2ம் கட்டமாக 122 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு; பீகாரில் பிரசாரம் ஓய்ந்தது: 14ம் தேதி தேர்தல் முடிவு அறிவிப்பு
பாட்னா: பீகாரில் 2ம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள 122 தொகுதிகளில் நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது. நாளை ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. வரும் 14ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பீகாரில் 243 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. இதில், 121 தொகுதிகளுக்கான...
சட்ட உதவி என்பது கருணை அல்ல; கட்டாயம்: உச்சநீதிமன்ற நீதிபதி வலியுறுத்தல்
புதுடெல்லி: இந்திய சிறைகளில் உள்ளவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர், குற்றம் நிரூபிக்கப்படாத விசாரணைக் கைதிகளாகவே உள்ளனர் என்று உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, இந்திய சிறைகளில் உள்ள மொத்த கைதிகளில் சுமார் 75.8% பேர் விசாரணைக் கைதிகளே ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் வறுமை மற்றும் விளிம்புநிலை...
இந்தியாவில் ‘ஹாலோவீன்’ கொண்டாட்டம் ‘பேய்’ வேடத்தில் ஆபீசை அலறவிட்ட பெண் ஊழியர்: இணையத்தில் வீடியோ வைரல்
புதுடெல்லி: அலுவலகத்தில் நடைபெற்ற ஹாலோவீன் கொண்டாட்டத்தில் பெண் ஒருவர் ‘மஞ்சுளிகா’ போல வேடமணிந்து வந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பிரம்மிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேற்கத்திய கலாசாரமான ‘ஹாலோவீன்’ கொண்டாட்டங்கள், தற்போது இந்திய பெருநகரங்களில் உள்ள அலுவலகங்களிலும் பிரபலமடைந்து வருகின்றன. இந்த கொண்டாட்டத்தின்போது, ஊழியர்கள் தங்களுக்குப் பிடித்தமான பேய் அல்லது கற்பனைக் கதாபாத்திரங்கள் போல வேடமணிந்து...
ஆவடி விமானப்படை பராமரிப்பு நிலையத்தில் ஏர்மார்ஷல் ஆய்வு
ஆவடி: ஆவடியில் இயங்கி வரும் இந்திய விமானப்படையின் பராமரிப்பு நிலையத்தில் நேற்று தளவாட பொருட்களின் வினியோகம், பராமரிப்பு பணிகளின் செயல்பாடுகள் மற்றும் தயார்நிலை குறித்து இந்திய விமானப்படையின் பராமரிப்பு பிரிவு தளபதியும் மூத்த அதிகாரியுமான ஏர்மார்ஷல் விஜய்குமார் கார்க் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அவருடன், அவரது மனைவியும், விமானப்படை குடும்ப நலச் சங்கத்...
திருவாலங்காடு அருகே நாதக பிரசார கூட்டத்தில் மின்கம்பத்தில் கொக்கி போட்டு மின்சாரம் திருட்டு
திருத்தணி: திருவாலங்காடு அருகே நாதக பிரசார கூட்டத்தில் மின்கம்பத்தில் கொக்கி போட்டு மின்சாரம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்து. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில், திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் செந்தில்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர், தனது தேர்தல் பிரசாரத்தை திருவாலங்காடு அருகே வாக்குச்சாவடி எண்-1...
செங்கல்பட்டு அருகே வெளிமாநில மதுபாட்டில் கடத்தி வந்த 2 பேர் கைது
செங்கல்பட்டு: புதுச்சேரியில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளுக்கு காரில் வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக நேற்று மாலை செங்கல்பட்டு அருகே பாலூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலிறந்ததும் செங்கல்பட்டு அருகே மெய்யூர் சாலையில் நேற்றிரவு பாலூர் மதுவிலக்கு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து...
திருவள்ளூர் மாவட்ட மதசார்பற்ற கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து வரும் 11ம் தேதி ஆர்ப்பாட்டம்: திமுக செயலாளர்கள் கூட்டறிக்கை
திருவள்ளுர்: திருவள்ளூர் மத்திய, மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர்கள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், திருத்தணி எஸ்.சந்திரன் மற்றும் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ளது. சிறுபான்மையினர் வாக்குகள், பட்டியலின மக்களின் வாக்குகள் மற்றும் பாஜகவின் எதிர்ப்பு...
சமூக வலைதளங்களின் மூலம் நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு மிரட்டல்: தமிழக பெண் மீது கேரள போலீசில் புகார்
கொச்சி: பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் மீது கேரள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். பிரபல மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினரை குறிவைத்து, கடந்த சில காலமாக சமூக வலைதளங்களில் மர்ம நபர்களால் தொடர்ந்து அவதூறுகள்...
மின்சாரம் பாய்ந்து 2 ஊழியர்கள் பலி
கள்ளக்குறிச்சி: வாட்டர் சர்வீஸ் கடையில் மின்சாரம் பாய்ந்து 2 ஊழியர்கள் பலியானார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த கலையநல்லூர் சாலையில் சாஜன் என்பவர் வாட்டர் வாஷ் கடை நடத்தி வருகிறார். இங்கு தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்த அரவிந்த் (27) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஷாகில் (17) உள்ளிட்ட பலர் வேலை பார்த்து வந்துள்ளனர்....