தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக நாளை முதல் டி.20 போட்டி; கட்டாக்கில் இந்திய அணியுடன் இணைந்த சுப்மன் கில்: ஹர்திக் பாண்டியா தனியாக தீவிர பயிற்சி

கட்டாக்: தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 2-0 என தென் ஆப்ரிக்கா கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது. தொடர்ந்து நடந்த 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் இந்தியாவும், ராய்ப்பூரில் நடந்த 2வது போட்டியில் தென்ஆப்ரிக்காவும் வென்றன....

பார்முலா-1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லாண்டோ நோரிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்

By MuthuKumar
08 Dec 2025

பார்முலா-1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லாண்டோ நோரிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். நடப்பு ஆண்டில் 24 சுற்றுகளாக கிராண்ட் பிரீ பார்முலா-1 கார் பந்தயம் நடைபெற்றது. 24 சுற்றுகள் முடிவில் லாண்டோ நோரிஸ் 423 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை கைபற்றினார். பார்முலா-1 அரங்கில் முதல் முறையாக லாண்டோ நோரிஸ் உலக சாம்பியன்...

கவுகாத்தி மாஸ்டர் பேட்மின்டன் சன்ஸ்கார் சாம்பியன்: மிதுனை வீழ்த்தி சாகசம்

By Arun Kumar
07 Dec 2025

  கவுகாத்தி: கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மின்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சன்ஸ்கார் சரஸ்வத், சக இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கவுகாத்தியில், கவுகாத்தி மாஸ்டர்ஸ் சூப்பர் 100 பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வந்தன. இதன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. அதில், இந்திய வீரர்கள்...

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து

By Arun Kumar
07 Dec 2025

  மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, பாலிவுட் இசையமைப்பாளர் பலாஷ் முச்சாலை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார். திருமண நாளன்று, மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் திருமணம் நின்றது. அதன் பின், பலாஷ் வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் மந்தனா வெளியிட்டுள்ள பதிவில்,...

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற சிம்ரன்

By Arun Kumar
07 Dec 2025

  தோஹா: உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிச் சுற்றுப் போட்டி கத்தாரின் தோஹா நகரில் நடந்தது. மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நடந்த ஒரு போட்டியில் இந்திய வீராங்கனை சிம்ரன்பிரீத் கவுர் பிரார், சிறப்பாக செயல்பட்டு தங்கப்பதக்கம் வென்றார். ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் பிரிவில் அய்ஸ்வரி பிரதாப் சிங்...

கேரம் உலகக் கோப்பை காசிமேடு கீர்த்தனாவுக்கு மூன்று தங்க பதக்கம்: காசிமேடு காஸிமாவும் அசத்தல்

By Arun Kumar
07 Dec 2025

  மாலே: மாலத்தீவில் நடந்த உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை காசிமேட்டை சேர்ந்த கீர்த்தனா, 3 தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார். மாலத்தீவின் மாலே நகரில் 7வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் சென்னை காசிமேட்டை சேர்ந்த கீர்த்தனா, காஸிமா உள்ளிட்ட இந்திய வீராங்கனைகள், வெளிநாடுகளை சேர்ந்த வீராங்கனைகள்...

எம்எல்எஸ் கோப்பை கால்பந்து மெஸ்ஸி மெஸ்மரிசம் மயாமி சாம்பியன்: மண் கவ்விய முல்லரின் வான்கூவர்

By Arun Kumar
07 Dec 2025

  புளோரிடா: எம்எல்எஸ் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மயாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணியை வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மேஜர் லீக் சாக்கர் (எம்எல்எஸ்) கோப்பை கால்பந்து போட்டிகள் அமெரிக்காவில் நடந்து வந்தன. இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை...

ஆடவர் ஜூனியர் உலக ஹாக்கி பைனலில் ஜெர்மனி, ஸ்பெயின்

By Arun Kumar
07 Dec 2025

  சென்னை: சென்னையில் நேற்று நடந்த ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி முதல் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின்-அர்ஜென்டினா அணிகள் மோதின. இப்போட்டியில் சிறப்பாக ஆடிய ஸ்பெயின் அணி, 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் இந்தியா, 7 முறை பட்டம் வென்றுள்ள நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணியுடன்...

வந்த மண்ணில் நொந்த இங்கிலாந்து; ஆஷஸ் தொடரில் ஆஸி 2வது வெற்றி; 8 விக். வித்தியாசத்தில் அபாரம்

By Arun Kumar
07 Dec 2025

  பிரிஸ்பேன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றியை பதிவு செய்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸி அபார வெற்றி...

ஹவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சன்ஸ்கர் சரஸ்வத் வெற்றி

By Suresh
07 Dec 2025

ஹவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சன்ஸ்கர் சரஸ்வத் வெற்றி பெற்றார். மற்றொரு இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத்தை 21-11, 17-21, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். ஹவுகாத்தி மாஸ்டர் மகளிர் ஒற்றையர் பிரிவில் தைவான் வீராங்கனை சியோ-டோங்விடம் 18-21,18-21 என்ற செட் கணக்கில் இந்திய வீராங்கனை தன்வி சர்மா...