சென்னை உர நிறுவன முன்னாள் அதிகாரிகள் விடுதலை
சென்னை: டெண்டர் ஒதுக்கீடு செய்ய 26 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் சென்னை உர நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், பொது மேலாளர் உள்பட 4 பேரை விடுதலை செய்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரன்...
குற்றங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கா விட்டால் பதவி உயர்வுக்கு சிக்கல் நேரிடும்: காவல் ஆய்வாளர்களுக்கு எச்சரிக்கை
சென்னை: காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குற்றங்களைத் தடுக்க முன்கூட்டியே திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுக்காத ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது காவல் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது. அதன்படி, பழிக்குப் பழி வாங்க துடிக்கும் நபர்களை முன்கூட்டியே அடையாளம்...
பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்: குடும்பத்துடன் பங்கேற்று உடல் பரிசோதனை செய்தனர்
சென்னை: பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் பத்திரிகையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று உடல் பரிசோதனை செய்தனர். சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று செய்தி மக்கள் தொடர்பு துறை, மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, சென்னை பத்திரிகையாளர் மன்றம் மற்றும் அப்போலோ மருத்துவமனை...
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு ஆம்னி பஸ்கள் இயக்கம் நிறுத்தம்: உரிமையாளர் சங்கம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ஆம்னி பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்படுவதாக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு கடந்த 7ம் தேதியன்று நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில், தமிழகத்தை மட்டும் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கேரளா...
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை கைதி குடும்பத்தினரை சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை கைதியை அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பவர், சிறையில் தனது குடும்பத்தினரை...
ரவுடி நாகேந்திரன் மரணம் அடையவில்லை: பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தப்ப வைத்துள்ளனர்; ஆம்ஸ்ட்ராங் தம்பி தரப்பு நீதிமன்றத்தில் வாதம்
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி நாகேந்திரன் மரணம் அடையவில்லை என்றும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரை தப்ப வைத்து விட்டார்கள் என்று ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம் வைக்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு அவரது வீட்டின்...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் அதிகாரத்தை பறிக்கும் செயலில் பாஜ அரசு ஈடுபடுகிறது: பொன்குமார் தாக்கு
சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) என்ற பெயரில் வாக்கு திருட்டு மூலம் அதிகாரத்தை பறிக்கும் செயலில் ஒன்றிய பாஜ அரசு ஈடுபட்டு வருகின்றது. பீகாரில் மோடி அரசின் வாக்கு திருட்டு குறித்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஆதாரத்துடன் வெளியிட்டு மோடி...
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 6,453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல்: விவசாயிகளுக்கு ரூ.26.48 கோடி வழங்கப்பட்டுள்ளது; அமைச்சர் தகவல்
சென்னை: தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கேழ்வரகு கொள்முதல் திட்டம், கடந்த 2022-23 கொள்முதல் பருவத்தில் முதற்கட்டமாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, 514 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. 2-ம்கட்டமாக 2023-24 கொள்முதல் பருவத்தில் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களையும்...
நாடு முழுவதும் காலியாக கிடக்கும் 802 எம்பிபிஎஸ் இடங்கள்: மருத்துவ மாணவர் சேர்க்கை
சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வின் 3ம் சுற்று முடிவில் நாடு முழுவதும் 802 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வின் 3ம் சுற்று முடிவில் நாடு முழுவதும் 802 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் மட்டும் 136 இடங்கள் நிரம்பாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 9...