கோலாலம்பூரில் இருந்து 137 பேருடன் சென்னை வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை
சென்னை: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை, 129 பயணிகள், 8 விமான ஊழியர்கள், 137 பேருடன் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை 10.40 மணிக்கு தரையிறங்க இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணி அளவில்,...
பாதுகாப்பு படைகள் - ஒன்றிய அரசுத்துறை ஓய்வூதியதாரர்களுக்கு நாளை டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம்
சென்னை: பாதுகாப்புப் படைகள், பாதுகாப்பு சிவில் நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய அரசு துறைகளின் ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களைப் புதுப்பிப்பதற்கான முகாம் நாளை தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் நடைபெறவுள்ளது. இந்திய விமானப்படை, சென்னை பாதுகாப்பு கணக்குக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்துகின்றன. ஓய்வூதியதாரர்கள் ஒரே இடத்தில் தங்களது ஆயுள் சான்றிதழ்களைப்...
சபரிமலை சீசன் மகாராஷ்டிரா - கொல்லம் இடையே தென்காசி வழியாக சிறப்பு ரயில்கள்
சென்னை: சபரிமலை சீசனை முன்னிட்டு மகாராஷ்டிரா கொல்லம் இடையே தென்காசி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கபடுகிறது. கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது வழக்கம். இந்த நிலையில், சபரிமலை சீசனை முன்னிட்டு கார்த்திகை மாத தொடக்கத்தில் இருந்து ஜனவரி மாதம் வரை மகாராஷ்டிரா மாநிலம் H.S.நாந்தேட் ரயில் நிலையத்திலிருந்து தமிழகத்தில் உள்ள...
தேஜஸ்வி யாதவ் பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து
சென்னை: பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பிறந்தநாளையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: தம்பி தேஜஸ்வி யாதவ்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். பீகாரில் புத்துணர்வு பெற்றுள்ள சமூகநீதி இயக்கத்தின் உந்துசக்தியாக எழுந்து, கோடிக்கணக்கானோருக்கு நம்பிக்கையளிப்பவராகத் தாங்கள் இருக்கிறீர்கள். தங்களது தலைமையில் ஒரு...
காதலனை பிரித்து கட்டாய திருமணம் சிறுமி தற்கொலை
கெங்கவல்லி: சேலம் மாவட்டம், கெங்கவல்லி அடுத்த தெடாவூர் பள்ளக்காடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 17 வயது மகள், தந்தை வேலை செய்து வரும் தோட்டத்திலேயே தங்கி, விவசாய பணியில் ஈடுபட்டு வந்தார். அந்த சிறுமி, அதே பகுதியை சேர்ந்த வாலிபரை காதலித்துள்ளார். இந்த காதல் பெற்றோருக்கு தெரியவந்ததால் சிறுமியை கண்டித்ததுடன், அவசரம், அவசரமாக தோட்டத்து உரிமையாளரின்...
தோழிகள் கிண்டல் காதலி பேச மறுப்பு மாணவன் விஷம் குடிப்பு
ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவன் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறார். கல்லூரியில் சேர்ந்து படிக்கும் முன்பே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு 17 வயது மைனர் பெண்ணோடு சாட்டிங் செய்து வந்தார். இதனால் இருவருக்கும் முகம் அறியாமல் காதல் ஏற்பட்டு உள்ளது. இருவரும் தினமும் இன்ஸ்டா...
ஆய்வு பணிக்காக சென்ற ரயில் மோதி பெண் சாவு
தேனி: மதுரையில் இருந்து போடி நோக்கி ஆய்வு பணிக்கு ெசன்ற ரயில் மோதி 15 ஆடுகளுடன் பெண் உயிரிழந்தார். மதுரையில் இருந்து போடி வரை ஆய்வு பணிக்காக 130 கிலோமீட்டர் வேகத்தில் நேற்று ரயில் சென்றது. இந்த ரயில், தேனி - மதுரை சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே சென்றபோது, அப்பகுதியில் ஆடு...
டூவீலர் திருட்டு வழக்கில் ரூ.20,000 லஞ்சம் கேட்பா? விசாரணைக்கு சென்றவர் விஷம் குடித்து தற்கொலை: காரியாபட்டி காவல்நிலையம் முற்றுகை, மறியல் பஸ் மீது கல்வீச்சு
காரியாபட்டி: காரியாபட்டி அருகே காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு சென்று வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் பஸ் மீது கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அச்சம்பட்டியை சேர்ந்தவர் அழகுப்பாண்டி (34). கூலி தொழிலாளி. இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு டூவீலர் காணாமல் போன வழக்கின்...
வாட்டர் வாஷ் செய்தபோது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த கலையநல்லூர் சாலையில் சாஜன் என்பவரின் வாட்டர் சர்வீஸ் கடையில் தென் கீரனூர் கிராமத்தை சேர்ந்த அரவிந்த் (27), ஷாகில் (17) ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் நான்கு சக்கர வாகனத்துக்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்தனர். அப்போது அரவிந்த் மீது மின்சாரம்...