கடலோரங்களில் உள்ள அலையாத்தி காடுகள் வெறும் மரங்கள் அல்ல, நமது காலநிலையின் உயிர்நாடி: இயற்கையை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உறுதி

சென்னை: தமிழ்நாடு அரசு முதல் அலையாத்தி காடுகள் மாநாட்டினை நேற்று மகாபலிபுரத்தில் நடத்தியது. வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணப்பன், ‘தமிழ்நாட்டின் அலையாத்தி பயணம்’ எனும் விரிவான அறிக்கையை வெளியிட்டார். இந்தியாவிற்கான ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட தலைவர் பாலகிருஷ்ண பிசுபதி, சௌமியா சுவாமிநாதன், எரிக் சோல்ஹெய்ம், நிர்மலா ராஜா, ரமேஷ் ராமச்சந்திரன்,...

வருமானத்தை மறைத்ததற்காக நடிகர் விஜய்க்கு அபராதமாக ரூ.1.5 கோடி விதித்தது சரிதான்: சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பரபரப்பு வாதம்

By Karthik Yash
9 hours ago

சென்னை: வருமானத்தை மறைத்ததாக கூறி நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. கடந்த 2016-17ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகை விஜய் தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே...

திமுக பொதுக்குழு முடிவின்படி 3 பேர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

By Karthik Yash
9 hours ago

சென்னை: சாலை விபத்தில் உயிரிழந்த மூன்று திமுக உறுப்பினர்கள் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.30 லட்சம் நிவாரண நிதியை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சாலை விபத்தில் மரணமடைந்த திருவாரூர் மாவட்டம் எம்.விக்னேஷ் - கடலூர் மேற்கு மாவட்டம் குப்புசாமி மற்றும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் கே.ஏ.ராம்பிரசாத் ஆகிய மூன்று குடும்பத்திற்கும் தி.மு.க. சார்பில்...

கோயம்பேடு மார்க்கெட்டில் நாளை முதல் அக்.5ம் தேதி வரை ஆயுதபூஜை சிறப்பு சந்தை: அமைச்சர் சேகர்பாபு தகவல்

By Karthik Yash
9 hours ago

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் வரும் 25ம் தேதி முதல் அக்.5ம் தேதி வரை ஆயுதபூஜை சிறப்பு சந்தை நடைபெற உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை, கோயம்பேடு அங்காடி நிர்வாக அலுவலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான சேகர்பாபு அங்காடி நிர்வாகத்திற்கென புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘இணையதள சேவை’யை...

‘கோவா’ சான்றிதழ்: வரும் 26ம் தேதி வரை நேரில் பெறலாம்

By Karthik Yash
9 hours ago

சென்னை: அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்வர்கள், வரும் 26ம் தேதி வரை தேர்ச்சி சான்றிதழை நேரில் பெற்றுக் கொள்ளலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்வர்கள், மண்டல விநியோக மையங்களில் செப்.26ம் தேதி...

நியோமேக்ஸில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் அக். 8ம் தேதிக்குள் புகார் அளிக்கலாம்

By Karthik Yash
9 hours ago

சென்னை: பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: உயர் நீதிமன்ற உத்தரவின்படி நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் பி லிமிடட் மற்றும் துணை நிறுவனங்களில் (1 +44) முதலீடு செய்து பாதிக்கப்பட்டு, இதுவரை புகார் அளிக்காத முதலீட்டாளர்கள் வரும் 8.10.2025க்குள் காவல் துணை கண்காணிப்பாளர், பொருளாதார குற்றப்பிரிவு, நியோமேக்ஸ் (எஸ்ஐடி), சங்கரபாண்டியன் நகர், தபால்தந்தி நகர் விரிவாக்கம்,...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

By Karthik Yash
9 hours ago

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியும் கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் உள்ள அவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்...

தொலைநிலை பள்ளி மாணவர்களுக்கு அக்.14ல் பொதுத்தேர்வு: தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் அறிவிப்பு

By Karthik Yash
9 hours ago

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் பள்ளிக்கல்வியை தொலைநிலை வழியில் பயிற்றுவித்து வருகிறது. அதனுடன், திறன் மேம்பாட்டுக்கான தொழிற் படிப்புகளையும் வழங்குகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவர்கள் இதன் வாயிலாக பலன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுக்கால அட்டவணையை என்ஐஒஎஸ் வெளியிட்டுள்ளது....

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி டிப்ளமோ மருத்துவ பட்டயப்படிப்பு: விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

By Karthik Yash
9 hours ago

சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி டிப்ளமோ மருத்துவ பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2025-2026-ம் கல்வியாண்டிற்கு, சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு ஆயுஷ் துணை மருத்துவ படிப்பு பள்ளிகளில் உள்ள இடங்களுக்கான பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் தகுதியுள்ளவர்களிடம் இருந்து...

அக். 14ம் தேதி சட்டப்பேரவை கூட்டம்: சபாநாயகர் மு.அப்பாவு அறிவிப்பு

By Karthik Yash
9 hours ago

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் அக்டோபர் 14ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி 6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால், இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது உரையை வாசிக்காமல் சென்றுவிட்டார்....