அரசு மருத்துவர்கள் சங்க தலைவரின் பணியிட மாற்றத்திற்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: மருத்துவமனைகளில், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும், ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் பெருமாள் பிள்ளை சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி கடந்த ஜூன் 11ம் தேதி முதல் 19ம் தேதி வரை பாதயாத்திரை மேற்கொண்டார்....
தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்; குழந்தைகள் உள்பட 30 பேர் பலி: பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் விமானப்படை சொந்த நாட்டு மக்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில், தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் டிடிபி அமைப்புடனான போர் நிறுத்தம் முறிந்ததில்...
தன்னை திருமணம் செய்து நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றியதாக புகார்; பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவிடம் துணை கமிஷனர் வனிதா விசாரணை
சென்னை: தன்னை திருமணம் செய்து நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டதாக அளித்த புகாரின் மீது இன்று பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவிடம் பெண் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் துணை கமிஷனர் வனிதா விசாரணை நடத்தி வருகிறார். அவரிடம் திருமணம் செய்தது குறித்தும், கருகலைப்பு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கேள்வி பட்டியலை வைத்து...
தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.45.21 கோடி செலவில் 50,000 கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார்
சென்னை: தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.45.21 கோடி செலவில் 50,000 கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை அமைச்சர் சி.வி.கணேசன் இன்று தொடங்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் 2030ம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உருவாக வேண்டும் என பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதற்கேற்ப, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில்...
ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மைய அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மைய அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து, அலுவலகத்தில் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்தியா முழுவதுமே அண்மையில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு...
70 முறைக்கு மேல் வடகிழக்கு மாநிலங்களுக்குத் தான் வந்துள்ளேன்: பிரதமர் மோடி பேச்சு
இடாநகர்: 70 முறைக்கு மேல் வடகிழக்கு மாநிலங்களுக்குத் தான் வந்துள்ளேன் ஏன் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா மாநிலங்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் ரூ.5,100 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின்னர் வர்த்தகர்கள் மற்றும் வரி செலுத்துவோர் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளுடன்...
பாஜக தான் விஜயை இயக்குவதாக தெரிகிறது: சபாநாயகர் அப்பாவு பேட்டி
நெல்லை: பாஜக தான் விஜயை இயக்குவதாக தெரிகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்:- மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மீண்டும் மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சராக வருவார் என்று நினைக்கிறார்கள். இந்த ஆட்சி தொடர்ந்து இருக்கும் என்று மக்கள் கருதுகிறார்கள். ஆனால், அதை...
திருச்செந்தூரில் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை
தூத்துக்குடி: திருச்செந்தூரில் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டுக்கு தெரியவந்ததை...
இரிடியம் மோசடி குறித்து சாமிநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்
மதுரை: ரூ.1000கோடி மதிப்பிலான இரிடியம் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான சாமிநாதன் மதுரையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இரிடியம் மோசடி வழக்கானது பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. குறிப்பாக ரூ.1 லட்சம் முதலீடு செய்தல் ரூ.1 கோடி வரை கிடைக்கப்படலாம் என பொதுமக்களை ஏமாற்றி பல லட்சம் முதலீடு செய்யவைத்து இவர்களை ஏமாற்றிவிட்டு தப்பி சென்றனர். இந்த விவகாரம்...