ராட்சத குடிநீர் தொட்டியில் உடைப்பு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன: கேரளாவில் இன்று காலை பரபரப்பு
திருவனந்தபுரம்: கொச்சி நகரின் மைய பகுதியில் 1.35 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி இன்று அதிகாலை திடீரென உடைந்ததில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தம்மனம் பகுதியில் குடிநீர் வழங்கல் வாரியத்தின் சார்பில் 1.35 கோடி கொள்ளளவு...
திருச்சி பீமநகரில் இளைஞர் படுகொலை சம்பவத்தில் ஒருவர் கைது!!
திருச்சிராப்பள்ளி: திருச்சி பீமநகரில் தாமரைச்செல்வன் என்ற இளைஞர் படுகொலை சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்க வந்தவர்களிடமிருந்து தப்பிக்க காவலர் குடியிருப்புக்குள் நுழைந்த இளைஞர் படுகொலை சம்பவமானது நிகழ்ந்து இருக்கிறது. திருச்சி, பீமநகர் பகுதியில் இன்று காலையில் அதே பகுதியை சேர்ந்த 25 வயது தாமரைச்செல்வன் என்ற இளைஞரை 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி...
டாஸ்மாக் வழக்கு: தொழிலதிபர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த அவமதிப்பு வழக்குக்கு தடை கோரிய ED மனு தள்ளுபடி
டெல்லி: டாஸ்மாக் வழக்கில் தொழிலதிபர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த அவமதிப்பு வழக்குக்கு தடை கோரிய ED மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் டாஸ்மாக் வழக்கு தொடர்பாக தொழிலதிபர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு தொடர்ந்தார்....
தமிழ்நாட்டில் நாளை முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்...
பெயர், படம், குரலை பயன்படுத்த தடை கோரி நடிகையான எம்பி ஜெயா பச்சன் ஐகோர்ட்டில் மனு: அமேசான், பேஸ்புக் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
புதுடெல்லி: தனது பெயர், புகைப்படம் மற்றும் குரலை வர்த்தக நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி நடிகையும், எம்.பி.யுமான ஜெயா பச்சன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சமீப காலமாக, பாலிவுட் பிரபலங்கள் தங்களின் பெயர், புகைப்படம், குரல் உள்ளிட்ட தனிப்பட்ட அடையாளங்களை, தங்களின் அனுமதியின்றி வர்த்தக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை எதிர்த்து நீதிமன்றத்தை...
தன்னை தேர்வு செய்த பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு தேர்தல் ஆணையரின் நன்றிக்கடன்தான் எஸ்ஐஆர்: சபாநாயகர் அப்பாவு காட்டம்
நெல்லை: தமிழக சபாநாயகர் அப்பாவு நெல்லையில் இன்று அளித்த பேட்டி:அவசர கோலத்தில் வாக்காளர் திருத்த பட்டியல் தயாரிக்க சொல்லியுள்ளனர். ஒட்டு மொத்தமாக இந்திய அளவில் தேவையில்லாத விஷயம். பாரத பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் 2016 நவ.8ல் ரூ.1000 நோட்டு செல்லாது என்றார். 2021 மே 19ம் தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு...
ஈரோடு மாவட்டம் பவானியில் கடத்தப்பட்ட குழந்தை 25 நாட்களுக்கு பிறகு மீட்பு..!!
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானியில் கடத்தப்பட்ட குழந்தை 25 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. ஈரோடு சித்தோடு பகுதியில் உள்ள லட்சுமி நகரில் சேலம் – கொச்சின் நெடுஞ்சாலையில் இருக்கும் மேம்பாலத்தின் கீழ் ஆந்திராவை சேர்ந்த கூலி தொழிலாளர் தம்பதி வெங்கடேஷ், கீர்த்தனா வசித்து வந்தனர். இவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை வந்தனா கடந்த...
குர்ஆன் மீது சத்தியம் செய்து சொல்கிறேன்... பாஜகவுடன் கூட்டணி அமைக்க கெஞ்சினேனா?: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஆவேசம்
ஸ்ரீநகர்: பாஜகவுடன் கூட்டணி அமைக்க முயன்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, குர்ஆன் மீது சத்தியம் செய்து திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஜம்மு - காஷ்மீரில் புட்காம் மற்றும் நக்ரோட்டா சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், பாஜக தலைவர் சுனில் சர்மா கூறுகையில், ‘2014 மற்றும் 2024...
தேசிய நெடுஞ்சாலைகளில் எத்தனை தாபாக்கள் உள்ளது? அறிக்கை தாக்கல் செய்ய போக்குவரத்து அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் எத்தனை தாபாக்கள் உள்ளது? என்பதை கணக்கிட்டு அறிக்கை தாக்கல் செய்ய போக்குவரத்து அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானாவில் நவம்பர்.3ல் சாலை விபத்தில் 20 பேர், ராஜஸ்தானில் 18 பேர் உயிரிழந்தது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த...