மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா 20ம் தேதி தொடக்கம்: செப்.1ல் சுவாமிக்கு பட்டாபிஷேகம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா வரும் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி செப்.1ம் தேதி சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.மதுரையில் உலகப்புகழ் பெற்ற மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுந்தரேஸ்வரரின் திருவிளையாடல்களை விவரிக்கும் ஆவணி மூலத்திருவிழா வரும் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று முதல் செப்.6ம் தேதி வரை கோயிலின்...
மயிலாடுதுறை, புதுகையில் பாபநாசத்தில் பலத்த மழை 3,000 நெல்மூட்டைகள் சேதம்
மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஒரு சில மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இந்நிலையில் நேற்று இரவு மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பொழிந்தது. குறிப்பாக நகர் பகுதிகளில் 2 மணி நேரம் மழை கொட்டியது. இதேபோல் குத்தாலம், பாலாக்குடி, வில்லியநல்லூர், நீடூர், மணல்மேடு, பட்டவர்த்தி செம்பனார்கோயில், ஆக்கூர், திருக்கடையூர்,...
கொல்லிமலை மலைப்பாதையில் விபத்து; 20 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து டிரைவர் பலி: 7 மாணவர்கள் படுகாயம்
சேந்தமங்கலம்: கொல்லிமலை மலைப்பாதையில் 2வது கொண்டை ஊசி வளைவு அருகே 20 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து டிரைவர் உயிரிழந்தார். கல்லூரி மாணவர்கள் 7 பேர் படுகாயமடைந்தனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர் நாடு செல்லிப்பட்டியை சேர்ந்தவர் குழந்தையன் மகன் ஜெயக்குமார் (23). சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று சேந்தமங்கலம் அரசு...
மாநில பார் கவுன்சில்களில் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்: அகில இந்திய பார் கவுன்சில் அறிவுறுத்தல்
சென்னை: அகில இந்திய பார்கவுன்சில் முதன்மை செயலாளர் மந்த்ரோ சென் அனைத்து மாநில பார்கவுன்சில் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வழக்கறிஞர்கள் சட்டம் மற்றும் அகில இந்திய பார்கவுன்சில் விதிகளின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படாத மாநில பார்கவுன்சில்களின் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தொடங்க வேண்டும். பார்கவுன்சிலில் பதிவு செய்த மொத்த வழக்கறிஞர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில்...
கேரளாவில் பரபரப்பு; பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் கலாபவன் நவாஸ் மர்மசாவு: போலீசார் விசாரணை
திருவனந்தபுரம்: எர்ணாகுளம் அருகே சோட்டானிக்கரையில் பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் கலாபவன் நவாஸ் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மலையாள சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் கலாபவன் நவாஸ் (51). கேரளாவில் பிரபலமான கலாபவன் குழுவில் மிமிக்ரி கலைஞராக இருந்த இவர், பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இந்த...
கேரளா ஸ்டோரி படத்திற்கு விருதா? தேசிய விருதுக்குழு கேரளாவை அவமதித்துள்ளது: கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து
திருவனந்தபுரம்: தி கேரளா ஸ்டோரி படத்திற்கு விருது வழங்கியதின் மூலம் தேசிய விருதுக்குழு கேரளாவை அவமதித்துள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 71வது தேசிய சினிமா விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு சிறந்த இயக்குனர் மற்றும் கேமராமேன் விருது கிடைத்துள்ளது. இந்த படத்தை வெளியிடுவதற்கு ஏற்கனவே கேரளாவில்...
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; அன்புமணி பேச்சு
திருவள்ளூர்: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று அன்புமணி கூறினார்.‘’தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’’ என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை திருவள்ளூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு தன்னுடைய நடைபயணத்தை மேற்கொண்டார். இதற்கு மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார் தலைமை...
தெலங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதி ஆட்சியில் செம்மறி ஆடு விநியோகத்தில் ரூ.1,000 கோடி ஊழல்: அமலாக்க துறை அறிக்கை
திருமலை: தெலங்கானாவில் சந்திரசேகரராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி ஆட்சியின்போது செம்மறி ஆடு விநியோக திட்டத்தில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது. தெலங்கானாவில் ரேவந்த்ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, சந்திரசேகராவ் அரசின்போது கால்நடை துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய கல்யாண்குமார், கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்திற்கு சென்று...
நாளை சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!
சென்னை: நாளை சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் 3.8.2025 அன்று காலை 10.00 மணியளவில்...