ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி; சென்னை, மதுரையில் இன்று துவக்கம்: இந்தியா முதல் போட்டியில் சிலியுடன் மோதல்
சென்னை: ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் சென்னை மற்றும் மதுரையில் இன்று தொடங்குகிறது. 21 வயதுக்குட்பட்டவருக்கான 14வது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி சென்னை மற்றும் மதுரையில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரை நடத்தும் வாய்ப்பை முதல்முறையாக தமிழ்நாடு பெற்று உள்ளது. இதுவரை 16 நாடுகள் பங்கேற்று...
டபிள்யூ.பி.எல் ஜனவரி 9ம் தேதி தொடக்கம்: தீப்தி சர்மாவை ரூ.3.20 கோடிக்கு வாங்கியது உ.பி.
டெல்லி: இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் போல் மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்) போட்டி நடந்து வருகிறது. மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்ரஸ் பெங்களூர், டெல்லி கேபிலட்ஸ்,உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயின்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கும் மகளிர் பிரிமீயர் போட்டி 4வது தொடர் அடுத்தாண்டு ஜனவரி 9ம் தேதி தொடங்கி பிப்ரவரி 5ம் தேதி...
சொந்த மண்ணில் அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்கள் ஒயிட்வாஷ்; இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கம்பீர் நீக்கமா..? பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு
மும்பை: இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் என்றால், வெளிநாடு வீரார்கள் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்க்கொள்ளவே பயந்தனர். ஆனால், இன்றோ இந்திய அணி வீரர்கள் வெளிநாட்டு சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து டெஸ்ட் தொடரை பறிகொடுத்து வருகின்றனர். இதனால், இந்திய கிரிக்கெட் அணி 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமல் வீறுநடை...
சொந்த மண்ணில் டெஸ்ட்டில் ஒயிட்வாஷ்; கடினமான அட்டவணை தான் இந்தியாவின் தோல்விக்கு காரணம்: முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேட்டி
கவுகாத்தி: தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த 2வது டெஸ்ட்டில் இந்தியா 408 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து 2-0 என ஒயிட்வாஷ் ஆனது. வரலாற்றில் மிகவும் மோசமான தோல்வியை இந்தியா சந்தித்துள்ளதால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான சொந்த மண்ணில் படுதோல்வியால் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும்...
408 ரன் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி: டெஸ்ட் தொடரை வென்று தெ.ஆ வரலாற்று சாதனை
கவுகாத்தி: இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி, 408 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 30...
யு-19 உலக டேபிள்டென்னிஸ்: வெள்ளி வென்ற இந்தியா
கிளஜ், நபோகா: ரோமானியாவின் கிளஜ்-நபோகா நகரில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான, உலக இளையோர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் பங்கேற்ற அங்குர் பட்டாச்சார்ஜீ, பிரியனுஜ் பட்டாச்சார்யா, அபிநந்த் ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் அணி, நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஜப்பானுடன் 5 போட்டிகள் கொண்ட களத்தில் ஆடியது. இப்போட்டியில் ஜப்பான் வீரர்கள்...
2030ல் குஜராத்தில் காமன்வெல்த் போட்டிகள்
கிளாஸ்கோ: வரும் 2030ம் ஆண்டு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடத்தும் உரிமையை, காமன்வெல்த் விளையாட்டு பொதுக்குழு நேற்று முறைப்படி அளித்தது. இதற்கு முன், கடந்த 2010ம் ஆண்டு, டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்துள்ளன. 20 ஆண்டுகளுக்கு பின் இப்போட்டிகள் மீண்டும் இந்தியாவில் நடைபெற உள்ளன. ...
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனாவை பந்தாடி செல்சீ அசத்தல் வெற்றி
லண்டன்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட போட்டியில் பார்சிலோனா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் செல்சீ அணி அபாரமாக வெற்றி வாகை சூடியுள்ளது. யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட போட்டிகள் லண்டனில் நடந்தன. பலம் வாய்ந்த பார்சிலோனா - செல்சீ அணிகள் இடையே நடந்த போட்டியில் செல்சீ அணி துவக்கம் முதல் ஆக்ரோஷமாக ஆடி கோல்...
செஸ் உலக கோப்பை சிண்டாரோ சாம்பியன்
அர்போரா: கோவாவில் செஸ் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வந்தன. இதில் சிறப்பாக செயல்பட்ட உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் ஜவோகிர் சிண்டாரோ, சீனாவின் வெ யி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர்கள் இடையே கடந்த 24 மற்றும் 25 தேதிகளில் நடந்த இரு போட்டிகளும் டிராவில் முடிந்தன. அதையடுத்து, இருவரும், நேற்று நடந்த டைபிரேக்கர்...