பாலக்காடு அருகே தோட்டபயிர்களை சேதப்படுத்திய 50 காட்டுப்பன்றிகள் சுட்டுக்கொல்லப்பட்டன
பாலக்காடு: பாலக்காடு அருகே தோட்டப்பயிர்களை சேதப்படுத்திய 50 காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் தாலுகா வாணியம்குளம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட 6,7,9,12,13 ஆகிய வார்டுகளின் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. அங்கு விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழை, கிழங்கு வகைகள், ஊடுப்பயிர்கள், சேனை, சேம்பு ஆகியவற்றை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தின. திடீரென...
மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் கம்பீரமாக நடந்து சென்ற பாகுபலி யானை
மேட்டுப்பாளையம்: நீண்ட நாட்களுக்கு பின்னர் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் பாகுபலி யானை கம்பீரமாக நடந்து சென்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, ஓடந்துறை, பாலப்பட்டி, வச்சினம்பாளையம், சிறுமுகை, லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது....
எந்த அடிப்படையில் தேசிய விருது வழங்கப்படுகிறது?: தேசிய திரைப்பட விருதுகள் குழுவுக்கு நடிகை ஊர்வசி கண்டனம்
சென்னை: இந்தியாவில் 71வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. 2023ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 'உள்ளொழுக்கு' சிறந்த மலையாள படமாக தேர்வு செய்யப்பட்டு இதில் நடித்த ஊர்வசிக்கு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. 'தி கேரளா ஸ்டோரி' என்ற மலையாள மொழி படத்தை இயக்கிய சுதீப்தோ...
இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி..!!
இங்கிலாந்து: இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் 6 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்து 6 ரன்கள் வித்தியாசத்தில்...
சுதா எம்.பி. செயின் பறிப்பு விவகாரம்.. தலைநகரின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது: செல்வப்பெருந்தகை காட்டம்!
சென்னை: சுதா எம்.பி. செயின் பறிப்பு விவகாரத்தில் தலைநகரின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது; மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஆர்.சுதா எம்.பி., அவர்கள் மீது நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும்...
"அன்புமணி கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியாதவர் என்று நிரூபித்திருக்கிறார்" - ஆதாரங்களுடன் பதிலளித்துள்ள அமைச்சர் துரை முருகன்
சென்னை: 'தன் தந்தையை எதிர்த்து திக் விஜயம் செய்ய புறப்பட்டிருக்கிற அன்புமணிக்கு ஒரு சிறிய வேண்டுகோள், இனிமேலாவது பேசுவதற்கு முன், யாராவது விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது' என அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த அன்புமணி தன்னுடைய தந்தையான...
SSC தேர்வு நடைமுறைகள் திருத்தப்பட்டு எளிதாக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடிக்கு சு.வெங்கடேசன் கடிதம்
மதுரை: SSC தேர்வு நடைமுறைகள் திருத்தப்பட்டு எளிதாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். பொறுப்பற்ற நடவடிக்கை. நெல்லை, கோவை, வேலூர் மற்றும் புதுச்சேரியில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையங்கள் இறுதிப்பட்டியலில் இல்லை.மதுரை, திருச்சி, சென்னை ஆகிய நகரங்களில் உள்ள தேர்வு மையங்களை தேர்வு செய்த தொல்லியல் துறை மாணவர்களுக்கு ஆந்திராவில்...
தமிழக டிஜிபி நியமனம் தொடர்பான விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது: ஐகோர்ட் மதுரை கிளை!
மதுரை: தமிழக டிஜிபி நியமனம் தொடர்பான விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் யாசர் அராபத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால், ஆக. 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இவருக்கு பிறகு டிஜிபியாக நியமிக்க வேண்டிய...
வறுமை துரத்துவதால் மருத்துவம் படிக்க போராடும் மாணவி: மாணவி பூமாரியின் மருத்துவப் படிப்புக்கு அரசு உதவ கோரிக்கை
விருதுநகர்: விறகு வெட்டி குடும்பத்தை காப்பாற்றும் பெண் தொழிலாளியின் மகள் MBBS படிக்க தேர்வாகி உள்ளார். அவரது மருத்துவ கனவை நினைவாக்க அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகில் உள்ள புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மாணவி பூமாரி. தந்தையை இழந்ததால் அவரது தாய் பொன்னழகு, விறகு வெட்டி...