இதைவிட கூட்டம் அஜித்துக்கு வரும்: ராஜேந்திர பாலாஜி ‘பளீச்’
சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: விஜய் பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்றால் அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும். இல்லையென்றால், இந்த தேர்தலோடு விஜய்யை திமுக முடித்து விடும். விஜய்க்கு பக்குவப்பட்ட தொண்டர்கள் இதுவரை உருவாகவில்லை. விஜய் தனித்து நின்று ஜெயிப்போம் என்று கூறுவது இந்த காலத்தில் மட்டுமல்ல...
தேர்தல் பரீட்சையை எழுதிட்டு வரட்டும்...- உதயகுமார் ‘பளார்’
அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு தியாக வரலாறு உள்ளது. அதிமுகவிற்கு நிரந்தர வாக்கு வங்கி உள்ளது. விஜய் பரீட்சை எழுதாமல் பாஸாகி விடுவேன் என சொல்கிறார். விஜய் பரீட்சை எழுதட்டும். அவர் பாஸ் ஆவாரா, இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அரசியல்...
மக்களின் கருத்து கிடையாது: - எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகேயுள்ள சிலுவம்பாளையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளது குறித்து, என்னுடன் ஆலோசித்தார். வரும் 2026 தேர்தலில் திமுகவுக்கும், தமிழக வெற்றி கழகத்திற்கும் இடையே தான் போட்டி என தவெக தலைவர் விஜய் கூறியது,...
ஸ்கிரிப்ட் ரைட்டர் சரியில்லை: ‘பங்கம்’ பண்ண தமிழிசை
மதுரை விமான நிலையத்தில் பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அளித்த பேட்டி: பாஜ, அதிமுக கூட்டணி பலமாக உள்ளது. தம்பி விஜய் சமீப காலமாக பெரிய கூட்டம் கூட்டுகிறார். அவரிடம் ஒன்று கூற வேண்டும். அவருக்கு ஸ்கிரிப்ட் எழுதித்தருபவர் சரியாக எழுதிக்கொடுக்க வேண்டும். ஏனென்றால் தம்பி விஜய் ரயில்வே, நாகப்பட்டினம் மீனவர்கள்...
திமுகவை எதிர்க்கிறேன் என்பது ஏற்புடையதல்ல விஜய்யை போல ஜோசியம் சொல்ல முடியாது: நயினார் கலாய்
சேலத்தில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தம்பி விஜய், இப்போது தான் கட்சி ஆரம்பித்திருக்கிறார். கூட்டம் வருவதை வைத்து திமுகவுக்கும், எங்களுக்கும் தான் போட்டி என்று அவர் பேசுவதை ஏற்க முடியாது. தேர்தல் வரணும், ஒழுங்கான வேட்பாளர் போடணும், பொறுப்பாளர்கள் நியமனம் என்ற பல நிலைகளை அவர் கடக்க வேண்டும்,...
சினிமா கவர்ச்சியால் கூடுகிற கூட்டம் இது... ஆளுநர் ரவி, அண்ணாமலை போல விஜய் பேசுவதெல்லாம் பொய்: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு நாகை எம்எல்ஏ ஷாநவாஸ் பதிலடி
நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசியல் களத்தை நாகரீகமாகவும், தமிழ்நாடு மரபுக்கு ஏற்ற களமாகவும் மேம்படுத்த நினைக்கிறோம். ஆனால் சமீபகாலமாக அரசியல் களத்தை கீழிறக்கி, அவதூறாகவும், பொய்களாகவும், வன்மத்தாலும், மாற்ற பாஜ செயல்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல் அண்ணாமலை தோன்றுவதை பேசுவார், உண்மை, பொய்யை ஆராயாமல்...
யாரோ எழுதி கொடுப்பதை அப்படியே பார்த்து படிக்க இது சினிமா இல்ல... அரசியல்: பொய்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
திருச்சி: யாரோ எழுதி கொடுப்பதை அப்படியே பார்த்து படிக்க இது சினிமா ஸ்கிரிப்ட் இல்ல... இது அரசியல்... பிரசார கூட்டத்தில் பொய்களையும், அவதூறுகளையு பரப்பிய விஜய்க்கு ஆதாரத்துடன் பதிலை பதிவிட்டு விஜய்யை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய்,...
தைலாபுரத்தில் நாளை பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை: எம்எல்ஏ அருளுக்கு புதிய பதவி: வன்னியர் சங்க மாநில செயலாளர்கள் இருவர் நீக்கம்
திண்டிவனம்: திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ள நிலையில் நேற்று முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இதில் எம்எல்ஏ அருளுக்கு புதிய பதவி அளித்தும், வன்னியர் சங்க மாநில செயலாளர்கள் இருவரை நீக்கியும் உத்தரவிட்டுள்ளார். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு உச்சகட்டத்தை...
அதிமுக தேசிய தலைவர் அமித்ஷா தமிழக பொதுச்செயலாளர் இபிஎஸ்: விசிக ‘கிண்டல்’
நெல்லை: விடுதலைசிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு நெல்லையில் அளித்த பேட்டி: பாஜ தனது தேசியவாத அரசியலை முன்னிறுத்தி மாநில கட்சிகளை பலவீனப்படுத்துகிறது. வடமாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிமுகவை பாஜ பலவீனப்படுத்தி வருகிறது. ஒரு கட்சி நிர்வாகியை நீக்கினால் அந்த கட்சி பொதுச்செயலாளரை சந்திக்க வேண்டும். ஆனால் அதிமுகவில் செங்கோட்டையன் கட்சி பதவி பறிக்கப்பட்டதும்...