எத்தியோப்பியாவில் தேவாலய கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்த விபத்தில் 36 பேர் உயிரிழப்பு!!
அடிஸ் அபாபா: எத்தியோப்பியாவில் தேவாலய கட்டுமான பணியின்போது சாரம் சரிந்து விழுந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து 70 கி.மீ., தொலைவில் அம்ஹாரா பிராந்தியத்தில் அரெர்டி நகரம் உள்ளது. இந்நகரில் உள்ள மென்ஜார் ஷென்கோரா அரேர்டி மரியம்...
எத்தியோப்பியாவில் தேவாலய கட்டுமான பணியின்போது சாரம் சரிந்து விழுந்த விபத்தில் 36 பேர் உயிரிழப்பு
எத்தியோப்பியா: எத்தியோப்பியாவில் தேவாலய கட்டுமான பணியின்போது சாரம் சரிந்து விழுந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். சாரம் சரிந்து விழுந்ததில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ...
கத்தாரை தாக்கினால் பதில் தாக்குதல்: அமெரிக்கா கடும் எச்சரிக்கை
துபாய்: கத்தார் நாட்டின் மீது மற்ற நாடுகள் தாக்கினால் தக்க பதிலடி தரப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. கடந்த மாதம் கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைமையகம் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த திங்கள்கிழமை(செப்.29) வாஷிங்டன் சென்றிருந்தார். அப்போது, கத்தார் பிரதமர் ஷேக் முகம்மது பின் அப்துல்...
நிதி மசோதா தோல்வியால் அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது
வாஷிங்டன்: அமெரிக்க அரசு செலவினங்கள் தொடர்பான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒவ்வொர் ஆண்டும் நிறைவேற்றப்படும். இந்த மசோதா மூலமாகவே அரசின் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்படும் நிதிக்கு அனுமதி அளிக்கப்படும். அந்த வகையில், அமெரிக்க செனட் சபையில் நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நிறைவேற 60 சதவீத வாக்குகள் தேவை. ஜனநாயக கட்சி உறுப்பினர்கள்...
எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அமெரிக்காவுக்கே அவமானம்: டிரம்ப் உருக்கம்
வாஷிங்டன்: வரும் அக்டோபர் 10ஆம் தேதி இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் யார் யாருக்கு வழங்கப்பட உள்ளன என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் பேசிய டிரம்ப்,’எனக்கு நோபல் பரிசு தருவார்களா? நிச்சயமாக மாட்டார்கள். ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடாத யாரோ ஒருவருக்கு அதை கொடுப்பார்கள்....
4 வாரங்களில் சீன அதிபரை நேரில் சந்தித்து பேசுவேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீனா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விரும்புவதால், நமது நாட்டின் சோயாபீன்ஸ்சை வாங்காததால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில், வரி விதிப்பு மூலம் நாம் நிறைய பணத்தை சம்பாதித்துள்ளோம். அந்த பணத்தின் ஒரு சிறிய பகுதிகளை எடுத்து நமது விவசாயிகளுக்கு உதவ போகிறோம்....
உலகத் தலைமையை ஏற்கும் நிலையை இந்தியா இன்னும் அடையவில்லை : ராகுல் காந்தி
கொலம்பியா : உலகத் தலைமையை ஏற்கும் நிலையை இந்தியா இன்னும் அடையவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொலம்பியாவின் பொகோட்டாவில் நடந்த கலந்துரையாடலில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் அனைத்து நிலைகளிலும் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது என்றும் உலகின் தலைமையாக இந்தியாவை பார்க்க வேண்டாம் என்றும் பாஜக அரசு மீது மறைமுக விமர்சனம் செய்துள்ளார்....
நியூயார்க் விமான நிலையத்தில் நிறுத்தும் இடத்தில் 2 விமானங்களுக்கு இடையே மோதல்
நியூயார்க் : நியூயார்க் விமான நிலையத்தில் நிறுத்தும் இடத்தில் 2 விமானங்களுக்கு இடையே மோதல் நடந்துள்ளது. டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்கள் இரண்டும் மோதிக் கொண்டதில் ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்தன. 2 விமானங்களும் மோதிக் கொண்டதில் ஒரு விமானத்தின் இறக்கைகள் சேதம் அடைந்தது. ...
அதிபர் டிரம்ப் போட்ட கையெழுத்தால் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்..? மத்திய கிழக்கில் மாறும் போர் சூழல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் போட்ட கையெழுத்தால் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் சூழல் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலும், பாலஸ்தீனம் இடையே 2 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா நகரில் இஸ்ரேல் படைகள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த போரை...