உரிம கட்டணம் குறித்து அவதூறு பிரசாரம் கிராமப்புற சிறு வணிகர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்: எடப்பாடிக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி
சென்னை: கிராமப்புற சிறு வணிகர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கிராமப்புறங்களில் சிறுதொழில் மற்றும் வணிகம் செய்ய உரிமக் கட்டணம் என்ற ஒரு சட்டத்தை தமிழ்நாடு அரசு ஏதோ புதிதாக கொண்டு வந்தது போல எடப்பாடி பழனிசாமி...
குஷ்புவுக்கு பதவி; மீண்டும் ஓரங்கட்டப்பட்ட விஜயதரணி; தமிழக பாஜ மாநில நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார் நயினார் நாகேந்திரன்
சென்னை: தமிழக பாஜ மாநில நிர்வாகிகள் பட்டியலை நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்டார். இதில், நடிகை குஷ்புவுக்கு மாநில துணை தலைவர் பதவி கிடைத்துள்ளது. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜவில் இணைந்த விஜயதரணி மீண்டும் ஓரங்கட்டப்பட்டார். கே.டி.ராகவனுக்கு மீண்டும் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக பாஜ தேசிய தலைமை தமிழக தலைவர்...
அதிமுக-பாஜ கூட்டணியில் இருந்து கழற்றிவிட்ட நிலையில் ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்குவாரா? இன்று அறிவிக்கிறார்
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில ஆண்டுகளாக பாஜவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். இதன்மூலம் பாஜ தயவில் தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்று திட்டமிட்டு வந்தார். ஆனால், அதிமுக - பாஜ கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடம் அளிக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி வந்தார்....
இந்திய கம்யூ. வலியுறுத்தல் ஆணவ படுகொலை தொடராமலிருக்க தனி சட்டம்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி இளைஞர் கவின் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்திருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இப்படுகொலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிப்பதோடு, சாதி - ஆணவ படுகொலையில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்க வேண்டும்...
அண்ணா வழியில் மக்களை சந்தியுங்கள்: கட்சியினருக்கு விஜய் வேண்டுகோள்
சென்னை: தவெக கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பாளர் கூட்டம் பனையூரில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் நேற்று நடந்தது. தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நேற்று விஜய் தொடங்கி வைத்தார். உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்த அவர் நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது: ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு சென்று...
கீழடி அகழாய்வு தமிழர்களின் பழமையான நாகரீகம் தமிழ்நாடு அரசு முயற்சிக்கு அதிமுக துணை நிற்கும்: எடப்பாடி பேட்டி
திருப்புவனம்: தமிழகத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்தார். நேற்று கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அங்கு அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழடி அகழாய்வு தமிழர்களின் பழமையான நாகரீகத்தை வெளிப்படுத்துகிறது. கிமு 6ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த மண் பாண்டங்கள், செம்பு, தங்க ஆபரணங்கள் மற்றும்...
தே.ஜ.கூட்டணியில் தான் அமமுக இருக்கிறது: அசிங்கப்பட்டாலும் வலிக்காமல் பேசும் டிடிவி.தினகரன்
திருச்சி: திருச்சி திருவானைக்காவலில் ரங்கம் சட்டமன்ற தொகுதி அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் மூன்றாவது, நான்காவது அணி அமைய வாய்ப்புள்ளதாக தான் கூறினேன். அமையும் என கூறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்த பின்பு...
80 = எண்பலது, வழக்கறிஞர் = வழக்கர் தமிழை வச்சு செய்யும் புஸ்ஸி ஆனந்த்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: தமிழ் மெல்ல மெல்ல சாகும் என தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசிய வீடியோவிற்கு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சென்னை பனையூரில் த.வெ.க. செயலியை விஜய் நேற்று அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் தவெக கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தமிழை தவறாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்,...
மாட்டுடன் பேசுவது ஏன்? சீமான் புதுவிளக்கம்
திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சக்தி நகரில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கள் விடுதலை மாநாடு நேற்று நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்பேசியதாவது: மாட்டோடு பேசுகிறேன் என்கின்றனர், அதற்கு அறிவு இருக்கிறது, அதனால் அதனுடன் பேசுகிறேன். என்னை எதிர்த்து போராடும் அளவிற்கு எல்லா கட்சிகளும் வந்துவிட்டது. நான்...