சிங்கம்புணரி அருகே புரவி எடுப்பு திருவிழா
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மாந்தகுடிபட்டி கிராமத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புரவி எடுப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிடிமண்...
குன்னூர் அருகே நீரோடையை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்
ஊட்டி: குன்னூர் அருகே காட்டேரி அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ள முட்டிநாடு நீரோடையை தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் மின் உற்பத்திக்காக பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான அணைகள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல் குடிநீருக்காகவும் பல்வேறு பகுதிகளிலும் அணைகள் கட்டப்பட்டுள்ளன. அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீருக்காக கடந்த 100...
ராகுல் காந்தியின் கேள்விகளுக்குத் தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப் போகிறது? -ஜவாஹிருல்லா கேள்வி!
சென்னை: ராகுல் காந்தியின் கேள்விகளுக்குத் தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப் போகிறது? என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் ஆணையமும் இணைந்து மிகப்பெரிய தேர்தல் மோசடி செய்துள்ளதாக நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருப்பதோடு அதனை அம்பலப்படுத்தியும் இருக்கிறார். பெங்களூரு மத்தியத் தொகுதியில் ஒரு லட்சத்து 250 போலி வாக்குகளை உருவாக்கி வெற்றி பெற்றதாக அவர் தெரிவித்திருப்பதைப் புறம் தள்ள முடியாது. வாக்காளர் பட்டியலில் ஐந்து வகையான மோசடிகள் நடந்திருப்பதை திரு. ராகுல் காந்தி அம்பலப்படுத்தி இருக்கிறார். -போலி வாக்காளர்கள் -ஒரே நபரின் பெயரில் பல வாக்குச்சாவடிகளில் வாக்குகளைச் சேர்த்திருப்பது -போலியான செல்லாத முகவரிகள் அல்லது சரி பார்க்க முடியாத வாக்காளர்கள் -புதிய வாக்காளர்களை சேர்ககும் படிவம் 6ஐ முறைகேடாகப் பயன்படுத்துதல் -சிறிய வீட்டில் பல குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் ஒரு தொகுதியில் மட்டும் நடந்த மோசடிகளை காட்சிப்படுத்தியிருக்கும் ராகுல் நாடுமுழுவதும் பெரிய அளவில் இந்த மோசடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதைப் புறந்தள்ள முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தை நோக்கி ராகுல் காந்தி எழுப்பி இருக்கும் கேள்விகளுக்குத் தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப் போகிறது? மராட்டியத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற ஐந்து மாதங்களுக்கு...
நெசவுத் தொழிலில் 3ஆவது இடத்தில் தமிழ்நாடு!
சென்னை: அசாம், மேற்கு வங்கத்திற்கு அடுத்தபடியாக நெசவுத் தொழிலில் தமிழ்நாடு 3 ஆவது இடத்தில் உள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சி புடவைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் நெசவு தொழிலாளர்களுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. ...
விளைநிலங்களில் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம்; 700 வாழைகள் சேதம்: விவசாயிகள் கவலை
களக்காடு: களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் 700க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு பன்றிகள் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் ஊர் பகுதிகளில் முகாமிட்டு விளைநிலங்களை துவம்சம்...
குமரியில் காற்றாடி திருவிழா நடத்தப்படுமா? சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
நாகர்கோவில்: குமரியில் ஆண்டு தோறும் காற்றாடி திருவிழா நடத்த வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகிலேயே முக்கடல் சங்கமம் உள்ள 2 இடங்களில் சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியும் ஒன்று. அதேபோல் நாட்டிலேயே 2 கடற்கரைகள் கொண்ட ஒரே மாவட்டமும் குமரி தான். ஆண்டிற்கு 2 பருவமழை பொழியும் இங்கு ஐவகை நிலங்களும்,...
“முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை“ சென்னையில் வருகிற 12ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை" சென்னையில் வருகிற 12.8.2025 அன்று தொடங்கி வைக்கிறார்கள்! அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடுதேடிச் சென்றடையச் செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய...
மல்லர்கம்பம், சிலம்பத்தில் அசத்தி வரும் மாற்றுத்திறனாளி மாணவர்
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் மல்லர் கம்பத்திலும் சிலம்பதிலும் அசத்தி வருகிறார். பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன் அரசு பள்ளி மாணவர் ஆன இவர் பிறக்கும் போதே உயர குறைபாட்டுடன் பிறந்துள்ளார். இருப்பினும் மனம்தளராத அவர் மல்லர் கம்பம் மற்றும் சிலம்பத்தில் தனது தடத்தை பதித்து வருகிறார். கடந்த 2024 ஆம்...
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னையில் வரும் 12ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னையில் வரும் 12ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ரேஷன் பொருட்களை வீட்டிற்கே சென்று கொடுக்கும் வகையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வீட்டிற்கே சென்று கொடுக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ...