தடைகளை தகர்க்கும் மஹாகணேசர்
காமேஸ்வர முகாலோக கல்பித ஸ்ரீ கணேஸ்வரா… இந்த நாமங்கள் இரண்டும் நமக்கு என்ன காண்பித்துக் கொடுக்கிறது? பண்டாசுர சைன்னியத்தை சக்தி சைன்னியம் அழிக்கும்போது அஞ்ஞான விருத்திகளெல்லாம் சம்ஹரிக்கப்படுகிறது என்று பார்த்தோம். பண்டபுத்திரர்களை பாலா சம்ஹாரம் செய்யும்போது ending of time நடக்கிறது என்று பார்த்தோம். விஷங்கனை மந்த்ரிணி சம்ஹாரம் செய்யும்போது, நமக்குள் இருக்கும் சூட்சுமமாக...
பாதுகையின் பெருமை
“ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்” என்று பெருமாளின் பாதுகையை கொண்டாட ஆயிரத்தெட்டு ஸ்லோகங்களை அருளிய ஸ்வாமி தேசிகன், அந்த ஸ்லோகங்களை 32 பத்ததிகளாக பிரித்திருக்கிறார். பத்ததி என்பதற்கு இரண்டு விதமான அர்த்தங்கள் உண்டு. முதல் அர்த்தம், எடுத்து வைக்கும் அடி வைப்பு. பெருமாள் தன்னுடைய திருவடியை ஒரு அடி எடுத்து வைத்தால் அதை ஒரு பத்ததி...
கோயில் எனும் அகத் திறவுகோல்!
பழம் பெரும் கோயில்களை தேடி ஓடுகின்றோம். இறைவனை தரிசித்து மகிழ்கின்றோம். அர்ச்சனைகள் செய்து திருப்தியுறுகின்றோம். கோயிலின் வரலாற்றுத் தொன்மையினை அறிந்து வியப்புறுகின்றோம். அங்கு அருளும் இறைவனின் புராணப் பெருமையினை ஒருவாறு அறிந்து புரிந்து கொள்கிறோம். அத்தலத்தினைக் குறித்து அடியார்களால் இயற்றப்பட்ட பாடல்களை படித்துப் பார்த்து அந்த ஆழம் தோய்ந்த சொற்களால் கண்களில் நீர்வழிய நிற்கின்றோம்....
இலவசமானாலும் விலையேறப்பெற்றது
இங்கிலாந்து தேசத்தை சேர்ந்த ஒரு மிகப்பெரும் செல்வந்தர் இயேசுவை புதிதாய் அறிந்திருந்தார். தேவ கிருபையால், தான் பெற்ற இரட்சிப்பு (புதுவாழ்வு) எப்படிப்பட்டது என்று தன் மக்களுக்கு உணர்த்த விரும்பினார். அவருக்கு அநேக வீடுகள் இருந்தன. அவருடைய வீடுகளில் வாடகைக்கு இருந்தவர்களும், கடன்பட்டவர்களும் காணும்படியாக ஒரு அறிவிப்பை பொது இடத்தில் ஒட்டியிருந்தார். அதில் ``அடுத்த நாள்...
ஆன்மிகமும் ஜோதிடமும்
ஜோதிட சாஸ்திரம் என்பது அதி அற்புதமான சாஸ்திரம். ஆனால் கடல் போன்ற அந்த சாஸ்திரத்தில், கூழாங்கற்களைப் போல சில அற்ப உலகியல் பலன்களை நாம் தேடிக் கொண்டிருக்கிறோம். காரணம் அதுதான் பிரதானமாக இருக்கிறது. எனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்? எப்பொழுது திருமணம் நடக்கும்? அதிகமான பணம் எனக்குக்கிடைக்குமா? கோடீஸ்வர யோகம் கிடைக்குமா? மிகப்பெரிய பதவியை...
கருக்கினில் அமர்ந்த அம்மன்
காஞ்சிபுரத்தில், தெற்கு பட்டடை கிராமத்தில் கிராம தேவதையாக அமர்ந்துள்ள அன்னையின் திருப்பெயர் ‘அருள்மிகு காஞ்சி கருக்கினில் அமர்ந்த அம்மன்’. மகேசனிடம் சாகா வரம் பெற்ற மகிஷாசுரன், (முனிவர்களையும் பக்தர்களையும் பயமுறுத்தி அழிக்க நினைத்ததால், அவனை சம்ஹாரம் செய்ய அனைத்து சக்தி தெய்வங்களும் சேர்ந்து ஒரே சக்தியாக உருவெடுத்ததாக வரலாறு.பனை மரத்தை ‘கருக்கு மரம்’ என்றும்...
அதிசயங்கள் நிறைந்த அபூர்வ பெருமாள் வடிவம்
‘‘இரண்டு தேர்க்கால்களில் வெங்கடேசப் பெருமாள்’’ திருவேங்கடம் என்கிற திருமலையில் பகவான் ஏழுமலையான் ‘நின்ற வண்ணமுள்ள பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். இந்த ஏழுமலையானைப் போல் தெற்கேயும் வகுளகிரி என்ற சிறிய மலைமேல் அருளும் வெங்கடேசப் பெருமாள் சில வித்தியாசங்களுடன் எழுந்தருளியிருக்கிறார். வகுளகிரி என்பது திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலியிலிருந்து சுமார் ஒன்பது மைல் தூரத்தில் திருச்செந்தூர் போகும் பாதையில்...
இச்சையிலிருந்து விடுபடு!
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 99 (பகவத்கீதை உரை) அர்ஜுனனுடைய மனசைப் படிக்கிறார் கிருஷ்ணன். அவன் இரட்டை மனசுக்காரன். தராசு முள்ளாக நிலை நிற்க முடியாதவன். இந்த யுத்தத்தின் விளைவைத் தன் மனப்போக்கில் ஊகிக்கிறான். மனமோ அவனை அலைக்கழிக்கிறது. ஜெயித்தால், வெற்றிச் சாதனையையும் மீறி, ‘சொந்த பந்தங்களையே கொன்று குவித்து அடைந்த சாதனைதானே இது!’...
இந்த வார விசேஷங்கள்
12.7.2025 - சனி திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் தேர் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைணவத் திருத்தலம். இந்த திருத்தலம் விருதுநகர் சிவகாசி அருகே அமைந்துள்ளது. திருத்தங்கல் பெருமாள் கோயில் ‘தங்காலமலை’ மீது அமைந்துள்ளது. பெருமாளின் தேவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகியோரிடையே யார் உயர்ந்தவர்...