“மாதவரத்தில் ஓரணியில் தமிழ்நாடு’’ திமுக உறுப்பினர் சேர்ப்பு
மாதவரம்: சென்னை வடகிழக்கு மாவட்டம் மாதவரம் வடக்கு பகுதி திமுக சார்பில், 17வது வார்டு வடபெரும்பாக்கம் பகுதியில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டது. பகுதி செயலாளர் புழல் எம்.நாராயணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கருணாகரன், மூர்த்தி, பாலாஜி, பார்த்தசாரதி, திவாகர், வக்கீல் எம்.என்.தளபதி உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்கள், மகளிர் உரிமைத் தொகை, வீடு...
உடுமலை அருகே கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அஞ்சலி..!!
திருப்பூர்: உடுமலை அருகே கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அஞ்சலி செலுத்தினார். சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதையை செலுத்தினார். ...
மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலின் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள்
சிவகங்கை: தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோயில்களில் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த 9 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. 40 நாட்களுக்கு ஒருமுறை கோயிலின் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிகாரிகளின் முன்னிலையில் எண்ணப்படும். கோயிலுக்கு வரும் வெளிநாட்டு பக்தர்கள் ரூபாய் நோட்டுகளாகவே காணிக்கை செலுத்துவது வழக்கம். ஆனால் முதன் முறையாக மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில்...
உடுமலை அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் சரண்!!
திருப்பூர்: உடுமலை அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் சரணடைந்துள்ளனர். எஸ்எஸ்ஐ சண்முகவேலை வெட்டிக் கொலை செய்ததாக மூர்த்தி, அவரது மகன் தங்கபாண்டி கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு மகன் மணிகண்டனுக்கு வலைவீசி வருகின்றனர். திருப்பூர் உடுமலை அருகே சிக்கனூத்துவில் தந்தை மகன்களுக்கு இடையிலான தகராறை விசாரிக்கச் சென்ற போது...
சென்னை விமானநிலையத்தில் இயந்திர கோளாறால் விமானம் ஓடுபாதையில் நிறுத்தம்: ஒரு மணி நேர தாமதம்
மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இன்று காலை 68 பயணிகள் உள்பட 73 பேருடன் திருச்சிக்கு புறப்பட்ட இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென இயந்திரக் கோறாறு ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறுகளை பொறியாளர்கள் சரிசெய்தபின், சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டு சென்றது. சென்னை...
அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மை, பெண்கள் ஒருவர் கூட இல்லை : மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்
மதுரை : அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மை மற்றும் பெண்கள் ஒருவர் கூட இல்லை என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "அரசு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், தலைவர்களில் எத்தனை பேர் பட்டியல் சாதி, பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் என்ற கேள்வியை (எண். 2469/04.08.2025) நாடாளுமன்றத்தில்...
பாமக பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதற்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு வழக்கு!!
சென்னை: பாமக பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதற்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. ராமதாஸ் நியமித்த பாமக மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தன்னைத்தானே தலைவர் என சொல்லிக் கொண்டு அன்புமணி செயல்படுவதாகவும், மாமல்லபுரத்தில் ஆக.9ம் தேதி நடக்கும் பாமகவின் பொதுக்குழு...
இந்தியாவிலேயே முதன்மை முதலமைச்சராகத் திகழ்கிறார் நம் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா புகழாரம்
சென்னை : இந்தியாவிலேயே முதன்மை முதலமைச்சராகத் திகழ்கிறார் நம் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் தளத்தில், “கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற தேர்தல் சிறப்பு மாநாட்டில் 7 அம்ச உறுதிமொழிகளை வெளியிட்டு மக்களிடம் வாக்கு கேட்டார்...
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை என புகார்..!!
திருப்பூர்: பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ்வர் - திருப்பூரைச் சேர்ந்த பிரீத்திக்கு 2024 செப்டம்பர்.15ல் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பிரீத்தி குடும்பத்தின் சார்பில் 120 சவரன் நகை, ரூ.25 லட்சம் ரொக்கம் தந்துள்ளனர். கணவர் வீட்டாருக்கு இன்னோவா கார் ஒன்றையும்...