ஐபிஎல் போட்டிகளில் ஆந்த்ரே ரஸல் ஓய்வு
கொல்கத்தா: ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக கடந்த 2014ம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆந்த்ரே ரஸல் (37) ஆடி வந்தார். இம்மாதம் 16ம் தேதி ஐபிஎல் ஏலம் துவங்கவுள்ள நிலையில், ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக ரஸல் அறிவித்துள்ளார். மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பவர் கோச் ஆக அவர்...
ஸ்குவாஷ் போட்டிகள் சென்னையில் துவக்கம்
சென்னை: ஹெச்சிஎல் ஸ்குவாஷ் இந்தியன் டூர் 4 போட்டிகள், சென்னையில் இன்று துவங்குகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இப்போட்டியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த நட்சத்திர வீரர், வீராங்கனைகள் பங்கு பெறுகின்றனர். இந்தியாவை சேர்ந்த முன்னாள் உலக நம்பர் 10 வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, ஆடவர் பிரிவில் உலகின் 51ம் நிலை வீரர் வீர் சோத்ரானி,...
எம்எல்எஸ் கோப்பை கால்பந்து பைனலில் மெஸ்ஸி அணி
ஃபோர்ட் லாடர்டேல்: மேஜர் லீக் சாக்கர் (எம்எல்எஸ்) கோப்பைக்கான கால்பந்து இறுதிக்கு தகுதி பெறுவதற்கான போட்டிகள் ஈஸ்டர்ன் மற்றும் வெஸ்டர்ன் கான்பரன்ஸ் கால்பந்தாட்ட அணிகள் இடையே நடந்தன. இதன் இறுதிப் போட்டி ஒன்றில், அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மயாமி அணியும், நியூயார்க் சிட்டி எப்சி அணியும் மோதின. இப்போட்டியில் இன்டர்மயாமி அணி,...
சையத் முஷ்டாக் அலி டி20 தடையற தாக்கி தமிழ்நாடு வெற்றி
அகமதாபாத்: சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் நேற்று, தமிழ்நாடு - உத்தரகாண்ட் அணிகள் மோதின. முதலில் ஆடிய உத்தரகாண்ட், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது. அந்த அணியில் யுவராஜ் சவுத்ரி 74, கேப்டன் குணால் சந்தேலா 47 ரன் எடுத்தனர். பின்னர், 165 ரன் இலக்குடன்...
தெ.ஆ உடன் முதல் ஓடிஐ இந்தியா அட்டகாச வெற்றி
ராஞ்சி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில், விராட் கோஹ்லி, ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால், 17 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா - தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. ராஞ்சியில் நேற்று நடந்த...
சதங்களின் ராஜா கிங் கோஹ்லி: ஒரு நாள் போட்டிகளில் ரோகித் உலக சாதனை: 352 சிக்சர்கள் விளாசல்
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா, 51 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 57 ரன் குவித்து ஆட்டமிழந்தார். இந்த 3 சிக்சர்களுடன் சேர்த்து, 269 ஒரு நாள் போட்டி இன்னிங்ஸ்களில் ரோகித் விளாசிய சிக்சர் எண்ணிக்கை 352...
ஜூனியர் உலக ஹாக்கி அப்பாடா... வென்றது ஜப்பான்: திரில்லரில் சீனா போராடி தோல்வி
சென்னை: உலகக்கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டிகள், சென்னை, மதுரை நகரங்களில் நடந்து வருகின்றன. சென்னையில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் ஜப்பான் - சீனா அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடிவந்த நிலையில், போட்டியின் 11வது நிமிடத்தில் சீன வீரர் நிங் டோங்ஜுன் முதல் கோல் போட்டு கணக்கை துவக்கி...
ஓடிஐயில் 52வது மிரட்டல் 100
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் அதிரடியாக ஆடிய கிங் கோஹ்லி, 102 பந்துகளில், தனது 52வது சதத்தை விளாசினார். இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் உலகில் ஏதாவது ஒரு வகை போட்டியில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை நெடுங்காலமாக வகித்து வந்த சச்சின் டெண்டுல்கரை, விராட்...
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
ராஞ்சி: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களுக்கு 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆட்டமிழந்து...