிள்ளை என்றால் கேட்கவே வேண்டாம். அதில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் ஸ்ரீரங்கநாதரும் அடங்குவார். ஒவ்வொரு வருடமும் ஸ்ரீரங்கநாதர் தீபாவளி கொண்டாடும் விதம் அலாதியானது. தீபாவளிக்கு முதல் நாள் மாலை எண்ணெய் அலங்காரம் மேளதாளத்தோடு பெருமாளுக்கு சாத்தப்படும். மேலும், கோயில் சிப்பந்திகளுக்கும் நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள்...
ஐப்பசியில் அடைமழை! வளப்படுத்திடுமா நம் வாழ்வை?
காலங்காலமாக, தமிழக மக்களிடையே, "ஐப்பசியில் அடை மழை...!" என்றொரு மூதுரை நிலவிவருவது அனைவரும் அறிந்ததே!!அதாவது, தமிழகத்தில் மாரிக்காலம் (மழைக்காலம்) ஆரம்பமாகிறது என்பது பொருள். வானியலில், காலம் காலமாக பல அறிஞர்களை உலகிற்கு அளித்த பெருமை தமிழகத்திற்கு உண்டு!நவகிரகங்களுக்கும் சக்தியளிக்கும் பெருமை பெற்றுள்ள சூரிய பகவான், அவரது நீச்ச ராசியான துலாம் ராசியைக் கடக்கும் சுமார் ஒரு...
மலர்களிலே பல நிறம் கண்டேன்
இந்த இடங்களுக்குச் செல்லும் பொழுது வெறுங்கையோடு செல்லக் கூடாது என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். ஏதாவது கைப்பொருளைக் கொண்டுதான் செல்ல வேண்டும்.ஒரு வீட்டில் குழந்தையைப் பார்க்கச் செல்லுகிறோம். ஏதேனும் ஒரு பொருளோடுதான் செல்ல வேண்டும். கண்ணன் பிறந்த பொழுது, அவனைப் பார்ப்பதற்காக தேவர்கள் வந்தார்களாம். அவர்கள் சும்மா வரவில்லை. ஆளுக்கு ஒரு பொருளோடு வந்தார்களாம். “மாணிக்கம் கட்டி...
அம்பிகையிடம் வைத்த முதல் கோரிக்கை
``Money is not everything. But everything needs money’’. பணம் என்பது எல்லாம் அல்ல. ஆனால், இந்த உலகத்தில் எல்லாவற்றுக்கும் பணம் தேவைப்படுகிறது. இது ஒரு முரண். அபிராமி அந்தாதியில் ஒரு பாசுரம். ``தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம்...
அருள்மிகு அவிநாசி அப்பர் திருக்கோயில்
நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் அவிநாசி வந்த பொழுது ஒரு வீதியின் வழியே சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு வீட்டில் பூணூல் கல்யாணம் நடந்து கொண்டிருந்தது. அதற்கு எதிர் வீட்டில் துக்கம் அனுசரித்து வீடு சோகமாக இருந்தது. அப்பொழுது அங்கு விசாரித்த பொழுது, ஒத்த வயதுடைய இரு சிறுவர்கள் இருந்தனர். அதில், ஒரு சிறுவனுக்கு பூணூல் கல்யாணம்...