ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தடை
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் 16வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்த வரும் டிசம்பர் 10ம் தேதி முதல் தடை அமலுக்கு வருகிறது. இந்நிலையில் மெட்டா நிறுவனம் சிறுவர்கள் என சந்தேகிக்கப்படும் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளது. அதில், தங்களது தரவுகளை பதிவிறக்கம் செய்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரட்ஸ் தளங்களில் இருந்து வெளியேறுமாறு எஸ்எம்எஸ் மற்றும்...
இந்தியாவிற்கு ரூ.816கோடி மதிப்புள்ள ஏவுகணைகள் விற்பனை: அமெரிக்கா ஒப்புதல்
நியூயார்க்: இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை தீர்த்து வைத்ததாக அதிபர் டிரம்ப் அறிவித்தது மற்றும் இந்தியாவிற்கு எதிராக 50 சதவீத வரி விதிப்பு, எச்1-பி விசா விவகாரம் உள்ளிட்டவற்றால் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் அதிருப்தி நிலவி வந்தது. இந்நிலையில் இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்தோ-பசிபிக் மற்றும்...
350% வரி விதிக்கப்படும் என்று எச்சரித்து இந்தியா- பாக். போரை நிறுத்தினேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் புது தகவல்
நியூயார்க்: இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் போரை நிறுத்தாவிட்டால் இரு நாடுகளுக்கும் 350% வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தேன் என்றும் நாங்கள் போருக்கு செல்லவில்லை என்று மோடி கூறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் தீவிரவாத முகாம் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இரு...
அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற திறமையான புலம்பெயர்ந்தோர்கள் தேவை; எச்1 பி விசாக்களுக்கு டிரம்ப் மீண்டும் ஆதரவு
வாஷிங்டன்: வாஷிங்டனில் அமெரிக்கா-சவுதி முதலீட்டு கூட்டம் நடந்தது. இதில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறியதாவது: உயர் தொழில்நுட்ப தொழிற்சாலைகளில் அமெரிக்க தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவிற்கு தேவை. அந்த மக்கள் நம் மக்களுக்கு ‘சிப்’ எவ்வாறு தயாரிப்பது என்பதை கற்று கொடுக்க போகிறார்கள். நான் பழமைவாத நண்பர்களை ஆதரிக்கிறேன். அமெரிக்காவை மேலும் சிறந்ததாக்க விரும்புகிறேன்....
உலகின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட டாப் 10 நகரங்கள் பட்டியலில், 4 இந்திய நகரங்கள்: ஐ.நா. தகவல்
ஐ.நா. வெளியிட்ட உலகின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட டாப் 10 நகரங்கள் பட்டியலில், 4 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 27,000 பேர் வசிக்கும் மும்பை நகரம் பட்டியலில் முதலிடம். அடுத்தடுத்த இடங்களில் Kasai-Oriental, Beni, கராச்சி, சூரத், ஹாங்காங்கின் Tamar, கின்ஷாசா, Muqdisho, அகமதாபாத், பெங்களூரு ஆகிய நகரங்கள்...
உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைகள் 3 பேர் தங்கம் வென்று சாதனை..!!
உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைகள் 3 பேர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி 70 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார். உஸ்பெகிஸ்தான் வீராங்கனை அசிஜா சொகிரோவாவை 5-0 என வீழ்த்தி அருந்ததி சவுத்ரி தங்கம் வென்றார். இந்திய வீராங்கனைகள் மீனாட்சி ஹூடா 48...
டிரம்ப் - மம்தானி நாளை சந்திப்பு
வாஷிங்டன்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சோரான் மம்தானி நாளை சந்திக்கிறார். நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட சோரான் மம்தானி அபார வெற்றி பெற்றார். மேயர் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி வேட்பாளர் படுதோல்வி அடைந்த நிலையில் டிரம்ப்பை மம்தானி சந்திக்கிறார். வெள்ளை மாளிகையில் டொனால்டு டிரம்ப்...
அமெரிக்காவின் பிரபல விமான கட்டுமான ஏர்கிராப்ட் சப்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்துடன் டாடா ஒப்பந்தம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபல விமான கட்டுமான ஏர்கிராப்ட் சப்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்துடன் டாடா ஒப்பந்தம் செய்துள்ளது. ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் புதிய கட்டுமான நிறுவனம் ஒன்றை அமைத்து விமானங்களை வடிவமைக்க டாடா திட்டமிட்டுள்ளது. ...
ராணுவத்தின் எதிர்ப்பை மீறி சவுதிக்கு எப்-35 போர் விமானத்தை விற்பதற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல்: சீனாவுக்கு கொண்டாட்டம்?
வாஷிங்டன்: சவுதி அரேபியாவின் பட்டத்து இளவசர் முகமது பின் சல்மான் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். அப்போது, சவுதி அரேபியாவுக்கு 48 எப்-35 போர் விமானத்தை விற்பனை செய்ய அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்தார். இது குறித்து...