இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் ? டிரம்ப்-நெதன்யாகு பேச்சில் முடிவு

டெல்அவிவ்: இஸ்ரேலுக்கும், ஹமாசுக்கும் இடையேயான போர் 2 ஆண்டுகளை நெருங்குகிறது. இஸ்ரேல் ராணுவத்தின் கடுமையான தாக்குதல்களால் காசாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளும் தடைமட்டமாக்கப்பட்டு விட்டன. ஹமாஸின் பிடியில் உள்ள பணய கைதிகளை விடுவிக்கும் வரை ஓயமாட்டேன் என்று சூளுரைத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளார். இந்த போரில் பலி எண்ணிக்கை...

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்ப்பு: கனடா அதிரடி

By Karthik Yash
29 Sep 2025

ஒட்டாவா: இந்தியாவை சேர்ந்த லாரன்ஸ் பிஸ்னோய் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். தற்போது குஜராத் மாநிலம் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2022ல் பஞ்சாபி பாடகர் சித்து மூஸேவாலா படுகொலை,மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கி கொலை, பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கிசூடு சம்பவங்களுக்கு பிஸ்னோயின் கும்பலை சேர்ந்த ரவுடிகள்...

அமெரிக்க சர்ச்சில் துப்பாக்கி சூடு நடத்தி தீ வைப்பு: 4 பேர் பலி, 8 பேர் காயம்

By Karthik Yash
29 Sep 2025

மிச்சிகன்: அமெரிக்காவில் தேவாலயத்திற்குள் டிரக்கை ஓட்டிச் சென்று புகுந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி தீ வைத்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவில் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. வடக்கு கரோலினா, டெக்சாஸ் மாகாணங்களைத் தொடர்ந்து, மூன்றாவது பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. மிச்சிகன்...

அதிபர் டிரம்ப் அதிரடி வெளிநாட்டில் தயாரிக்கும் சினிமாக்களுக்கு 100% வரி

By Karthik Yash
29 Sep 2025

நியூயார்க்: அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘ஒரு குழந்தையிடமிருந்து மிட்டாய் திருடுவது போல, திரைப்பட தயாரிப்பு வணிகம் அமெரிக்காவிடமிருந்து மற்ற நாடுகளால் திருடப்பட்டுள்ளது. இந்த நீண்டகால முடிவடையாத பிரச்னையை தீர்க்க,...

உதுமானிய பேரரசிடம் இருந்து இஸ்ரேல் நகரை மீட்ட இந்திய வீரர்கள்: ஹைபா நகர மேயர் புகழாரம்

By Karthik Yash
29 Sep 2025

ஹைபா: இஸ்ரேலின் துறைமுக நகரான ஹைபா பண்டைய காலத்தில் உதுமானிய பேரரசின் கீழ் இருந்து வந்தது. முதலாம் உலக போரின் போது உதுமானிய பேரரசுக்கும், பிரிட்டிஷ் படைகளுக்கும் கடும் சண்டை நடந்து வந்தது. இதில் ஹைபாவில் நடந்த சண்டையில் இந்திய படைகள் கடும் போர் புரிந்தன. கடைசியாக 1918 செப்டம்பர் 23ம் தேதி ஹைபா பிரிட்டிஷின்...

எனது கருத்துகளை ரசிகர்கள் மீது திணிக்க மாட்டேன்: நடிகர் அஜித் பரபரப்பு பேட்டி

By Karthik Yash
29 Sep 2025

பார்சிலோனா: தமிழ் படவுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார், தற்போது கார் பந்தயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பார்சிலோனாவில் நடந்த 24H என்டியூரன்ஸ் ரேஸில் கலந்துகொண்ட அவர், பிறகு அளித்த பரபரப்பு பேட்டி: கடந்த 2002ல் நான் திருமணம் செய்தபோது, ​​சில காலம் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தேன். ஷாலினி ஒவ்வொரு நிகழ்விலும் என்னுடன் இருந்தார்....

கரூர் நெரிசலுக்கான காரணத்தை ஆராய ஹேமமாலினி எம்பி தலைமையில் 8 பேர் கொண்ட எம்பிக்கள் குழு: பாஜ தேசிய தலைவர் நட்டா அறிவிப்பு

By Suresh
29 Sep 2025

சென்னை: கரூர் தவெக கூட்ட நெரிசலுக்கான காரணத்தை ஆராய ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட எம்பிக்கள் குழுவை பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். இது தொடர்பாக பாஜ தலைமையகம் வெளியிட்ட அறிவிப்பு: பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கரூரில் தமிழக வெற்றிக்கழகம் பிரசாத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த...

பிரபல நிழலுலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் குழுவை தீவிரவாத இயக்கமாக அறிவித்தது கனடா அரசு

By Neethimaan
29 Sep 2025

ஒட்டாவா: பிரபல நிழலுலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் குழுவை தீவிரவாத இயக்கமாக கனடா அரசு அறிவித்தது. இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி காலிஸ்தான் உள்ளிட்ட சில பிரிவினைவாத அமைப்புகள் வெளிநாடுகளில் இயங்கி வருகின்றன. இதுபோன்ற காலிஸ்தான் தலைவர்களில் முக்கியமானவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். இந்தியாவில் பல்வேறு நாச வேலைகளில் தொடர்புடைய இவர் கனடா நாட்டு...

பழங்குடியின மாணவி கூட்டு பலாத்காரம்; வங்கதேசத்தில் வெடித்தது இனக்கலவரம்: 3 பேர் பலி; ஊரடங்கு உத்தரவு அமல்

By Neethimaan
29 Sep 2025

டாக்கா: வங்கதேசத்தில் பழங்குடியின மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மூண்ட இனக்கலவரத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தின் தென்கிழக்கு மலைப்பகுதியான சிட்டகாங் பகுதியில், பூர்வகுடி பழங்குடியினருக்கும், வங்காள மொழி பேசும் மக்களுக்கும் இடையே நீண்டகாலமாக இனப் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 1997ம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான...

வெளிநாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து திரைப் படங்களுக்கும் அமெரிக்காவில் 100% வரி விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.

By Arun Kumar
29 Sep 2025

  வாஷிங்டன்: வெளிநாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து திரைப் படங்களுக்கும் அமெரிக்காவில் 100% வரி விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். திரைப்பட தயாரிப்பு தொழில் அமெரிக்காவிடம் இருந்து திருடப்படுகிறது எனவும், ஹாலிவுட் தலைநகர் கலிஃபோர்னியா இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் ட்ரம்ப் குற்றச்சாட்டு. இந்த வரி எப்படி அமல்படுத்தப்படும்? என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை....