தமிழ்நாட்டில் நாளை முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்...
பெயர், படம், குரலை பயன்படுத்த தடை கோரி நடிகையான எம்பி ஜெயா பச்சன் ஐகோர்ட்டில் மனு: அமேசான், பேஸ்புக் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
புதுடெல்லி: தனது பெயர், புகைப்படம் மற்றும் குரலை வர்த்தக நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி நடிகையும், எம்.பி.யுமான ஜெயா பச்சன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சமீப காலமாக, பாலிவுட் பிரபலங்கள் தங்களின் பெயர், புகைப்படம், குரல் உள்ளிட்ட தனிப்பட்ட அடையாளங்களை, தங்களின் அனுமதியின்றி வர்த்தக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை எதிர்த்து நீதிமன்றத்தை...
தன்னை தேர்வு செய்த பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு தேர்தல் ஆணையரின் நன்றிக்கடன்தான் எஸ்ஐஆர்: சபாநாயகர் அப்பாவு காட்டம்
நெல்லை: தமிழக சபாநாயகர் அப்பாவு நெல்லையில் இன்று அளித்த பேட்டி:அவசர கோலத்தில் வாக்காளர் திருத்த பட்டியல் தயாரிக்க சொல்லியுள்ளனர். ஒட்டு மொத்தமாக இந்திய அளவில் தேவையில்லாத விஷயம். பாரத பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் 2016 நவ.8ல் ரூ.1000 நோட்டு செல்லாது என்றார். 2021 மே 19ம் தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு...
ஈரோடு மாவட்டம் பவானியில் கடத்தப்பட்ட குழந்தை 25 நாட்களுக்கு பிறகு மீட்பு..!!
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானியில் கடத்தப்பட்ட குழந்தை 25 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. ஈரோடு சித்தோடு பகுதியில் உள்ள லட்சுமி நகரில் சேலம் – கொச்சின் நெடுஞ்சாலையில் இருக்கும் மேம்பாலத்தின் கீழ் ஆந்திராவை சேர்ந்த கூலி தொழிலாளர் தம்பதி வெங்கடேஷ், கீர்த்தனா வசித்து வந்தனர். இவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை வந்தனா கடந்த...
குர்ஆன் மீது சத்தியம் செய்து சொல்கிறேன்... பாஜகவுடன் கூட்டணி அமைக்க கெஞ்சினேனா?: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஆவேசம்
ஸ்ரீநகர்: பாஜகவுடன் கூட்டணி அமைக்க முயன்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, குர்ஆன் மீது சத்தியம் செய்து திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஜம்மு - காஷ்மீரில் புட்காம் மற்றும் நக்ரோட்டா சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், பாஜக தலைவர் சுனில் சர்மா கூறுகையில், ‘2014 மற்றும் 2024...
தேசிய நெடுஞ்சாலைகளில் எத்தனை தாபாக்கள் உள்ளது? அறிக்கை தாக்கல் செய்ய போக்குவரத்து அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் எத்தனை தாபாக்கள் உள்ளது? என்பதை கணக்கிட்டு அறிக்கை தாக்கல் செய்ய போக்குவரத்து அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானாவில் நவம்பர்.3ல் சாலை விபத்தில் 20 பேர், ராஜஸ்தானில் 18 பேர் உயிரிழந்தது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த...
காரைக்கால் மீனவர்கள் 3 பேருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!!
காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் 3 பேருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எல்லை பகுதியில் தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களின் படகுகளை சேதப்படுத்துவது, படகுகள் மற்றும் மீனவர்களை சிறைபிடித்து செல்வது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளது....
அசைவ உணவு சாப்பிட்டதாக திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்..!!
ஆந்திரா: அசைவ உணவு சாப்பிட்டதாக திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பதி ஏழுமலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள அலிபிரி பகுதியில், தேவஸ்தானத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 2 ஊழியர்கள் அசைவ உணவு சாப்பிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருமலை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேலும் 5 மனுக்கள் தாக்கல்..!!
டெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேலும் 5 மனுக்கள் கூடுதலாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் திமுக ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொண்டபோது பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாகவும் இதற்கு எதிரான வழக்கில்...