அமெரிக்காவின் 25% வரி நாளை முதல் அமலாவதால் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி திடீர் முடிவு
மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு, தனது சமீபத்திய ஆய்வுக் கூட்டத்தில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.5% என்ற நிலையிலேயே எவ்வித மாற்றமின்றி வைத்திருக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து மூன்று முறை வட்டி விகிதத்தைக்...
சென்னையில் ஏஐ மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம்
சென்னை: சென்னையில் ஏஐ மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயண நேரத்தை மிச்சப்படுத்தவும், 165 முக்கிய சந்திப்புகளில் புதிய ஸ்மார்ட் ட்ராஃபிக் சிக்னல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்த புதிய தொழில்நுட்பம், வாகனங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து சிக்னல்களின் நேரத்தை தானாக மாற்றும். தற்போதைய சிக்னல்கள் 60-90 வினாடிகளுக்கு ஒருமுறை மாறுகின்றன....
80% வேலைகளை ‘ஏஐ’ விழுங்கும்; இந்திய தொழிலதிபர் அதிர்ச்சி கணிப்பு
புதுடெல்லி: இந்திய - அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபர் வினோத் கோஸ்லா, செரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் உடனான நிகழ்ச்சியில் பங்கேற்று, செயற்கை நுண்ணறிவு மற்றும் அதன் எதிர்காலம் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அடுத்த 5 ஆண்டுகளில் மனிதர்கள் செய்யும் மதிப்புமிக்க பணிகளில் சுமார் 80 சதவீதத்தை...
தமிழகத்தில் 5-7 மற்றும் 15-17 வயதிற்குட்பட்ட 15 லட்சம் பள்ளி மாணவர்களின் ஆதார் பயோ மெட்ரிக் புதுப்பிப்பு: அஞ்சல் துறையுடன் இணைந்து மேற்கொள்ள அனுமதி
சேலம்: தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் மாணவ, மாணவிகளின் நலனுக்காக 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும், இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவித் தொகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி மற்றும் ஊக்கத்தொகை அனைத்து மாணவர்களுக்கும் குறித்த நேரத்தில் முறையாக...
உடுமலை அருகே வெட்டிக் கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் உடல் தகனம்
திருப்பூர்: உடுமலை அருகே 30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் உடல் தகனம் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம் கொடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி ஆற்றிய சண்முகவேல் என்பவர் இன்று அதிகாலை வெட்டி கொல்லப்பட்டார். அவரது உடல் ஆனது திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து இறுதி அஞ்சலிக்காக அவரது...
கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு: 29ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்
சென்னை: கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பவதற்காக இந்தியக் குடியுரிமையுடைய...
பாகிஸ்தானுடன் நெருங்கும் அமெரிக்கா.. சர்வதேச அளவில் கவனம் பெறும் ட்ரம்ப்பின் காய் நகர்த்தல்!!
வாஷிங்டன்: பாகிஸ்தானுடன் நெருங்கிய நட்பை அமெரிக்கா வலுப்படுத்தி வருவது உலக அரசியலில் கவன ஈர்பதாக அமைந்துள்ளது. ட்ரம்ப் மீண்டும் அதிபரான பின்பு பாகிஸ்தானுடன் நெருக்கத்தை அதிகரித்து வருகிறார். பாகிஸ்தானுக்கு சர்வதேச அமைப்புகளின் நிதி உதவிகள் தடையின்றி கிடைப்பது பாகிஸ்தானின் எண்ணெய் வளத்தை வெளிக்கொண்டு வர உதவுவோம் என கூறியதை உள்ளிட்டவை இதற்கு காரணமாக கூறப்படுகின்றன. இதற்கெல்லாம்...
உங்களுக்கு உதவுவதற்காக இந்தியா அங்கு வரவில்லை: சச்சின் டெண்டுல்கர் சாடல்
மும்பை: உங்களுடைய பவுலர்கள், வீரர்கள் சென்று ஓய்வு பெறவேண்டும், அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும் என்பதற்காக நாங்கள் கைக்குலுக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எப்படி சரி? என 4வது டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ் உடன் ஜடேஜா கைக்குலுக்க மறுத்தது குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிக்கு இடையேயான 4வது டெஸ்ட்...
தந்தைக்கு எதிராக திரும்பிய மகன்; 5 கட்சி கூட்டணியில் தேஜ் போட்டி: பீகார் அரசியலில் பெரும் குழப்பம்
பாட்னா: தந்தையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தேஜ் பிரதாப் யாதவ், பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஐந்து கட்சிகளுடன் புதிய கூட்டணியை அமைத்து போட்டியிட உள்ளார். பீகார் மாநில முன்னாள் அமைச்சரான தேஜ் பிரதாப் யாதவை, அவரது தந்தையான ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடந்த மே 25ம் தேதி...