இந்தோனேஷியாவில் பள்ளி கட்டிடம் இடிந்து தரைமட்டம் 65 மாணவர்கள் உயிருடன் புதைந்தனர்
சிடோயர்ஜோ: இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோயர்ஜோ நகரில் ‘அல் கோசினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளி’ செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இருந்த பழைய இரண்டு மாடிக் கட்டிடத்தில், அனுமதியின்றி கூடுதலாக சில தளங்கள் கட்டப்பட்டு வந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, கூடுதல் தளங்களின் பாரம் தாங்காமல் அந்தக்...
எச்1பி விசா புதிய கட்டணம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அமல்: அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் லுட்சின் தகவல்
நியூயார்க்: 2026ம் ஆண்டு பிப்ரவரியில் எச்1பி விசா புதிய கட்டணங்கள் நடைமுறை அமலுக்கு வரும் என்று அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவர்டு லுட்சின் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எச்1பி விசாக்களுக்கு ஒருலட்சம் அமெரிக்க டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அறிவித்தார். இது மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. இந்நிலையில் பீதி மற்றும் குழப்பத்திற்கு...
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம்: இஸ்ரேல் ஆதரவு; ஹமாஸ் மவுனம்; முஸ்லிம், அரபு நாடுகள் வரவேற்பு
வாஷிங்டன்: காசா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் 20 அம்ச திட்டத்தை அறிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான சந்திப்பை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு நெதன்யாகு மற்றும் இஸ்லாமிய, அரபு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஹமாஸ் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. காசாவில் உள்ள ஹமாஸ் போராளிகள்...
சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் 120 ஈரானியர்களை நாடு கடத்தும் அமெரிக்கா
தெஹ்ரான்: அமெரிக்காவில் இருந்து 120 ஈரானியர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வௌிநாட்டினரை வௌியேற்றும் நடவடிக்கையை அதிபர் டிரம்ப் தீவிரப்படுத்தி உள்ளார். அதன்படி பல்வேறு வௌிநாட்டினர் தங்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள 120 ஈரானியர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர். இதுதொடர்பாக ஈரான் அமெரிக்கா...
தண்ணீர், மின்சார தட்டுப்பாடு எதிரொலி; இளைஞர்கள் போராட்டத்தால் மடகாஸ்கரில் ஆட்சி கவிழ்ப்பு: ஆட்சியாளர்கள் வீடுகள் சூறை; 22 பேர் பலி
அண்டனானரிவோ: தொடர் மின்வெட்டு மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து, மடகாஸ்கர் அதிபர் தனது அரசாங்கத்தையே கலைத்துள்ளார். ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் நீண்ட காலமாக நிலவி வரும் கடுமையான மின்வெட்டு மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதைக் கண்டித்து, கடந்த வாரம் தலைநகர் அண்டனானரிவோவில் இளைஞர்கள்...
175 மில்லியன் டாலருக்கு வங்கியை ஏமாற்றிய பெண் தொழிலதிபருக்கு 7 ஆண்டுகள் சிறை: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி
நியூயார்க்: பிரபல ஜேபி மார்கன் சேஸ் வங்கியை ஏமாற்றி தனது புத்தொழில் நிறுவனத்தை விற்பனை செய்த பெண் தொழில்முனைவோருக்கு 7 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சார்லி ஜவிஸ் (33) என்ற பெண், ‘ஃபிராங்க்’ என்ற பெயரில் மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் புத்தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 2021ம் ஆண்டு,...
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9ஆக பதிவு
பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9ஆக பதிவாகி உள்ளது. லெய்டே பகுதியை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 10.4 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ...
பிரான்சில் மதக்கலவரத்தை தூண்டும் சதி; மசூதிகள் அருகே பன்றித் தலைகள் வீசிய 11 பேர் கைது: வெளிநாட்டு உளவுத்துறையின் தொடர்பு அம்பலம்
பாரிஸ்: ஐரோப்பிய நாடுகளில் இஸ்ரேல் - ஹமாஸ் மோதலைத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, அதிக இஸ்லாமிய மக்கள் வசிக்கும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வும், யூதர்களுக்கு எதிரான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் மத ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தொடர் குற்றச்செயல்களில்...
காந்தி ஜெயந்திக்கு முன் நடந்த அராஜகம்; லண்டனில் காந்தி சிலை அவமதிப்பு: ஒன்றிய அரசு கடும் கண்டனம்
லண்டன்: கடந்த 2020ம் ஆண்டு, இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் இருந்த காந்தி சிலை அவமதிக்கப்பட்டது. அதேபோல், கடந்த மார்ச் மாதம், காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இந்திய மண்ணில் செயல்படும் இதுபோன்ற தீவிரவாத சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த...