20 வயதில் நாட்டின் அதிபரான இளைஞர்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் டேனியல் ஜாக்சன், 'வெர்டிஸ்' என்ற மிகச் சிறிய நாட்டை உருவாக்கி அந்நாட்டின் அதிபராகியுள்ளார். குரோஷியாவிற்கும், செர்பியாவிற்கும் இடையிலான ஆற்றின் குறுக்கே 125 ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் அமைந்துள்ளது. இது ஒரு உரிமை கோரப்படாத இடம் என கூறப்படுகிறது. இங்கு 400 பேர் மட்டுமே வாழ்கின்றனர். கொடி, அரசியலமைப்பு,...
இந்தியாவை பகைத்துக் கொள்ளக் கூடாது: குடியரசுக் கட்சித் தலைவர் நிக்கி ஹாலே
ரஷ்யாவிடம் அதிக கச்சா எண்ணெய் வாங்கும் நாடான சீனா மீதான வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, இந்தியா மீது மட்டும் கூடுதல் வரி விதிப்பது சரியல்ல. இந்தியாவைப் பகைத்துக் கொண்டு சீனாவுக்கு சலுகை வழங்கக் கூடாது. இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டுமே தவிர, சிதைக்கக் கூடாது என குடியரசுக் கட்சித் தலைவர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்....
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 135 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 135 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தாக்குதலில் 135 பேர் இறந்ததாகவும் 771 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. காசாவில் பட்டினியால் நேற்று ஒரேநாளில் 5 பேர் இறந்த நிலையில் பலி எண்ணிக்கை 193-ஆக உயர்ந்துள்ளது. ...
கானா நாட்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 அமைச்சர்கள் உயிரிழந்ததாக அறிவிப்பு
கானா நாட்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 அமைச்சர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் கானா நாட்டின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல்துறை அமைச்சர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். ...
அமலில் உள்ள வரியுடன் 25+25% கூடுதலாக உயர்வு இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா வரிப்போர்: அதிபர் டிரம்ப் நடவடிக்கையால் பரபரப்பு, ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதால் கடும் அதிருப்தி
நியூயார்க்: இந்தியா மீது மேலும் 25 சதவீத வரி விதித்தது மூலம் இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் 2ம் முறையாக பதவி ஏற்ற நாள்முதலே இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஒரு புறம் எனது நண்பர்...
ஊழல் குற்றச்சாட்டு மகிந்தா ராஜபக்சே அண்ணன் மகன் கைது
கொழும்பு: ஊழல் வழக்கில் மகிந்தா ராஜபக்சேவின் அண்ணன் மகனும் முன்னாள் அமைச்சருமான சசீந்திரா ராஜபக்சே கைது செய்யப்பட்டார். இலங்கையில் கடந்த 2022ம் ஆண்டு அரசுக்கு எதிராக எழுந்த போராட்டங்களையடுத்து அதிபராக இருந்த மகிந்தா ராஜபக்சே பதவியை விட்டு விலகினார். முன்னாள் அதிபர் மகிந்தாவின் 2 மகன்கள் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த...
சிக்குன்குனியா பிடியில் சிக்கி தவிக்கும் சீனா: 7,000 பேருக்கு நோய் பாதிப்பு
தைபே: சிக்குன்குனியா என்பது ஏடிஎஸ் கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோய். டெங்குவை போலவே சிக்குன்குனியாவும் கடும் காய்ச்சல், மூட்டுவலி, உடல் அரிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இளைஞர்கள், முதியவர்கள், ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை சிக்குன்குனியா எளிதாக பாதிக்கிறது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில தினங்களாக சிக்குன்குனியா வேகமாக பரவி வருகிறது. முக்கியமாக சீனாவின் தெற்கு...
ரஷ்யாவிடம் இருந்து உரங்கள், ரசாயனங்களை அமெரிக்கா வாங்குவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது: அடித்து சொல்லும் அதிபர் டிரம்ப்
மாஸ்கோ: ரஷ்யாவிடமிருந்து உரங்கள், ரசாயனங்களை அமெரிக்கா வாங்குவது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே இந்திய பொருள்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என கடந்த வாரம் தெரிவித்த நிலையில், இருதினங்களுக்கு முன் 25% வரியை மேலும் உயர்த்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்....
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியது ரஷ்யா : மீண்டும் பனிப்போர் காலத்து பயங்கரமா?
மாஸ்கோ: பனிப்போர் கால பதற்றத்தைத் தணிக்க 1987ம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே கையெழுத்தான ‘நடுத்தர தொலைவு அணுசக்தி ஏவுகணைகள் ஒப்பந்தம்’ (ஐஎன்எஃப்), உலக ஆயுதக் கட்டுப்பாட்டின் மூலக்கல்லாகக் கருதப்பட்டது. ஆனால், ரஷ்யா தடை செய்யப்பட்ட ஏவுகணையை உருவாக்கியதாகக் கூறி, 2019ல் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. தொடர்ந்து, அமெரிக்கா ஏவுகணைகளை...