சின்னசேலம் ரயில் நிலையம் அருகே சிக்னல் பழுதால் கேட் திறப்பதில் சிக்கல்

*அணிவகுத்து நின்ற வாகனங்கள், போக்குவரத்து பாதிப்பு சின்னசேலம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட சின்னசேலத்தில் பெரிய ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் ஒருபுறம் உள்ள கூகையூர் சாலையிலும், மற்றொரு புறம் நைனார்பாளையம் சாலையிலும் ஒரு ரயில்வே கேட்டும் உள்ளது. இந்த இரண்டு ஊர்களுக்கும் செல்பவர்கள் ரயில் வரும் நேரத்தில் நின்று செல்லும் வகையில்...

டெண்டர் விடப்பட்டு 5 ஆண்டு 11 மாதங்கள் ஆகியும் தாம்பரம் ரயில் நிலையத்தை மறு சீரமைக்காத ரயில்வே: தென்மாவட்ட பயணிகள் வேதனை

By MuthuKumar
7 hours ago

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தை மறு சீரமைக்கும் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு 5 ஆண்டுகள் 11 மாதங்கள் ஆகியும் மேற்கொள்ளாமல் ரயில்வே நிர்வாகம் மறுத்து வருகிறது. தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் 8 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், ஒவ்வொரு மாநிலமும் அதற்குரிய பங்கை பெறுகிறது, இதில் அரசியலுக்கு இடமில்லை என்றும் ரயில்வே துறை சொல்லி வருகிறது. ஆனால்...

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது

By MuthuKumar
7 hours ago

நாகை: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்வதை இலங்கை கடற்படை வழக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக...

டிஜிட்டல் அரெஸ்ட் என்பது மோசடி குழுக்கள் இணைந்து விரிக்கும் வலை: உத்தரவுகள் பிறப்பிக்க ஆயத்தமாகும் உச்சநீதிமன்றம்

By MuthuKumar
7 hours ago

நாடு முழுவதும் தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. அச்சடிக்கப்பட்ட பணத்தின் பயன்பாடு மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. அதேநேரத்தில் டிஜிட்டல் முறையில் நடக்கும் பணமோசடி தொடர்பான சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இதில் சிபிஐ உள்ளிட்ட உயரதிகாரிகளை போல், வீடியோ காலில் பேசி, டிஜிட்டல் முறையில் ஹவுஸ் அரெஸ்ட் செய்து விட்டதாக கூறி, லட்சக்கணக்கில்...

விரல் நுனியில் உலகை அறியும் நவீன உலகில் வாழ்க்கை கல்வியில் தடுமாறும் மாணவர்கள்: பரிதவிக்கும் பெற்றார்; மருத்துவர் ஆலோசனை

By MuthuKumar
7 hours ago

நாகரிக வளர்ச்சி என்பது முன்பெல்லாம் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது அதற்கு மேல் சில ஆண்டுகளை எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் மாற்றங்களை நாம் பார்த்து வந்தோம். ஆனால் தற்போது வருடத்திற்கு ஒரு மாற்றம் என வாழ்வியல் நடைமுறைகள் அதிவேகமாக மாறிக்கொண்டே வருகிறது. அந்த காலத்தில் இருந்த நடைமுறைகள் அனைத்தும் மாறி தற்போது பெற்றோரும், குழந்தைகளுக்கு...

தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடித்துச் சென்றது இலங்கை கடற்படை

By MuthuKumar
7 hours ago

நாகை: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும் இலங்கை காங்கேசன்துறை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ...

கோவளம் முகத்துவாரத்தில் ரூ.471 கோடியில் புதிய நீர்த்தேக்கம்: 4,375 ஏக்கர் நிலப்பரப்பில் அமைகிறது

By MuthuKumar
8 hours ago

சென்னை: ஓ.எம்.ஆர். சாலையில் சுமார் 10 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகி உள்ளன. இதுமட்டுமின்றி 80க்கும் மேற்பட்ட தனியார் மென்பொருள் நிறுவனங்கள், 3 மருத்துவக் கல்லூரிகள், 17 பொறியியல் கல்லூரிகள், 5 கலைக்கல்லூரிகள், 100க்கும் மேற்பட்ட தனியர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இங்கு ஏராளமான வீட்டு மனைப்பிரிவுகள், தனி வீடுகளின் விற்பனை அதிகமாகிக்...

இந்தியாவிலேயே சிறந்த பொது போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற விருது பெற்ற மாநகர போக்குவரத்து கழகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

By MuthuKumar
8 hours ago

சென்னை: இந்தியாவிலேயே சிறந்த பொது போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற விருது பெற்ற மாநகர போக்குவரத்து கழகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம், டிஜிட்டல் பயணச்சீட்டு முறை தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என நாளுக்கு நாள் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மெருகேறி வருவதாக முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்....

தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் பல கணைகள் நம்மை நோக்கி வீசப்பட்டு வருகிறது: கனிமொழி எம்பி பேச்சு

By Ranjith
12 hours ago

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற திமுக 75 அறிவுத்திருவிழாவில் நேற்று நடந்த கருத்தரங்கில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பேசியதாவது: தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு கணைகள் நம்மை நோக்கி வீசப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல்முனை தாக்குதல் நடைபெறுகிறது. நமது பாரம்பரிய எதிரிகளும், பரம்பரை எதிரிகளும், எல்லாருக்கும் எதிரியாக ஒரே கட்சி என்றால்,...

தமிழ்நாட்டில் இருந்து இன்று முதல் அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் ஓடாது: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூட்டறிக்கை

By Ranjith
12 hours ago

சென்னை: தமிழகத்தில் இருந்து இன்று முதல் அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கம் நிறுத்தப்படுவதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில், தமிழகத்தை மட்டும் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கேரளா போக்குவரத்து துறையினரால் திடீரென...