செல்வங்களை கொட்டிக் கொடுக்கும் கௌபேரி யோகினி
லலிதா சஹஸ்ர நாமத்தில், `‘மஹா சதுஷ் ஷஷ்டி கோடி யோகினி கன சேவிதா’’ என்ற நாமம் வரும். அதாவது அம்பிகையை சதா, அறுபத்தி நான்கு கோடி யோகினிகள் சேவித்துக் கொண்டே அதாவது வணங்கிக்கொண்டே இருக்கிறார்கள். அம்பிகையின் ஆணையை சிரமேற்கொண்டு செய்து முடிக்கும் தேவிகள்தான் யோகினிகள் ஆவார்கள். அதிக சக்தி வாய்ந்தவர்களும்கூட. அபூர்வமான பல சக்திகளை உடையவர்கள்...
மூலத்தை நோக்கச் செய்யும் நாமம்
சென்ற இதழின் தொடர்ச்சி… இரண்டு நாமங்களான - மூலமந்த்ராத்மிகா - மூலகூடத்ரயகலேபரா என்பதை பார்க்க இருக்கின்றோம். ஒரு மகானின் முன்பு போய் நிற்கிறோம். நமக்குத் தெரியாமல் முற்பிறவியெல்லாம் சொல்கிறார். ஜென்ம ஜென்மாந்திரங்கள் சொல்லுவார். இனி நடக்கப் போவதையும் சொல்வார். இது சித்தி மூலமாக அடையப்படுவதல்ல. இது அவர்களின் சுபாவம். ஏனெனில், காலத்தை கடந்துவிட்டதால் மூன்று காலங்களான...
திருமண தோஷத்தை நீக்கும் ஹனுமந்தா!
தார்வாடு ஓர் அறிமுகம் கர்நாடக மாநிலத்தின் பிரபலமான இடங்களில் ஒன்று ஹூப்ளி. இங்கிருந்து 17 கி.மீ., தூரம் பயணித்தால், தார்வாடு என்னும் ஊர் இருக்கிறது. பெங்களூருக்கும் புனேவிற்கும் இடையிலான பிரதான தேசிய நெடுஞ்சாலை, தார்வாடை கடந்துதான் சென்றாக வேண்டும். ``கர்நாடக பல்கலைக் கழகம்’’ இங்குதான் உள்ளது. இப்பல்கலைக்கழகம், கர்நாடக மாநிலத்தின் ஒரு முக்கிய பல்கலைக் கழகமாகும்....
உங்கள் செயலில் மட்டும் கவனம் செலுத்துங்கள்!
ஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம். அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ஆற்றினை கண்டதும், இதுவே கன்றை ஈனுவதற்குச் சரியான இடம் என்று அந்த மான் அங்கு சென்றது. அப்போது, கருமேகங்கள் சூழ்ந்தன. மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன....
இடர் களைவான் இடைக்கழி வேலவன்
திருவிடைக்கழி எனும் இத்தலத்தை சோழ நாட்டுச் செந்தூர் (திருச்செந்தூர்) என்கிறார்கள். சங்க நூல்களில் இத்தலம் குராப்பள்ளி என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கே சிவாலய அமைப்பில் அமைந்த முருகன் கோயில் பேரருள் புரிகிறது. முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்ய சிவபெருமானிடம் ஆசி பெற்றுச் சென்ற தலம் இது. மேலும் சூரசம்ஹாரத்திற்குப் பின் தேவர்களை மண்ணுலகிலிருந்து தேவருலகிற்குச் செல்ல...
கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா..!
*திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் குத்துக்கல் வலசை என ஒரு இடம் உள்ளது. இங்கு 1300 ஆண்டுகள் பழமையான முருகன் கோயில் உள்ளது. இங்கு முருகனை அமர்ந்த கோலத்தில் காணலாம். *குமரகிரி ஸ்ரீ தன்டாயுதபாணி திருக்கோயில் (சேலம்). இதனை குட்டி பழனி என அழைக்கின்றனர்! இங்கு திரிசத அர்ச்சனை என ஒன்று உண்டு. அடிபட்டவர்களுக்கும் விபத்தில்...
திசையெல்லாம் ஒளிவிடும் திகட்டாத தீபாவளியும் கந்த சஷ்டியும்
தீபாவளி - 20.10.2025, கந்தசஷ்டி சூரசம்ஹாரம் - 27.10.2025. 1. முன்னுரை ஒரு வருடத்திற்கு 365 நாட்கள். அதில் சுமார் 100 நாட்களுக்கு மேல் பண்டிகைகளும், உற்சவங்களும், விரதங்களும், விழாக்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. எல்லாப் பண்டிகைகளிலும், எல்லா மக்களும் ஒருசேரப் பங்கெடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதில்லை. ஆனால், தீபாவளிப் பண்டிகை மட்டும் இந்தியா முழுக்க...
மகாலட்சுமி உதித்த நாள்
பாற் கடலில் அவதரித்த மகாலட்சுமி, தன்மனம் கவர்ந்த மகாவிஷ்ணுவிற்கு மாலை சூட்டினாள், திருமார் பன் (ஸ்ரீவத்ஸன்) என்ற பெயர் பெருமானுக்கு ஏற்படும் வண்ணம் எம்பெருமாள் இதயத்தில் இடம்பிடித்தாள். மகாலட்சுமி பாற்கடலில் அவதரித்த நாள்,எம் பெருமானை மணந்தநாள் ‘தீபாவளி’ திருநாள். பார்வதி தேவி விரத பலன் கவுதம் முனிவர் கூறியபடி பார்வதி தேவி, கேதார கவுரி விரதம்...
ஆனந்தம் பொங்கும் அற்புத தீபாவளி
இருள் நீக்கும் ஒளித் திருவிழா தித்திக்கும் தீபாவளி வந்துவிட்டது எத்திசையிலும் இந்தத் தீபாவளிப் பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தீபம் என்றால் ‘‘விளக்கு’’ என்று பொருள். ‘‘ஆவளி’’ என்றால் ‘‘வரிசை’’ என்று பொருள். வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். சில பண்டிகைகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கொண்டாடப்படுகின்ற...