திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19%-ஆக அதிகரித்துள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (6.8.2025) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 2538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி உரையாற்றினார். மேலும் முதல்வர் ஆற்றிய உரையில்; "என்னுடைய உரையை தொடங்குவதற்கு முன்னால், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் மகிழ்ச்சியான ஒரு செய்தியை உங்களுக்குச்...
புதுக்கோட்டை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்தார்!!
சென்னை: புதுக்கோட்டை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்தார். மதவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் அதிமுக செயல்பட்டு வருகிறது என்றும், அதிமுக கட்சி போகிற போக்கே சரியில்லை என்றும் கார்த்திக் தொண்டைமான் தெரிவித்துள்ளார். ...
சொல்லிட்டாங்க...
* ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடத்தக் கோரியதன் மூலமாக தவறிழைத்துவிட்டோமா என்று எதிர்க்கட்சிகள் யோசிக்க வேண்டும். பிரதமர் மோடி. * உச்ச நீதிமன்றத்தில் மரியாதைக்குரிய நீதிபதிகளுக்கு உரிய மரியாதையுடன் கூறிக் கொள்கிறேன். உண்மையான இந்தியர் யார் என்பதை நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது. இது நீதிபதிகளின் எல்லைக்கு அப்பாற்பட்டது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி. ...
பூம்புகார் மகளிர் மாநாடு ராமதாஸ் அழைப்பு
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பூம்புகாரில் வரும் 10ம்தேதி நடைபெறவுள்ள வன்னியர் சங்கம் ஒருங்கிணைக்கும் மகளிர் மாநாட்டுக்கு, குடும்பம், குடும்பமாய் திரண்டு வந்து மாநாட்டை வெற்றிபெற வைக்குமாறு உங்களிடம் வேண்டுகிறேன். பெண்களுக்கு பெருமை சேர்க்கவும், பெண்மையை போற்றவும், பெண் கல்வியை வலியுறுத்தவும், இந்த மகளிர் மாநாடு அடையாள திருவிழாவாக போற்றப்பட வேண்டும்....
தமிழக வாக்காளர் பட்டியலில் வடமாநிலத்தவரை சேர்ப்பதா? பிரேமலதா கண்டனம்
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, திருத்தணி முருகன் கோயிலில் நேற்று தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் வாக்குரிமை பெறுவது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை, இருப்பினும் அவரவர் மாநிலங்களில் வாக்குரிமை பெற வேண்டும். தமிழ்நாட்டில் வேலை தேடி வரும் வடமாநில தொழிலாளர்களை, வாக்காளர் பட்டியல் சேர்ப்பது தவறான நடவடிக்கை. உடனடியாக...
அம்மா குடிநீர், அம்மா உணவகம் என பெயர் வைத்துவிட்டு நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்துக்கு எதிராக அதிமுக வழக்கு தொடர்வதா? அமைச்சர் கேள்வி
சென்னை: தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.62.60 லட்சம் செலவில் உட்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களை மருத்துவ பயனாளிகள், மருத்துவ மாணவர்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த கால ஆட்சியில் அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா தீவு பூங்கா என்று...
தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை ஒன்றிய அரசு முனைப்புடன் தொடர்ந்து செய்து வருகிறது: எல்.முருகன் அறிக்கை
சென்னை: தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை ஒன்றிய அரசு முனைப்புடன் தொடர்ந்து செய்து வருகிறது என்று எல்.முருகன் கூறியுள்ளார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி ரூ.32,000 கோடி மதிப்பில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு இருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். தென் தமிழ்நாட்டில்...
ஆணவ கொலைகளை தடுக்க கடுமையான சிறப்பு சட்டம்: வைகோ வலியுறுத்தல்
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: விருத்தாசலத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் ஜெயசூர்யாவின் மரணம் தொடர்பான வழக்கில் தற்போது ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி கூறியிருந்தார். அவர் கூறியுள்ளது போல, தமிழ்நாட்டில் ஆணவ கொலைகள் அதிகரித்து வருவது அதிர்ச்சி...
மதுரையில் வரும் 21ம் தேதி தவெக மாநில மாநாடு: விஜய் அறிவிப்பு
சென்னை: தவெக தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கை: மாற்றத்தை நோக்கிய தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றிநடை போட்டு வருவதை அறிவீர்கள். இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாகக் கழகத்தின் மாநில மாநாடு வரும் 25ம் தேதி மதுரையில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தேன். ஆனால்...