வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
டெல்லி: வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ஆர்.பி.ஐ. கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாக நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஆர்.பி.ஐ., வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம், ரெப்போ வட்டி விகிதம் எனப்படும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதம்...
விபத்தில் இறந்த என்.எல்.சி. பொறியாளர் குடும்பத்திற்கு ரூ. 2.16 கோடி நஷ்ட ஈடு: கடலூர் கோர்ட் உத்தரவு
கடலூர்: நெய்வேலி பிளாக்-13 சேர்ந்தவர் பழனி. என்எல்சி இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 -ம் தேதி நெய்வேலி மகாத்மா காந்தி சாலை பிளாக் 18 ஓ.பி.சி அலுவலகம் எதிரில் இருசக்கர வாகனத்தில் பழனி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே பழனி...
மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் நீண்டநேரம் திறக்கப்படாததால் ரயிலை மறித்து பொதுமக்கள் போராட்டம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் நீண்டநேரம் திறக்கப்படாததால் பொதுமக்கள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. மீஞ்சூர் முதல் காட்டூர் வரையிலான சாலைக்கு இந்த...
இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிய ஒரே அரசு திராவிட மாடல் அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை: இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிய ஒரே அரசு திராவிட மாடல் அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 'இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ஆம் ஆண்டில். அப்போது கலைஞர் ஆட்சி' என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; "இந்தியாவிலேயே இரட்டை இலக்க...
பிரதமர் மோடி-அதிபர் மார்கோஸ் சந்திப்பு இந்தியா-பிலிப்பைன்ஸ் இடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது: நேரடி விமான சேவை தொடங்கவும் ஒப்புதல்
புதுடெல்லி: இந்தியா, பிலிப்பைன்ஸ் இடையேயான தூதரக உறவு 75 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் 5 நாள் அரசு முறை பயணமாக டெல்லி வந்துள்ளார். ஜனாதிபதி மாளிகைக்கு நேற்று வந்த அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி இருவரும் அதிபர் மார்கோசை வரவேற்றனர். இதைத்...
அரசு திட்டங்களில் தலைவர்கள் படம் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
புதுடெல்லி: தமிழ்நாட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்த விளம்பரங்களில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு திட்டங்களில் அரசியல் தலைவர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் பயன்படுத்த தடை விதிக்கக்கோரி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருத்தார். மேற்கண்ட வழக்கு விசாரித்த...
ராகுலை கண்டித்த உச்ச நீதிமன்றம் உண்மையான இந்தியர் யார் என நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது: பிரியங்கா காந்தி பதிலடி
புதுடெல்லி: கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்லையில் சீனா 2,000 சதுர கிமீ நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளதாக கூறினார். இதுதொடர்பான வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘உண்மையான இந்தியர் இப்படி பேச மாட்டார்’ என கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து...
நல்ல வர்த்தக கூட்டாளியாக இல்லாத இந்தியா மீது 24 மணி நேரத்தில் அதிக வரி விதிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்
நியூயார்க்: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த இந்தியா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என கடந்த மாதம் 31ம் தேதி அதிபர் டிரம்ப் அறிவித்தார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை வாங்கும் இந்தியாவுக்கு அபராதமும் விதிப்பதாக டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்....
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு விழிப்புணர்வோடு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை
சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், முந்தைய ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்திய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்றும்...