எடப்பாடி பிரசாரத்தில் அடாவடி ஆம்புலன்ஸ்சுக்கு வழிவிடாமல் காரை குறுக்கே நிறுத்தி அதிமுகவினர் மறியல்
தென்காசி: அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரத்தை நேற்று தென்காசியில் மேற்கொண்டார். இதற்காக அவரை வரவேற்று தென்காசி நகர் முழுவதும் ஏராளமான கொடிகளும் பேனர்களும் அனுமதியின்றி வைத்திருந்தனர். இதனால் தென்காசி - திருநெல்வேலி சாலையில் வேட்டைக்காரன் குளம் அருகில் நேற்று மாலை அதிமுகவினர் வைத்திருந்த கொடிகளை போலீசார் அகற்றியதாக...
தனி அறையில் மனைவி, ஆண் குழந்தையை பூட்டி வைத்துவிட்டு 3 மகள்களை வெட்டிக்கொன்று தவெக நிர்வாகி தற்கொலை: கடன் தொல்லையா? நாமக்கல் அருகே சோகம்
நாமகிரிப்பேட்டை: மூன்று மகள்களின் கழுத்தை வெட்டி கொலை செய்த தவெக நிர்வாகி, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த மங்களபுரம் அருகே வேப்பங்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35). இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ‘ரிக்’ வண்டிகளை வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கும் தனியார்...
கலைஞர் நினைவு நாளையொட்டி முதல்வர் தலைமையில் நாளை சென்னையில் அமைதி பேரணி: மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு
சென்னை: திமுக மாற்றுத்திறனாளிகள் அணி மாநில தலைவரும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவருமான ரெ.தங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கலைஞரின் பொற்கால ஆட்சியில் ஊனமுற்றோர் என்ற சொல்லை நீக்கி, மாற்றுத்திறனாளிகள் என பெயர் சூட்டி மகிழ்ந்ததுடன், அவர்களுக்கு தனி நலவாரியம், தனி துறை அமைத்து, அத்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் தனி அமைச்சகம்...
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கிங்டம் திரைப்படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
சென்னை: தமிழகத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள கிங்டம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி பட விநியோக நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் திரைப்படம் ஜூலை 31ம் தேதி வெளியானது. தமிழகத்தில் 250 திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டுள்ளது....
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு விழிப்புணர்வோடு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை
சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், முந்தைய ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்திய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்றும்...
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ரூ.18.26 கோடியில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் காவல் நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்; ரூ.17 கோடியில் 14 பணிகளுக்கு அடிக்கல்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.18.26 கோடி செலவில் 30,000 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த காவல் நிலைய கட்டிடம், காவல் உதவி ஆணையர்...
இன்ஜினியரிங் மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி கட்டாயம்: அண்ணா பல்கலை உத்தரவு
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 300 இன்ஜினியரிங் இணைப்பு கல்லூரிகளில் பிஇ., பி.டெக்., படிப்புகளுக்கான கல்வி விதிமுறைகளை அண்ணா பல்கலை கல்வி கவுன்சில் சமீபத்தில் அங்கீகரித்து இருக்கிறது. இதுநடப்பு கல்வியாண்டில் இருந்து முதல் 2 செமஸ்டர்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளன. இதன்படிநடப்பாண்டில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர இருக்கும் அனைத்தும் பி.இ., பி.டெக்., மாணவர்களுக்கும் வெளிநாட்டு மொழி,...
இணையத்தில் அந்தரங்க வீடியோ வெளியாவது கவலை அளிக்கிறது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
சென்னை: இணையதளங்களில் பகிரப்பட்ட தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை அகற்ற கோரி பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி, பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது மேலும் 13 இணையதளங்களில் பரவி உள்ளது....
முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் மறைவு முதல்வர் இரங்கல்
சென்னை: முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: சத்ய பால் மாலிக் அவர்களின் மறைவு செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். வகித்த பொறுப்பில் இருந்து அவர் ஓய்வுபெற்றபோதிலும், அவரது மனச்சான்று உறங்கிடவில்லை. அவர் வகித்த பொறுப்புகளால் மட்டுமல்ல, அவர் எடுத்த நிலைப்பாடுகளாலும் சத்ய பால் மாலிக் வரலாற்றில்...