மின்சாரம் பாய்ந்து 2 ஊழியர்கள் பலி
கள்ளக்குறிச்சி: வாட்டர் சர்வீஸ் கடையில் மின்சாரம் பாய்ந்து 2 ஊழியர்கள் பலியானார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த கலையநல்லூர் சாலையில் சாஜன் என்பவர் வாட்டர் வாஷ் கடை நடத்தி வருகிறார். இங்கு தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்த அரவிந்த் (27) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஷாகில் (17) உள்ளிட்ட பலர் வேலை பார்த்து வந்துள்ளனர்....
70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்து, திருக்கோயில் சார்பில் ரூ.3.40 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார் என அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். அவர் மேலும்...
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நவம்பர் 14ம் தேதி வரை தமிழகத்தில்...
சென்னை வாலிபர் வெட்டிக் கொலை தந்தை, மகன் உள்பட 5 பேருக்கு ஆயுள்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே முன்விரோதம் காரணமாக சென்னை வாலிபரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.தூத்துக்குடி அருகேயுள்ள குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் பொன்நிமேஷ் (35). இவர், அப்போது சென்னையில் உள்ள...
சாலையில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா வேன்: 16 பயணிகள் தப்பினர்
தேனி: பெரியகுளம் அருகே குமுளி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வேனில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிலிருந்த 16 பயணிகளும் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து நேற்று மாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி சுற்றுலா வேன் சென்றுகொண்டிருந்தது. பெரியகுளம் அடுத்த...
விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல், ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்: குடும்பத்துடன் பரிசல், படகு சவாரி சென்று உற்சாகம்
ஏற்காடு: விடுமுறை தினமான இன்று ஒகேனக்கல் மற்றும் ஏற்காட்டிற்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.சேலம் மாவட்டத்தில் உள்ள ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் மழை பொழிவால், ‘ஜில்’...
மேட்டுப்பாளையத்தில் வனத்துறை ஜீப்பை தாக்க முயன்ற ‘பாகுபலி’ யானையால் பரபரப்பு: வனக்கல்லூரி கேட்டை உடைத்து புகுந்தது
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த பாகுபலி யானை வனத்துறை ஜீப்பை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, தாசம்பாளையம், நெல்லித்துறை, ஓடந்துறை, ஊமப்பாளையம், பாலப்பட்டி, வச்சினம்பாளையம், சிறுமுகை லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பாகுபலி என...
கோவையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரி சாய்ந்தது
கோவை: கோவை சிரியன் சர்ச் சாலையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரியால் வடிகாலின் மேற்பகுதி உடைந்து, அதில் லாரி சிக்கி, சாய்ந்தது. லாரியை அப்புறப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்த லாரியில் 16 டன் அரிசி இருப்பதாக கூறப்படுகிறது. ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் இரண்டு நாள் கள ஆய்வுப் பயணம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் 10.11.2025 அன்று காலை 11 மணியளவில் ரூ.767 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்கள்! திருச்சி மாநகரில் பகல் 12.30 மணியளவில் ரூ.10 கோடியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்திட 25 முதியோர் மனமகிழ் வளமையம் அன்புச்சோலை திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்கள்....