2021ல் யூடியூப் கணக்கை நீக்கிய விவகாரம்: அதிபர் டிரம்புக்கு ரூ.212 கோடி இழப்பீடு வழங்குகிறது கூகுள்!
கலிஃபோர்னியா: அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்பின் கணக்கை நீக்கிய விவகாரத்தில் அவருக்கு ரூ.212 கோடி இழப்பீடு வழங்க கூகுளின் யூடியூப் நிறுவனம் ஒப்பு கொண்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக உள்ள டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி...
காசா போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்ச திட்டங்களை வெளியிட்ட அதிபர் ட்ரம்ப்: பல்வேறு நாடுகள் இதை வரவேற்று அறிக்கை வெளியீடு
வாஷிங்டன்: காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், இடைக்கால பாலஸ்தீன நிர்வாகத்தை நிறுவுவதற்கும் அமெரிக்க ஆதரவுடன் ஒரு புதிய திட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் முன்வைத்தனர். வெள்ளை மாளிகை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இரு தலைவர்களும் நம்பிக்கையை வெளிப்படுத்தினர், ஆனால் ஒப்பந்தத்தை நிராகரிப்பது...
காசா போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்ச திட்டங்களை வெளியிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
வாஷிங்டன்: காசா போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 20 அம்ச திட்டங்களை வெளியிட்டார். மத்திய கிழக்கு நாடுகள், மேகத்திய நாடுகள், இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகள் இதை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் இதை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அமைதி ஒப்பந்தத்தை ஆய்வு செய்துவருவதாக ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது. ...
லண்டனில் காந்தி சிலை சேதம் வெட்கக்கேடான செயல்: இந்திய தூதரகம் கடும் கண்டனம்!
லண்டன்: லண்டனில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் டவிஸ்டோக் சதுர்க்கத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. தியான நிலையில் இருப்பதை போன்று அமைக்கப்பட்டுள்ளதோடு, ஒரு அடையாளமாக இந்த சிலை போற்றப்படுகிறது. இந்நிலையில், இந்த காந்தி சிலை நேற்று மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிலை...
போர் முடிவு: டொனால்ட் ட்ரம்பை சந்தித்த இஸ்ரேல் பிரதமர்!
வாஷிங்டன்: காசா போரை முடிவுக்குக் கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது என வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹுவை சந்தித்துப் பேசிய பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.. ...
மியான்மரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம்!
நய்பிடாவ்: மியான்மரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது. நாகாலாந்து, மணிப்பூர், அசாம் மாநிலங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. ...
நைஜீரியாவின் லாகோஸ் தலைநகரில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி
நைஜீரியா: நைஜீரியாவின் லாகோஸ் தலைநகரில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். தீ விபத்தை அடுத்து 4வது மாடியில் உள்ள கண்ணாடியை உடைத்துக் கொண்டு பலரும் தப்பிக்க முயன்றனர். 4வது மாடியில் இருந்து கண்ணாடியை உடைத்து தப்பிக்க முயன்றபோது பலருக்கும் கை, கால்கள் முறிந்தன. ...
கரூரில் 41 பேர் பலி சீனா இரங்கல்
பீஜிங்: தமிழ்நாட்டின் கரூரில் நடிகர் விஜய்யின் அரசியல் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கியதில் 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன் நேற்று கூறுகையில்,கரூரில் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத்...
வியட்நாமை தாக்கிய புவலாய் சூறாவளி: 9 பேர் பலி
ஹனோய்: வியட்நாமை புவலாய் சூறாவளி தாக்கியது. வியட்நாம் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. வீடுகள், பள்ளிகள், அரசு அலுவலக கட்டிடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல மாகாணங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மேற்கூரைகள் சேதமடைந்து உடைந்து விழுந்தன. புயல் மற்றும் மழை காரணமாக ஏற்பட்ட...