நடிகர் ரவி மோகன் இல்லத்தில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய வங்கி ஊழியர்கள்

சென்னை: நடிகர் ரவி மோகன் இல்லத்தை ஜப்தி செய்வதாக அறிவித்து தனியார் வங்கி ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டினர். வீட்டிற்கான கடன் தொகையை செலுத்தாததால் தனியார் வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ...

கோட்டூர்புர காவல் நிலைய விசாரணைக்குச் சென்றவர் வீடு திரும்பியதும் மரணம் - எஸ்.ஐ, இரு தலைமைக் காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

By Porselvi
4 hours ago

சென்னை : விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் மரணமடைந்த வழக்கில் எஸ்.ஐ., 2 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு சென்னை கோட்டூர்புரத்தில் குடிபோதையில் தகராறு செய்ததாக பழனி என்பவரை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பழனி மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்காததால், அவரை காவல்துறையினர் கடுமையாக தாக்கி உள்ளனர். பின்னர் அவர்...

திருமங்கலம் அடுத்த திருமால் கிராமத்தில் கல்குவாரிகளால் வீடுகளில் விரிசல்: மக்கள் போராட்டம்

By MuthuKumar
4 hours ago

மதுரை: திருமங்கலம் அடுத்த திருமால் கிராமத்தில் கல்குவாரிகளால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. குவாரி உரிமங்களை ரத்து செய்ய அரசுக்கு கோரிக்கை விடுத்து விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் திருமால் கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ...

தைலாபுரத்தில் வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டம்

By Neethimaan
4 hours ago

விழுப்புரம்: ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் தைலாபுரத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வன்னியர் சங்க மாநில, மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். ...

வேலூர்: மோர்தானா அணை நிரம்பியது

By Neethimaan
4 hours ago

வேலூர்: வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியது. 11.5 மீ. உயரமும் 263 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட மோர்தானா அணை நிரம்பியது. ...

சென்னை ஒன் செயலியை கடந்த இரு நாட்களில் மட்டும் 1.55 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்

By Neethimaan
4 hours ago

சென்னை: சென்னை ஒன் செயலியை கடந்த இரு நாட்களில் மட்டும் 1.55 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் சென்னை ஒன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. முதல்வர் தொடங்கி வைத்த சென்னை ஒன் செயலியை 1.55 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். ...

நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர் வீடு, அலுவலகங்களில் 2 வது நாளாக வருமான வரி சோதனை

By Gowthami Selvakumar
4 hours ago

நாமக்கல்: நாமக்கல் மோகனூர் சாலையில் வசித்துவருவபவர் வாங்கிலி சுப்புரமணியன். இவர் நாமக்கல், கிருஷ்ணகிரி பகுதிகளில் மிகபெரிய அளவில் கோழிப்பண்ணை நடத்திவருகிறார். அதுமட்டுமின்றி கோழித்தீவன ஆலைகளும் நடத்திவருகிறார். இவருக்கு சொந்தமான திருச்சி சாலையில் உள்ள அவரது அலுவலகம், மோகனூர் சாலையில் உள்ள அவரது வீடு, அலுவலகம், வெங்கடேஷ்வர நிதி நிறுவனம் உள்ளிட்ட 3 இடங்களில் சுமார் 10...

கணவருடன் வாழ மறுப்பது துன்புறுத்தல் என தீர்ப்பு

By Neethimaan
4 hours ago

டெல்லி: கணவருடன் சேர்ந்து வாழ மறுத்து அடிக்கடி தாய் வீட்டுக்கு சென்றுவிடுவதும் சித்ரவதைதான் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கணவருடன் சேர்ந்து வாழாமல் கணவர், அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறுவது துன்புறுத்தலாகும் என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கணவருடன் தாம்பத்யத்தில் ஈடுபட மறுப்பதை தீவிர துன்புறுத்தலாக கருதவேண்டும் எனவும் கூறியுள்ளது. கணவர் விவாகரத்து கேட்ட...

காவல் நிலைய விசாரணைக்குச் சென்றவர் வீடு திரும்பியதும் மரணமடைந்த வழக்கில் 3 காவலர்களுக்கு அயுள் தண்டனை

By MuthuKumar
4 hours ago

சென்னை: 2009ல் சென்னை கோட்டூர்புரத்தில் குடிபோதையில் தகராறு செய்த பழனி என்பவர் காவல் நிலையம் சென்று வீடு திரும்பியதும் மரணமடைந்த வழக்கில் எஸ்.ஐ, 2 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. போலீசார் தாக்கியதே மரணத்திற்கு காரணம் என ஆர்.டி.ஓ விசாரணையில் தெரியவர கொலை வழக்காக மாற்றப்பட்டது. அப்போது எஸ்.ஐ. ஆக இருந்த...

அதிமுக முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டேவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

By MuthuKumar
5 hours ago

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். சென்னை ஷெனாய் நகர் இல்லத்தில் ஹண்டேவை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் பொன்னாடை போர்த்தினார். தமிழ்நாடு அரசின் திட்டங்களை பாராட்டி முதலாமைச்சருக்கு எச்.வி.ஹண்டே தொடர்ந்து கடிதம் எழுதி வந்தார். ...