சிகாகோவில் உச்சக்கட்ட பதற்றம்; போலீஸ் வாகனம் மீது கும்பல் தாக்குதல்: துப்பாக்கிச்சூட்டில் பெண் படுகாயம்
சிகாகோ: சிகாகோவில் போலீசாரின் வாகனத்தை வழிமறித்து தாக்கிய பெண் சுடப்பட்ட சம்பவம், நகரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ பகுதியில் அரசு மேற்கொண்டு வரும் ‘ஆபரேஷன் மிட்வே பிளிட்ஸ்’ என்ற தீவிர குடியேற்ற அமலாக்க நடவடிக்கையால் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தேசிய பாதுகாப்புப் படையை பயன்படுத்த வேண்டும் என அதிபர் டிரம்ப்...
காசாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் ராணுவம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக ட்ரம்ப் தகவல்!
காசாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் ராணுவம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல் தெரிவித்துள்ளார். பணயக்கைதிகள் விடுதலை செய்ய ஒப்புக்கொண்ட ஹமாஸ் அமைப்பு, அதை உடனடியாக செய்ய வேண்டும் என்றும், மேலும் தாமதம் ஆகுவதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
இஸ்ரேலுக்காக தாக்குதல் நடத்திய 6 பேர் மரண தண்டனை ஈரானில் நிறைவேற்றம்
துபாய்: இஸ்ரேலுக்காக தாக்குதல் நடத்தியதாக கைதான 6 பேரின் மரண தண்டனையை ஈரான் நிறைவேற்றி உள்ளது. இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் 12 நாட்கள் போர் நடந்தது. அப்போது குஜெஸ்தான் மாகாணத்தில் உள்ள கோர்ரம்ஷஹர் பகுதியில் குண்டுவெடிப்புகள் நடத்தியதாகவும், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினரை கொன்றதாகவும் 6 பேரை ஈரான் அரசு...
போதைப்பொருள் விவகாரம் கொலம்பியா அதிபருக்கு அமெரிக்கா கடும் கண்டனம்
ஐக்கிய நாடுகள் சபை: நியூயார்க்கில் ஐநா பொதுச்சபையின் வருடாந்திர ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற கொலம்பியா அதிபர் கஸ்டாவோ பெட்ரோ, அமெரிக்காவின் போதைப் பொருள் தடுப்பு பணிகளை கடுமையாக விமர்சித்தார். மேலும், நியூயார்க்கில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற அவர் அதிபர் டிரம்ப் சொல்வதை ராணுவ வீரர்கள் கேட்கக் கூடாது என பேசினார்....
உக்ரைனில் ரயில்கள் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்: 30 பேர் படுகாயம்
கீவ்: உக்ரைனில் பயணிகள் ரயில்கள் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். உக்ரைனில் உள்கட்டமைப்புகளை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, நேற்று பயணிகள் ரயில்கள் மீது தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்....
எச்1பி விசா கட்டண உயர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு
வாஷிங்டன்: அமெரிக்காவில் எச்1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக அதிபர் டிரம்ப் உயர்த்தி விட்டார். இதை எதிர்த்து அமெரிக்காவில் உள்ள சுகாதார நிறுவனங்கள், மத நிறுவனங்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட கூட்டமைப்பு ஒன்று, டிரம்ப் அறிவித்துள்ள எச்1பி விசா கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்....
அமெரிக்காவில் 4வது வாக்கெடுப்பிலும் நிதி மசோதா தோல்வி
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் அடுத்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும். இந்த மசோதா 3 முறை தோற்றதால், அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் தற்போதைய நிலை வரும் நவம்பர் 21 வரை தொடர எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து 4வது முறையாக...
பாலியல் குற்றச்சாட்டுகளில் அமெரிக்க ராப் பாடகர் சீன் டிடிக்கு 4 ஆண்டு சிறை: நீதிபதி அருண் சுப்பிரமணியன் தீர்ப்பு
நியூயார்க்: அமெரிக்காவின் பிரபல ராப் இசைப் பாடகர் சீன் டிடி (55). ரசிகர்களால் கோம்ப்ஸ் என்ற புனைப் பெயருடன் அறியப்படும் இவர், தனது தோழிகள் மற்றும் ஆண்களை பாலியல் தொழிலாளர்களாக நாடு முழுவதும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டு ஓராண்டாக சிறையில் உள்ளார். இந்த வழக்கை விசாரித்த மான்ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அருண்...
உள்கட்சி வாக்கெடுப்பில் வெற்றி ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகாய்ச்சி
டோக்கியோ: ஜப்பானில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த மாதம் ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஷிகரு இஷிபா தலைமையிலான லிபரல் டெமாக்ரடிக் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து இஷிபா விலகினார். இதனால் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வரும் 15ம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதையொட்டி லிபரல்...