சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நவம்பர் 14ம் தேதி வரை தமிழகத்தில்...
சென்னை வாலிபர் வெட்டிக் கொலை தந்தை, மகன் உள்பட 5 பேருக்கு ஆயுள்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே முன்விரோதம் காரணமாக சென்னை வாலிபரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.தூத்துக்குடி அருகேயுள்ள குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் பொன்நிமேஷ் (35). இவர், அப்போது சென்னையில் உள்ள...
சாலையில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா வேன்: 16 பயணிகள் தப்பினர்
தேனி: பெரியகுளம் அருகே குமுளி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வேனில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிலிருந்த 16 பயணிகளும் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து நேற்று மாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி சுற்றுலா வேன் சென்றுகொண்டிருந்தது. பெரியகுளம் அடுத்த...
காதலனுடன் சென்னை சென்று திரும்பிய பள்ளி மாணவியிடம் அத்துமீறல் காவலர் போக்சோவில் கைது: அதிரடி சஸ்பெண்ட்
திண்டிவனம்: திண்டிவனம் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவி மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு தெரியாமல் இருவரும் கடந்த 6ம் தேதி அதிகாலை 4 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்னைக்கு சென்றனர்....
மேட்டுப்பாளையத்தில் வனத்துறை ஜீப்பை தாக்க முயன்ற ‘பாகுபலி’ யானையால் பரபரப்பு: வனக்கல்லூரி கேட்டை உடைத்து புகுந்தது
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த பாகுபலி யானை வனத்துறை ஜீப்பை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, தாசம்பாளையம், நெல்லித்துறை, ஓடந்துறை, ஊமப்பாளையம், பாலப்பட்டி, வச்சினம்பாளையம், சிறுமுகை லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பாகுபலி என...
டெல்லியில் குருகிராம் அடுக்குமாடி குடியிருப்பில் 11-ம் வகுப்பு மாணவரை சக மாணவர் சுட்டதால் பரபரப்பு
டெல்லி: டெல்லியில் குருகிராம் அடுக்குமாடி குடியிருப்பில் 11-ம் வகுப்பு மாணவரை சக மாணவர் சுட்டத்தில் கழுத்தில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த மாணவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 11-ம் வகுப்பு மாணவரை சுட்ட சக மாணவர் உட்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து வந்து, சக மாணவரை சுட்டது...
தமிழ்நாட்டை எஸ்.ஐ.ஆர். என்னும் ஆபத்து சூழ்ந்துள்ளதால் பல கோடி மக்களின் வாக்குரிமை கேள்விக்குறி ஆகியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டை எஸ்.ஐ.ஆர். என்னும் ஆபத்து சூழ்ந்துள்ளதால் பல கோடி மக்களின் வாக்குரிமை கேள்விக்குறி ஆகியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க கண்ணூம் கருத்துமாக பணிபுரிய வேண்டும். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்னும் சதிவலையில் சிக்காமல் மக்களை காக்க வேண்டும் என முதல்வர் தனது சமூக வலைதள...
வேகமாக நிரம்பி வரும் ஏரிகள்; பாசன கால்வாய் வசதி இல்லாததால் நீரில் மூழ்கிய விளை நிலங்கள்: ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கால்வாய் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
திருத்தணி: பருவமழைக்கு திருத்தணி பகுதியில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நீர் பிடிப்பு பகுதிகளில் பாசன கால்வாய்கள் வசதி இல்லாததால், மழைநீர் வீணாகி, விளைநிலங்கள் நீரில் மூழ்குவதால், பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்று சிறப்பு பெற்ற திருவள்ளூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம்...
எழும்பூர் ரயில் நிலையம் சீரமைப்பு பணி; உழவன், அனந்தபுரி, சேது, குருவாயூர் எக்ஸ்பிரஸ் தாம்பரத்திலிருந்து புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி காரணமாக உழவன், அனந்தபுரி, சேது, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது, நாளை முதல் வரும் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூர் ரயில்...