துக்கம் ஏன் வருகிறது?
‘‘மனமது செம்மையானால்...” என்று தொடங்கும் வரிகள் அகத்தியர் சித்தர் பாடல்களில் காணப்படும் புகழ்பெற்ற வரிகளாகும். இதன் முழுப் பொருள், ‘‘மனம் ஒரு நிலைப்பட்டு தூய்மையானால், மந்திரம் ஜெபிக்க வேண்டிய அவசியமில்லை; வாயுவை உயர்த்தவும், மூச்சைப் பிடித்து நிறுத்தவும் வேண்டியதில்லை” என்பதாகும். அதாவது, மனதைச் செம்மையாக்கி, ஒருமுகப்படுத்தினால், வெளிப்படையான தியானப் பயிற்சிகளும், சடங்குகளும் தேவையில்லை என்பது இதன்...
?காதுகுத்தி கடுக்கண் போடுகின்றார்கள், என்ன காரணம்?
- கணேசன், சென்னை. காதுமடலில் குத்துவது என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்கிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். நல்ல விஷயங்களை மட்டுமே காது கேட்க வேண்டும் என்பதற்கான ஒரு கௌரவமாகவே, காதுக்கு பொன்னாலான கடுக்கன் (கர்ண பூஷணம்) போடுகிறார்கள். நல்ல விஷயங்களைக் கேட்கின்ற காதுக்கு செய்யப்படும் உபசாரம் அது. ?கடைசி நினைவு பகவானைப் பற்றியதாகவே இருக்க...
வெற்றியை தருவார் திருச்செந்தூர் ஜெயந்திநாதர்
திருச்செந்தூர் சூரசம்ஹாரம் - 27-10-2025 கந்த சஷ்டி கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை முருக பக்தர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் முருக...
இறுதி வேதம் அருளப்பட்டது ஏன்?
வேதங்களில் இறுதியானது திருக்குர்ஆன். இறுதி வேதம் எதற்காக அருளப்பட்டது? இந்தக் கேள்விக்குத் திருமறையே தெளிவாக விளக்கம் அளித்துள்ளது. நேர்வழி பெறுவதற்காக: இறைவனிடமிருந்து பேரொளிமிக்க, சத்தியத்தைத் தெளிவாக எடுத்துரைக்கின்ற திருமறை உங்களிடம் வந்துள்ளது. இறைவனின் உவப்பை விரும்பு வோர்க்கு இறைவன் அதன்மூலம் சாந்திக்கான வழிகளைக் காண்பிக்கின்றான். மேலும், அவன் தனது கட்டளையைக் கொண்டு, இருள்களிலிருந்து அவர்களை வெளியாக்கி...
இந்த வார விசேஷங்கள்
25-10-2025 - சனிக்கிழமை தூர்வா கணபதி (சதுர்த்தி) விரதம் பிள்ளையாருக்கு உரிய விரதங்களில் மிகச்சிறந்த விரதம் சதுர்த்தி விரதம். இந்த சதுர்த்தி ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையில் ஒரு முறையும் தேய்பிறையில் ஒரு முறையும் வரும். ஒவ்வொரு சதுர்த்தி விரதத்திற்கும் தனித்தனிச் சிறப்பு உண்டு. இன்றைய (25.10.2025) சதுர்த்தியில் கடைப்பிடிக்க வேண்டிய விரதம்தான் தூர்வா கணபதி விரதம்....
பயணியின் பிரார்த்தனை!!
பயணம் இன்று மிகமிக எளிதாகிவிட்டது என்கிறார்கள். எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. முன்பு மாட்டு வண்டியில் போய்க் கொண்டிருந்த மனிதன் இன்று அதி விரைவுத் தொடர் வண்டியிலும் வானூர்தியிலும் பறக்கிறான். வேகத்தில் தான் வேறுபாடே தவிர அலுப்பிலும் சலிப்பிலும் களைப்பிலும் எல்லாக் காலத்துப் பயணங்களும் ஒன்று போலத்தான் இருக்கின்றன.கோவையில் இருந்து நண்பர் ஒருவர் சென்னை...
சரணாகதியை நோக்கி...
ஆன்மிக வாழ்க்கை என்பது வழிபாடு மட்டுமல்ல. பூஜை செய்தலோ, கண்களை மூடி தியானம் செய்வது மட்டுமல்ல. ஆன்மிக வாழ்க்கை என்று தனியாக ஒரு வாழ்க்கை இல்லை. நாம் இப்போது வாழும் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பார்க்கும் பார்வையை தருவதுதான் ஆன்மிகம். இன்னும் சொல்லப்போனால், லௌகீகம், ஆன்மிகம் என்றெல்லாம் பிரித்துக் கொள்கிறோம். உண்மையில் அப்படிப்பட்ட எந்தப் பிளவும் தேவையில்லை....
ஸ்ரீசக்ரம் அமைந்த திருத்தலங்கள்
காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்ரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன. லலிதா ஸஹஸ்ரநாமத்தை இயற்றிய வசின்யாதி வாக்தேவதைகள் எண்மரும் இதில் எழுந்தருளியுள்ளனர். *பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புனுகு, சந்தனம் சாத்தப்படுகிறது. *கும்பகோணம்&மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. *புதுக்கோட்டை புவனேஸ்வரி...
பிள்ளையார் கண் திறந்தாரா, இல்லையா?
பல வருடங்களுக்கு முன் காஞ்சி மகா பெரியவர், தமிழகத்தின் தென்பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பம்… தஞ்சாவூர், திருச்சி, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், திண்டுக்கல், சோழவந்தான் ஆகிய ஊர்களுக்கு விஜயம் செய்துவிட்டு, மதுரையை நோக்கித் தன் பரிவாரங்களுடன் வந்துகொண்டிருந்தார் ஸ்வாமிகள். வழி நெடுகிலும் உள்ள கிராம மக்கள், தங்கள் குழந்தை குட்டிகளுடன் திரளாக வந்து ஸ்வாமிகளை தரிசித்து, ஆசிபெற்றுச்...